top of page
Search

முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கல்! கோவை டி.ஐ.ஜி. விஜயக்குமார் தற்கொலையா?ஏன்? தீவிரமாகுது விசாரணை!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 7, 2023
  • 2 min read
ree



கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!


தி.மு.க முகத்தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கல்!


கோவை மாநகர் பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை அங்கு பணியிலிருந்த விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.!


தேனியை பூர்விகமாக கொண்ட விஜயகுமார் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். அந்த பணியிலிருந்த போதே ஐ.பி.எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார்.!

ree

நேற்றைய தினம் இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார்.

கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.!

கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார். பல்வேறு வழக்குகளில் விரைந்து முடிக்கும் வகையில் செயல்பட்டார். என்பது குறிப்பிடதக்கது!


இந்தநிலையில் நேற்று இரவு கோவை ஆணையர் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயக்குமார், இதனையடுத்து கோவை பந்தய சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்திற்கு வந்து தங்கியுள்ளார். தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் நடைபயற்சி சென்றவர், தனது பாதுகாவலராக இருந்த ரவி என்பவருடைய துப்பாக்கியை வாங்கி கொண்டு தனது அறையை பூட்டிக்கொண்டுள்ளார்.அப்போது திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது விஜயக்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். !


இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது உடல் கோவை மருத்துவமனையில் வைக்கப்பட்டு. பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உடல் விஜயகுமாரின் சொந்த மாவட்டமான தேனிக்கு கொண்டு செல்லப் பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் டிஐஜி விஜயக்குமார் கடந்த சில வருடங்களாக தூக்கம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.பணி அழுத்தமாக தற்கொலையா? அல்லது குடும்ப பிரச்சனையா.? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உண்மை காரணங்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ree

தகவல் அறிந்த தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு செய்திக்குறிப்பில் காவல்துறையில் பணி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரியை இழந்தது பேரிழப்பாகும். என்று இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.!


சம்பவம் குறித்து ஐ.ஜி.சுதாகர் கூறுகையில், விஐய குமாருக்கு பணிச்சுமை இருந்ததாக தெரியவில்லை. மற்ற படி குடும்ப பிரச்சனைகளா என்று தீவிரமாகவிசாரிக்கப்பட்டு, வருகிறது.

என்று கூறினார்.!


விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page