கோவை:வால்பாறையில் கனமழை! கூலாங்கல்லாற்றில் வெள்ளம்! பொருப்பு அமைச்சர் முத்துசாமி. அதிரடி ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Jul 6, 2023
- 2 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா
கோவை. மாவட்ட பொருப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமைச்சர் முத்துசாமி அதிரடி ஆய்வு! துரித நடவடிக்கை!
இன்று கோயம்புத்தூர் மாவட்டப் பொருப்பு அமைச்சராக தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசால் அறிவுறுத்தலின்படி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழ்நாடு வீட்டுவசதி, நகர்புற மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவிக்கப்பட்டார்.!

அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே! தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் சு.முத்துசாமி அதிரடியாக கோவை, மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கூலாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் நிலையில் உள்ளதாக தகவல் அறிந்து. துரிதமாக நேரில் சென்றார். !
அங்கு தயார்நிலையிலிருந்த மீட்பு குழுவினருடன். ஆலோசனை செய்த அமைச்சர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய். காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து மேலும் விரிவாகவும் ஆலோசனை நடத்தினார்.!

அதிமுக, ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராகயிருந்த செந்தில்பாலாஜி மீதான குற்றசாட்டு அடிப்படையில் அமலாக்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கையால், செந்தில்பாலாஜியின் மீதான தொடர் டார்ச்சர்களால், மருத்துவமனையில் அனுமதி பட்டு, ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த மின்சாரத்துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வசமும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துரை, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வசமும் ஒப்படைக்கப்பட்டு செந்தில் பாலாஜி, துறையில்லாத அமைச்சராக செயல்பாடுவார் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது!

.
இதில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செந்தில்பாலாஜி வசமிருக்கும்போது கடும் விமர்சனத்திற்கும் பல்வேறு குற்றசாட்டுக்களுக்கும் உட்பட்ட துறையாகவேயிருந்து வந்தது!
எல்லாவற்றிக்கும் மேலாக டாஸ்மாக்கின் பணியாளர்கள் பலரும் நேரடி குற்றச்சாட்டுகளை கூறிவந்தது சர்ச்சைகளை மேலும் அதிகரிக்கும் வகையில், அடுத்தக்கட்டத்திற்கு இதன் விமர்சன குற்றசாட்டுகளை எடுத்துச் சென்றது என்கிறனர் அரசியல் பார்வையாளர்களும், விமர்சர்களும்......!
பொதுவாக அமைச்சர் சு.முத்துசாமி தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள், கட்சி தொண்டர்களில் தொடங்கி, அரசு அதிகாரிகள், மாற்று கட்சியின் ஆதரவாளர்களைக் கூட தன்னை மிக எளிமையாக சந்திக்கக்கூடிய வகையில்தான் அவரின் செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் மிக, மிக எளிமையான முறையில் இருந்ததால், தான் அவரின் பேச்சுக்கு என்று ஒரு தனி மரியாதை மக்கள் மத்தியில் உள்ளதாக
கட்சியிலும், அரசியல் வட்டாரத்திலும் விபரமறிந்த பலர்!

இந்நிலையில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையையும் கூடுதல் பொருப்பாக பெற்ற, ஈரோடு கிழக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை,அமைச்சர் சு.முத்துசாமி இத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை முன் எடுக்க தொடங்கியிருப்பது, அரசு மதுபான கடை பணியாளர்கள், உள்ளிட்ட பலரின் கவனத்தை ஈர்த்ததுடன், புதியதொரு நம்பகத்தன்மையும் ஏற்படுத்தியுள்ளதாகவே சம்மந்தபட்ட தொடர்புடைய அனைத்துத்தரப்பிலும் கருதப்பட்டது!
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி சார்ந்த வால்பாறை சின்னக்கல்லார் எஸ்டேட் பெரிய கல்லார் எஸ்டேட் அக்கா மலை எஸ்டேட் உள்ளிட்ட. அனைத்து பகுதிகளிலும் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது
இதனால் திடீரென்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வால்பாறை அருகே உள்ள சோலையார் ஆணை பகுதியில் இன்று ஒரே நாள் 10 அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. வால்பாறையில் அதிக அளவு மழை பெய்தால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு பரிந்துரை செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கல்லூரி மாணவர்கள் பள்ளி குழந்தைகள் கோரிக்கை வைத்தார்கள்.!
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிதீவிரமடைந்து உள்ளதால். விடிய விடிய கனமழை பெய்து வருகிறது மற்றும் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் வால்பாறையின் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது!
. மழை நீரினால் சேதம் அடையும் பகுதிகளுக்கு மீட்பு குழு வந்துள்ளார்கள். தற்பொழுது பனிப்பொழிவும் அதிகரித்து உள்ள சூழ்நிலையில்
சாலைகள் அனைத்தும் பனி பொழிவால் மூடிய நிலையில் உள்ளன அருகில் இருக்கும் பொருட்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிறைந்து காணப்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.!
இன்று கோயம்புத்தூர் மாவட்டப் பொருப்பு அமைச்சராக தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு அறிவித்தது.
பொருப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில்,
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் சு.முத்துசாமி அதிரடியாக கோவை, மாவட்டம் வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கூலாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் நிலையில் உள்ளதாக தகவல் அறிந்து. துரிதமாக நேரில் சென்றார். அங்கு தயார்நிலையிலிருந்த மீட்பு குழுவினருடன். ஆலோசனை செய்த அமைச்சர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய். காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து மேலும் விரிவாகவும் ஆலோசனை நடத்தினார்.!
மேலும் பே ரிடர் காலப் பணிகளில் எவ்வாறு செயல்படுவது, வெள்ளத்தால் பாதிக்கபட்டால் எங்கு தங்கவைப்பது என்றும் ஆலோசனைக்குப் பின்னர் அறிவுரை ஆலோசனை கூறிய அமைச்சர். அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதி லும் தனி கவனம் செலுத்தி பணியாற்றவும் வலியுறுத்தினார்.!
மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த
அதிகாரிகள் மற்றும் கழக, மாநில, மாவட்ட மாநகர, பகுதி கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட பலர் உடன் சென்றனர்...!




Comments