முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை! வளர்ச்சியில் திருச்சி!! அணிதிரள்வோம் அமைச்சர் கே.என்.நேரு அழைப்பு!!
- உறியடி செய்திகள்

- Dec 29, 2022
- 2 min read

மணவை.எம்.எஸ்.ராஜா.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை, வளர்ச்சியில் திருச்சி! முதல்வரைவரவேற்க திராவிட இன எழுச்சியுடன் வரவேற்கஅணிதிரள்வோம். அமைச்சர் கே.என்.நேரு அனைத்துத்தரப்பினருக்கும் அழைப்பு!
தி.மு.கழக தலைவர், திராவிட இனத்தின், உலகத் தமிழர்களின் இணையற்ற தலைவர்தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுதிருச்சி வருகிறார்.
மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்,வருகை தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர். தமிழகநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:




முதல்வர் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கிவைக்கும் திருச்சி அண்ணா ஸ்டோடியத்தில் அமைச்சர் கே.என்.நேரு சுழன்று சுழன்று அதிகாரிகளுடன் ஆய்வு-கள ஆய்வின்போது எடுத்த படம்...
கழக மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும் முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
காலை 08.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தோழமை கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சார்பில் வரலாற்று,சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறும் மிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு,
ரூ.655 கோடி மதிப்பீட்டிலான 5,639 புதிய திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்கள்.
ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5951 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.




குளித்தலை பகுதியிலிருந்துமணப்பாறை க்கும். வழியேர 50.கிராமங்கள் பயன்பெற கூட்டுக்குடிநீர் திட்டத்தை,புனரமைக்கும்பணியில் அமைச்சர் கே.என்.நேரு கள ஆய்வு மேற்க்கொண்ட போது எடுத்த படம்.....
ரூ.79 கோடி மதிப்பீட்டிலான 22,716 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்குகிறார்கள்.
மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கி விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள்....
அதன்பின்னர், சட்டமாமேதைஅண்ணல் அம்பேத்கர் சிலையிலிருந்து மொண்டிப்பட்டி வரை வழிநெடுகிலும் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றிபெற மாவட்டத்தின் பல்வேறு அணிகளையும் சேர்ந்த கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தோழர்கள், வேளாண் பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதன்பின்னர், முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின். பகல் 11.30 மணியளவில், மணப்பாறை ஒன்றியம் மொண்டிப்பட்டியில் ரூ.1350 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு காகித ஆலையின் இரண்டாம் அலகையும் மற்றும் சிப்காட் தொழிற் பூங்காவையும் திறந்து வைக்கிறார்....

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள் மாலை 3 மணியளவில், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டியில் நடைபெறும்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இயன்முறை சிகிச்சை பெற்று வரும் பயனாளியின் இல்லம் சென்று நலம் விசாரிக்கிறார்கள். பின்னர் இத்திட்டத்தின் மகத்தான சாதனை நிகழ்வாக 1 கோடியே 1 வது பயனாளிக்கு மருந்து பெட்டகமும் வழங்குகிறார்.....

இவ்வாறு திருச்சி மாவட்டத்தில் நம் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பான முறையில் வெற்றிபெறும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட என்றும் உங்களின் ஒருவனாக உங்களோடு பணியாற்றும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Comments