முதல்வர் பரிந்துரை!அமைச்சரானார். டி.ஆர்.பி.ராஜா! மே.11.ந்தேதிபதவியேற்பு! கடந்துவந்த பாதை....!
- உறியடி செய்திகள்

- May 9, 2023
- 1 min read
Updated: May 10, 2023

தமிழக அமைச்சரவையில் மாற்றம்... டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார்.!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.....
திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த மே 8 ஆம் தேதி அடியெடுத்து வைத்தது. இந்த இரண்டாண்டுகளில், தமிழக அமைச்சரவை இரண்டு முறை மாற்றப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு வழங்கப்பட்டது
மேலும் கடந்த டிசம்பர் மாதம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைப்படி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற தி.மு.கழகக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலூவின் மகனாவார்!
டி.ஆர்.பாலூ தி.மு.கழகத்தின். முக்கிய நிர்வாகிகளுள் ஒருவராக, முத்தமிழறிஞர் கலைஞரின் மிகுந்த நம்பத்தன்மை தொடர்ந்து தக்கவைத்துகொண்டவரும், தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.கழகத்தின் பொருளாளராக பொருப்பு வகிக்கும் முன்னால் ஒன்றிய அரசின் மத்திய அமைச்சருமாவார் என்பது குறிப்பிடதக்கது!

திமுக ஆட்சி இரண்டாண்டை நிறைவு செய்துள்ள
இந்நிலையில், டி.ஆர்.பி.ராஜா இப்போது அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்படவுள்ளதுறை விவரம் வெளியாகவில்லை. அவரது இலாகா விவரங்கள் பிறகு வெளியாகும் எனக் கூறப்படுகிறது
டி.ஆர்.பி ராஜா. 1976-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் தளிக்கோட்டையில் பிறந்தார். உளவியல் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்ற இவர் சென்னைபல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு தத்துவத்துறையில் வழிகாட்டுதல் உளவியலும் மேலாண்மையும் என்ற தலைப்பை எடுத்து முடித்துள்ளார்.
2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் மன்னார்குடி தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். திமுக அயலக வாழ் தமிழர்கள் நல அணி செயலாளராக பணியாற்றியவர், அதன் பின்,ஐடி விங் மாநிலச் செயலாளராகவும் டிஆர்பி ராஜா பொறுப்பு வகித்து வருகிறார்.
தற்போது தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி ராஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜாவை தமிழக அமைச்சரவையில் சேர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பரிந்துரைக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, டி.ஆர்.பி.ராஜாவின் பதவியேற்பு விழா வரும் 11-ம் தேதி காலை 10 மணியளவில் ராஜ் பவனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையிலுள்ள தமிழக முதல்வர் முகாம் அலுவலகத்தில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார்.




Comments