top of page
Search

டெல்டாவில்நிலக்கரிசுரங்கம்! பின்வாங்கியது ஒன்றிய அரசு! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி....

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 8, 2023
  • 2 min read
ree

ஆசிரியர்,மணவை எம்.எஸ்.ராஜா.


தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதிலிருந்து தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் கொடுத்த கடும் அழுத்தத்தால்தான் ஒன்றிய அரசு பின்வாங்கியது! நமது முதல்வர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயலாற்றி வருகின்றார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்...


நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் காவிரி டெல்டாவிற்கு ஒன்றிய பாஜக அரசின் வடிவில் வந்திருக்கிறது புதிய ஆபத்து என நினைக்கத்தோன்றும் அளவிற்கு

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் வீராணம், பாளையங்கோட்டை, சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது......

ree

இது குறித்து சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘எந்த சூழலிலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது’ நானும் டெல்டாக்காரன்தான், டெல்டா பகுதிகளையும், விவசாயத்தையும் வேளாண் பெருமக்களையும் நிச்சயமாக இந்த தி.மு.கழக அரசு பாதுகாக்கும், விவசாயம், விவசாயிகள், வேளாண் உற்பத்தி போன்றவை பாதிக்கும்படியாக,அங்கு எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்க முடியாது என்று கூறியதுடன், 24. மணி நேரத்திற்குள், டெல்லியில் தி.மு.கழக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி மிகவும் உறுதியுடன் அழுத்தம் கொடுத்தார் திட்டவட்டமாக டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட பட்டவேளாண் பகுதியாகத்தான் தொடரும் என்றும் கூறினார்......

ree

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்க பணிகளை மேற்கொள்ள நம் முதல்வர்அனுமதிக்க மாட்டார்’ என்றும் உறுதியாக கூறியிருந்தார்.....


இந்திலையில் தமிழ்நாட்டில்

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோசி தற் போது அறிவித்துள்ளார்....


இதுகுறித்து, தருமபுரி மண்டல தி.மு.கழக பொருப்பாளர், கடலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்றுசெய்தியாளர்களிடம் கூறியபோது.....


வேளாண் பெருங்குடி மக்களுடைய நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது தி.மு.கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல் முதல் அமைச்சர் தளபதியாரின் தலைமையிலான அரசு.

ree

வேளாண் - உழவர் நலன் மீது உண்மையான அக்கரை கொண்டு தமிழ்நாட்டு அரசில் தனி பட்ஜெட் கொண்டுவந்துடன், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து,இதுவரை இல்லாத அளவிற்கு சாகுபடி பரப்பு அதிகரிப்பு, கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறுவை சாகுபடி உயர்வு, குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறப்பு, உயிர் வேளாண்மைத் திட்டம் என திமுக அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் வேளாண் தொழில் செழித்து வளர்கிறது.......

வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வும் உயர்கிறது.........


வேளாண் பெருங்குடி மக்களின் உயர்வே முதலமைச்சர் தளபதியாரின் ஒரே குறிக்கோள். எனவே வேளாண் பெருங்குடி மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை!

மேலும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காத்திடும்வகையில், இதற்கென்று தனிக்குழுவையும் ஏற்படுத்தி தொடர்ந்து டெல்டா பகுதி விவசாயத்தையும், வேளாண் வளர்ச்சியையும், உழவர் நலனையும் காத்தும் வருகின்றார் நமது முதல்வர்.

ree

தமிழ்நாட்டில் அனைத்துத்தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, தமிழக மக்களை காக்கும் பணியிலும், மக்கள் நலன் காப்பதிலும் எவ்விதமான சமரசத்திற்க்கும் இடமளிக்காமல் மக்கள் நலப் பணிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி, உண்மையான மக்கள் நலப் பணிகளை, நாட்டின் வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறார்.....


டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தில் ஒன்றிய அரசு பின்வாங்கியது முழுக்க முழுக்க, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் விடாமுயற்சியுடன் கொடுத்தகடுமையான அழுத்தமே காரணம் ஆகும்.

ree

மக்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்துகொண்டு செயல்படுவதுடன்

வேளாண் பெருங்குடி மக்களின் உயர்வே கழகத் தலைவர், தமிழ்நாட்டின்.முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினின் ஒரே குறிக்கோளாக. பணியாற்றி வருகின்றார், எனவே வேளாண் பெருங்குடி மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை....


இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.



 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page