முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! மேட்டூர் அணையில் அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு-அறிவுறுத்தல்!!
- உறியடி செய்திகள்

- Oct 21, 2022
- 1 min read

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மேட்டூர் அணையில் அமைச்சர் கே.என்.நேரு நேரில்கள ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் வழங்கினார்.....

அந்தமான் தீவு பகுதி, வங்ககடலில் உருவான புயலால் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கும், ஏரி குளங்களிலிருந்து உபரிநீரும் ஊருக்குள் நுழையும் நிகழ்வு ஏற்ப்பட்டடுள்ளது....
இதேபோல் கர்நாடாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்தவரும் தொடர்மழையால், கர்நாடக அணைகளிலிருந்தும் பல ஆயிரக்காண அடி வெள்ளநீர், தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது........

இந்நிலையில் கர்நாடாக பகுதியிலிருந்து வரும்வெள்ளநீர் அதிகரிக்க தொடங்கியதால், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தி.மு.கழக முதன்மை செயலாளர், சேலம் மண்டல பொறுப்பாளர். தமிழ்நாடு நகராட்சி - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு நேற்று மேட்டூர் அணையை அதிகாரிகளுடன் நேரில்கள ஆய்வு செய்தார்.

அப்போது அணையின் மதகுகள். மதகு திறக்கப்படும் இயந்திரங்கள், அணையிலிருந்து வெளியோறும் நீர்வழிப்பாதைகள். அணையின் தன்மைகள் குறித்து கண்டறிந்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.
நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாச்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.....
மணவை எம்.எஸ்.ராஜா.....




Comments