திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க!முதன்மை தொண்டர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தீவிரம்
- உறியடி செய்திகள்

- Dec 29, 2022
- 2 min read
Updated: Dec 29, 2022

மணவை.எம்.எஸ்.ராஜா.
திருச்சிக்கு இன்றுவருகைதரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் தீவிர ஏற்பாடு!
தீரர்கள் கோட்டம் திருச்சி என்பது.தி.மு.கழகத்தின் வரலாற்றில் மிகவும் பொருத்தமான சொல்லாடல் என்றே பார்க்க வேண்டியுள்ள து.
தி.மு.கழகத்தின் வளர்ச்சியிலும், ஆட்சி கட்டிலில் அமரச் செய்ததை தில்லும் திருச்சி ஒருமைக் கல் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்களும், விமர்சகளும்.
1956.ல் தி.மு.கழகம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், வாக்குப் பெட்டி வைத்து தொண்டர்களின் கருத்துக்களை உள்வாங்கி, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதுடன் முடிவெடுக்கப்பட்டதும். முத்தமிழறிஞர் கலைஞர் பேரறிஞர் அண்ணாவிடம் ரூ.11.லட்சம் நிதிதிரட்டி தந்து, மிஸ்டர் 11.லட்சம் என்ற பாராட்டுக்கும்பெருமைக்கும் வலுச்சேர்த்தது திருச்சியாகும்.
முத்தமிழறிஞர் கலைஞரால் திருச்சி அரசியலில் தி.மு.கழக கொடிகள் பராக்காத இடம் இல்லை என்கிற பெருமையும், நங்கவரம் மாபெரும் மக்கள் பேராட்டம் முத்தமிழறிஞர் கலைஞரால் நடத்தப்பட்டு மேலும் முக்கியத்துவம் பெருமையும் கொண்ட கோட்டையாக திகழ்ந்தது திருச்சி,

1975-76. காலகட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றியத்தினை திரும்பி பார்க்க வைத்த இந்தி ஆதிக்கத்தின் எதிர்ப்பு மாநாடு நடைபெற்ற இடம் திருச்சி.ரேஸ்கோர்ஸ் மைதானமாகும். 1977 டிசம்பரில் முடி எடுக்கப்பட்டு 1978, ஜன,26. ந் தேதிகுடியரசு தினத்தில். இந்தி ஆதிக்கதிணிப்பை எதிர்த்து,தி.மு.கழகத்தில் தமிழர்கள் கருப்பு பேட்ஜ். வீடுகளில். கருப்புக்கொடி ஏற்றி கருப்பு சட்டை அணிந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுபெறச் செய்து வெற்றிபெறச்செய்ததிலும், பேரறிஞர் அண்ணா, தந்தைபெரியார். முத்தமிழறிஞர் கலைஞரால், இந்தி ஆதிக்கத்திற்கு எதிர்பு தெரிவித்து.இந்தி மொழி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தையும், கல்லக்குடியில் நடைபெற்றபோராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவர் கலைஞர் தலைவைத்து படுத்து தமிழ்மொழிக்கான உணர்வுப்பூர்வமான போராட்டமும் நடைபெற்ற வரலாற்று பெருமையும்திருச்சிக் உண்டு என்கிறார்கள் திராவிட இயக்க ஆர்வலர்களும், ஆதரவாளர்களும்..
2004. ஐக்கிய முற்போக்கு கட்சி ஆட்சியை கைப்பற்றுவதற்கு, இந்தியாவிறகே முன்மாதிரியாக திருச்சி ஏர்போர்ட்டில், முத்தமிழறிஞர் கலைஞர். சோனியாகாந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்குபெற்று,நடைபெற்ற மாநாடு எழுச்சிமிகு தேர்தல் பிராச்சாரமாக அமைந்து. ஐக்கிய முன்னனி ஆட்சி அமைக்க அடித்தளமிட்டஇடம் திருச்சியாகும்.

இவற்றினை தொடர்ந்து, 2009, 2014, பிராட்டியூர் மாநாடு, 2021.ல் சிறுகமணியில், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், மாநாட்டு நாயகர் என்று முத்தமிழறிஞர் கலைஞர்.திமு.கழகத்தின் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் பாராட்டை நடைபெற்ற தற்போதய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் முழு முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற, தி.மு.கழக தேர்தல் தொடர்பான, 7.பிரகடன் களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த,விளக்க
மாநாடு போன்ற மாபெரும் பொதுக்கூட்டத்தின் பங்கும் முக்கியத்துவம் பெறுகிறது. என்கின்றனர்.தி.மு.கழகத்தினர்.



மொன்டிப்பட்டி டி.என்.பி.எல். யூனிட் 2-ல்.புதிய ஆலை அளவு தொடங்கும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகாரிகளுடன் ஆய்வு செய்த போது. எடுத்த படம்..
இப்படி தி.மு.கழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய அங்கம் வகைக்கும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருச்சிக்கு, பொங்கல் பரிசு, கரும்புடன் வழங்க உத்தரவிட்ட, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்த கொள்வதற்காக இன்று காலை தனி விமானத்தின் மூலம் திருச்சி வருகின்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்திலிருந்து, நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும், கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்க அனைத்து பகுதிகளிலும் தீவிர ஏற்பாடுகள், தி.மு.கழகத்தின் முதன்மைச் செயலாளர் சேலம் மண்டல பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், , திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், பழனியாண்டி, கதிரவன் செளந்தரபாண்டியன், கதிரவன்.ஸ்டாலின் குமார், அப்துல் சமது, மாநகர தி.மு.கழகச் செயலாளர் திருச்சி மேயர் மு.அன்பழன் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதிகள்,மாநில, மாவட்ட. ஒன்றிய நகர, பேரூர், வட்ட, கிளை. உள்ளிட்டஅனைத்து சார்பு அணியினரும், ஆதரவாளர்களும் தீவிரமாக செய்து வருகின்றார்கள்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் தீவிர பணிகளால் விழா நடைபெறும் பகுதி மட்டுமின்றி திருச்சி மாபெரும் விழாே கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.




Comments