காலநிலை - பசுமை தமிழகம்- சதுப்புநில இயக்கம்! தமிழக அரசுக்கு பாராட்டு!! பேரா.ஜவாஹிருல்லா அறிக்கை!!!
- உறியடி செய்திகள்

- Oct 24, 2022
- 1 min read

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது....
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காகத் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் சதுப்பு நிலை இயக்கம் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக கால நிலை மாற்றத்திற்கான அமைச்சரவையை ஏற்படுத்தியதும் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் தான்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதுவும் இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சியாகும்.
தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் பல்வேறு முக்கிய துறைகளின் அனுபவமிக்க மூத்த அரசு செயலாளர்கள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கால நிலை மாற்றம் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ சுந்தர்ராஜன் அவர்களும் இக்குழுவில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.

இயற்கை பேரிடர் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகளால் விவசாயம் மற்றும் மருத்துவத் துறைகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் போன்றவற்றைக் கலைவதற்கு இந்த குழு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப இந்த குழுவின் நிர்வாகம் தமது குறிக்கோள்களை ஏற்றுவதற்கான செயல்முறைகளைத் தனக்குத்தானே வகுத்துக் கொள்ளும் என முழு சுதந்திரத்தை வழங்கி இருப்பதன் வாயிலாக தமிழகம் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக திகழும் என்பது திண்ணம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறாக அவர் கூறியுள்ளார்.




Comments