வாருங்கள், தலைவரின் வழியில்,உடன்பிறப்பாய் இணைவோம். அமைச்சர் சு.முத்துச்சாமி அழைப்பு
- உறியடி செய்திகள்

- Apr 2, 2023
- 1 min read

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதியாரின் தலைமையில் உடன்பிறப்பாய் இணைந்திடுவோம் அனைவரும் வாருங்கள் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி அழைப்புவிடுத்துள்ளார்.
முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு
கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின்
70 ஆம் ஆண்டின் பிறந்தநாளில் பவள விழாவை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவங்களை
ஈரோடு மாவட்ட தி.மு. கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி,மொடக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட முழுவதும் நடைபெ ற்ற நிகழ்ச்சிகளில்வழங்கி பேசியதாவது.....

.
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க உடன்பிறப்பாய் இணைவோம் என்கிற முன்னெடுப்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி துவக்கம் நமது ஈரோடு மாவட்டத்தில் தொகுதி வாரியாக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது அதுசமயம் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள்
ஒன்றிய - மாநகர - பேரூர் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் பங்கு கொண்டு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடுமாறு ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழுக வீட்டுவசதித் துறைஅமைச்சர் சு.முத்துச்சாமி வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்..


முன்னதாக,சமூகநீதி மக்கள் கட்சியின் சமூகநீதி மாநாடு, மாவீரன் பொல்லான்மணிமண்டபத்திற்கு 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்தமைக்கும் ஈரோட்டில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி அளித்து திறந்துவைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினார். உடன் சமூகநீதிமக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன், ஜக்கையன், உட்பட தோழமை கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.




Comments