குழந்தைக்கு டார்ச்சர்! பா.ஜ.க. நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை! வெளியான பரபரப்பு தகவல்கள்!
- உறியடி செய்திகள்

- Jun 23, 2023
- 1 min read

பத்திரிக்கையாளர் ராஜா....
மழலையர் பள்ளிபாஜக பெண் நிர்வாகி அதிரடியாக கைது!
தங்களுடைய மழலையர் பள்ளியில் ஒரு குழந்தையின் கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதாக பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ள மீனாட்சி என்பவர் போலீசாரால் கைது !
.
மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கல்விஉலகத்தை முதல்முதலாக அங்கு தான் பார்க்கின்றார்கள். அங்கு அவர்கள் பார்க்கும் உலகம் இனிமையானதாக இருக்க வேண்டும். வண்ணங்கள் முதல் எழுத்துக்கள் வரை மழலையர் பள்ளியில் தான் குழந்தைகள் முதல்முதலாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் கல்வி அடிப்படைக்கு வலுப்பெறச் செய்யுமிடமாக இருக்கும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!
அப்படிப்பட்ட மழலையர் பள்ளிகள் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையிலும் இனிமையாகவும் இருக்கும். குழந்தைகள் எவ்வளவு குறும்பு செய்தாலும், எந்த காரணம் கொண்டும் அடிக்கவே கூடாது. குழந்தைகளை அடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என்கிற அரசு விதிகளும் உள்ளது!
. மழலையர் பள்ளிகள் இயக்குவதற்கும் விதிமுறைகள் கடுமையாக உள்ளன. எளிதாக ஆரம்பித்துவிடவும் முடியாது.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கத்தில் ஒரு மழலையர் பள்ளியில் குழந்தை கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து. பாஜக நிர்வாகி மீனாட்சி என்பவரை போலீசார் புகாரின் பேரில் கைது செய்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
சென்னை வில்லிவாக்கம்,பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராக உள்ளவர் மீனாட்சி. இவர் குழந்தைகளுக்கென தனியாக ஒரு மழலையர் பள்ளியை நடத்தி வருகிறார்.
மீனாட்சி நடத்தி வரும் மழலையர் பள்ளியில், ராஜாஜி நகரை சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தை படித்து வந்தாக கூறப்படுகின்றது!சிறுவனை கை, கால்களை கட்டிப் போட்டு அடிப்பதும், துன்புறுத்துவதும், தேவை இல்லாமல் சிறுவனை துன்புறுத்தியாக புகார் எழுந்தது,!
கடந்த 7 மாதங்களாக மழலையர் பள்ளியில் சிறுவன் படித்து வருகிறான், இந்நிலையில் சேர்ந்ததில் இருந்தே சிறுவன் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாக சக ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு கூறியுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது!
இதையடுத்து தனது குழந்தை துன்புறுத்தப்பட்டது குறித்து மழலையர் பள்ளி நிர்வாகிமீனாட்சியிடம் பெற்றோர் கேட்டதாகவும்,அதற்கு அவர் மிரட்டல்கள் விடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.!
இதையடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் சரண்யா புகார் அளித்தின்பள்ளிக்கு சென்று போலீசார் விசாரணை செய்ததில், பள்ளி நிர்வாகி மீனாட்சி சிறுவனை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளதாக கருதியதையடுத்து, மழலையர் பள்ளியின் நிர்வாகி,பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மீனாட்சி கைது செய்யப்பட்டார். மீனாட்சி மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!




Comments