முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா. அமைச்சர் கே.என்.நேரு தொடர் ஆய்வு! விழா கோலமாகும் திருச்சி!!
- உறியடி செய்திகள்

- Dec 26, 2022
- 2 min read


மணவை, எம்.எஸ்.ராஜா.
திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தருவதையெட்டி விழாக்கோலமாகிறது திருச்சி. அமைச்சர் கே.என்.நேரு இரவு பகல் பாராது தொடர் ஆய்வு!
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச 29..வியாழக்கிழமை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்ள வருகை தருகிறார். விழாவில் கலந்துகொண்டு முடிவுற்ற பல நலத்திட்டப் பணிகளை மக்களுக்கு தொடங்கிவைத்து. மேலும் பல்வேறு புதிய நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. பல ஆயிரக்கணக்காண மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கிட உள்ளார்.


தொடர்ந்து மணப்பாறையை அடுத்தமொன்டிப்பட்டியில் செயல்படும் டி.என்.பி.எல்.யூனிட் 2.ல்.புதிய அலகு கிணையும் தொடங்கிவைக்கிறார். இதனை தொடர்ந்து, திருச்சி அருகேயுள்ள சன்னாசிப்பட்டியில் நடைபெறுகிற மக்களை தேடி மருத்துவ திட்ட முகாமில் கலந்துகொண்டு, ஒரு கோடியாவது பயனாளிக்கு, அவரின் வீட்டுக்கு நேரில் சென்று மருந்து பெட்டகத்தை வழங்கிடவும் உள்ளார். தொடர்ந்து அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் அரசு நிகழ்ச்சிக்காக. அண்ணா விளையாட்டு அரங்கம் இரவு,பகலாக தயாராகும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இப்பணிகளை தொடங்கிய, கடந்த 10. க்கும் மேற்பட்ட தினங்களுக்கு மேலாக, தி.மு.கழக முதன்மைச்செயலாளர் சேலம் மண்டல பொருப்பாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தினம்தோறும், பகல். இரவு பாராது நேரடியாக கள ப் பணிகளைஆய்வு செய்து, அரங்கில் அமைக்கப்படும். விழா மேடை, பந்தல். அமைக்கும் பணிகளையும், மேலும் விழாவுக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், விழாபாதுகாப்பு தொடர்பானபல்வேறு பணிகள் குறித்தும், பிற இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள இடங்களில் நடைபெற்று வரும் விழா ஏற்பாட்டு பணிகள் குறித்து, பணிகளில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அரசு துறைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களை உற்சாகபடுத்தி பணிகளை துரிதமாக முடிக்கவும், முடுக்கிவிட்டும் வருகிறார்.


முன்னதாக கடந்த டிச 17ம் ந் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுகளுக்கு, செய்யப்படவுள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதாரப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நீண்ட ஆலோசனைகள் - அறிவுறுத்தல்களையும் வழங்கி பேசினார்.
இதில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்

தொடர்ந்து தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் வருகையின்போது அவருக்கு உற்சாக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் தீவிர ஏற்பாடுகள் ஏற்பாடுகள் நடைபெற்று வருவகிறது. இது தொடர்பாக திருச்சி மண்டலத்திறகுட்பபட்ட பகுதிகளில் நடைபெறும், தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம் - அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டங்களிலும், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பணிகளை தீவிரபடுத்தி வருவதாகவும் தி.மு.கழக வட்டாரத்தில் உற்சாகத்துடன் கூறப்படுகின்றது.
அமைச்சர் கே.என்.நேருவின் தொடர் ஆய்வுப்பணிகளில், சட்டமன்ற உறுப்பினர்கள். முசிறி, வெட்டி தியாகராஜன், லால்குடி, செளந்தரபாண்டியன், ஸ்ரீரங்கம். பழனியாண்டி, மணச்சநல்லூர். கதிரவன் துறையூர், ஸ்டாலின் குமார்,மாநகர தி.மு.கழகச் செயலாளர், மேயர், மு.அன்பழகன்.மாவட்டத்துணைச்செயலாளர் முத்துச் செல்வம், கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரி கள். தி.மு.கழக முக்கிய பிரமுகர்கள் உடன் சென்று வருகின்றார்கள்.




Comments