top of page
Search

கோவை கார் வெடிப்பு சம்பவம்!சனாதானம் - சர்ச்சை கருத்துக்கள் !! தமிழ்நாட்டின்நகர்வுகள் எதை நோக்கி!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 30, 2022
  • 2 min read

Updated: Oct 30, 2022

ree

கோவை கார் வெடிப்பு சம்பவம்......

விசாரணையை குழப்பும் சர்ச்சை கருத்துக்கள் வேடிக்கை பார்க்கிறதா நீதிமன்றங்கள்!


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கார் வெடிப்பு சம்பவம் பற்றி,கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது. கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்டோபர் 18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. 18ம் தேதி தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

மேலும், என்னிடம் உள்ள ஆதாரங்களை என்.ஐ.ஏவிடம் கொடுக்க தயார். மாநில அரசு சம்மன் அனுப்பினால் ஆதாரங்களை கொடுக்கிறேன். ஆதாரங்களை கொடுத்தால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது.

என்றும், நாள்தோறும் மக்களையும் மாநில அரசையும் பீதியில் ஆழ்த்தும் வகையிலும், அரசியல் உள்நோக்கத்துடன் தகவல்களையும் கூறிவருவதாக கூறப்படுகின்றது..........


.

ree

இதுகுறித்து தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அனுப்பியதாக அண்ணாமலை கூறுவது தவறு. எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்.ஐ.ஏ.விசாரிக்க பரிந்துரை செய்தார்...........


இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துத்துக்கூட வழக்குகள் என்- ஐ.ஏ.-விடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்குகளில், ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என் ஐ.ஏ.-விடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக அண்ணாமலை புகார் கூறுகிறார்; இது அபத்தமானது.


மாநில அரசாங்கங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில், குண்டு வெடிப்பு நடக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். ஆனால் கோவை மாநகரைப் பற்றி எந்த தகவலும் சுற்றறிக்கையில் இல்லை. இது போன்ற உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்ததுள்ளதாக தெரிகிறது.....

ree

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில். வழங்கப்படும்.

காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும். உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

என்றும் மீண்டும் தமிழ்நாடு காவல்துறையினரை சீண்டியுள்ளார்......


இது குறித்து, முன்னால், ஐ.ஏ.எஸ் அதிகாரி, பாலசந்திரன் கூறுகையில்,

கோவை கார்சிலிண்டர் வெடிப்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை பாதுகாத்துள்ளது காவல்துறை. ஆனால், பாஜக அண்ணாமலையின் நடவடிக்கைகள் காவல்துறையின் விசாரணையில் இடையூறு ஏற்படுத்தும் அரசியல்உள்நோக்கம் கொண்டதாக உள்ளது"

என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ree

அதேசமயம், சமூக வலைதளங்களில்,

நீதிமன்றங்கள் தானாக முன்வந்து பல்வேறு காலகட்டங்களில்,வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறது. ஆனால்

கோவை கார்வெடிப்பு சம்பவம் பற்றிய

விசாரணை நடக்கும் போதே

அண்ணாமலை அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று பகிரங்கமாக

காவல்துறை தரப்பில சொல்லப்படுகிறது. அதேசமயம்ஆளுநர் அரசியல் சட்டத்தை புறக்கணித்து,

சனாதனத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்..என்று கம்யூனிஸ்ட், தி.க.ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் எதிர்வினையாற்றி வருகின்றன.....


இந்தகைய அசாதார்ன சூழலில்

தமிழ்நாட்டு மக்களின், பாதுகாப்பு, சமூகநல்லிணக்கம், ஒற்றுமை போன்றவற்றை கருத்தில் கொண்டு,நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய,நினைக்கவோ

விரும்பவோ

முயற்சி செய்யாதது வியப்பூட்டுவதாகவே உள்ளது என்கின்றார்கள் அரசியல் பார்வையாளர்களும், விவரமறிந்தவர்களும்......

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page