top of page
Search

தொடர்கிறதா? ரபேல் வாட்ச் சர்ச்சை! பா.ஜ. தேர்தல் அறிக்கை நினைபடுத்தியும் பரவும் கருத்துக்கள்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Dec 20, 2022
  • 3 min read
ree

பா.ஜ. தலைவர் அண்ணாமலை ரபேல் சர்ச்சையில் சிக்கினாலும், சரமாரியான கேள்விக்களை வீசி வருகின்றனர் சமூக வலைதளவாசிகள்.


அந்தக் காணொளியை முழுமையாக பார்க்கவில்லை. சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அபத்தங்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் பா.ஜ. அண்ணாமலை என்று சரமாரியாக விமர்சனங்களை கொத்தளிப்புடன் கொட்டிவருகின்றனர் சமூக வலைதளவாசிகள்.

ஏன் இந்த பத்திரிகையாளர்கள், ஜனநாயக ஊடகப் பணியாற்றிட தயங்கி இப்படி இருக்கிறார்கள், எதிர்வினையாற்றாமல் இருக்கின்றார்கள், என்று வியப்பாக இருந்தது. விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு வாட்ச் தயாரிக்க முடியுமா? மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டாரா?

எத்தனை காலங்களுக்கு இவருடைய அபத்தங்களை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

சும்மா ஆடு, மாடு, மீம் போட்டுக் கலாய்ப்பதை விட இப்படி அறிவுப்பூர்வமான விமர்சனம் எழுதுவதன் மூலமாகத் தான் மக்களை முட்டாள்களாக நினைக்கும் ஆணவத்தை உடைக்க முடியும்.

அண்ணாமலையின் அதிசய தேசபக்தி

அல்லது

ரஃபேல் வாட்சில் ஓடும் தேசபக்தி....

சமீபத்தில் நடைபெற்ற

- கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் அண்ணாமலை

(தமிழ் ஒன் இந்தியாவில் செய்தி விவரமாக உள்ளது)

ree

2021 சட்டமன்றத் தேர்தலில், அரவாக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2020-21 ஆண்டில் அவரது வருமானம் 7,67,020 (ஏழு லட்சத்து அறுபத்தேழாயிரம்)

அவருடைய துணைவியார் வருமானம் இதன் ஏழு மடங்கு என்றால் - 53,69,140 - ஐம்பத்து மூன்று லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் இருக்க வேண்டும்.

ஆனால் அந்த அறிக்கையில் தன் துணைவியாரின் வருமானம் என அண்ணாமலை காட்டியது 15,09,430 (பதினைந்து லட்சம்தான்)

அப்படியானால், இரண்டே சாத்தியங்கள்தான் உள்ளது. ஒன்று வருமான வரித்துறைக்கு வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறாரா? அல்லது

தேர்தல் ஆணையத்துக்கும் வருமானத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறாரா? என்பதுதான்.

அல்லது, கிறிஸ்துமஸ் விழாவில் சொன்னது பொய்யா?

20,000 புத்தகம் படிச்ச அண்ணாமலை, அவரின் தேர்தல் அறிக்கையை படிச்சாரா?

தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய GST முழுமையாக வந்துவிட்டது. எனவே தமிழக அரசு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

2004ல் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும் என்று சொன்னாரே ஒருத்தர் அதை அவர்செய்தாரா என்று கேட்க வேண்டுமல்லவா?

விவசாய விளை பொருளுக்கு ஒன்றை மடங்கு விலை தருவோம் என்று சொன்னாரே அதை அவர்ச் செய்தாரா?

சிறு குறு விவசாயிகளுக்கு 60 வயது ஆனால் ஓய்வூதியம் தருவேன்னு ஒரு பெரிய வாய்சவடால் விட்டாரே அதைச் செய்தாரா?

ree

2019 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்றாரே அதை செய்தாரா?

சிறுகடை வைத்திருப்போருக்கு 60 வயதுக்கு மேல் பென்சன் திட்டம் கொண்டு வருவேன் என்றார் அதை செய்தாரா ?

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா அவர்?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை 40 ரூபாயாக உயர்த்துவோம்னு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 40 ரூபாயா மாறிடும்னு சொன்னார்ல அதுவாது நடந்திருச்சா?

சர்வதேசச் சந்தையில கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் டீசல் விலை, இங்கும் குறையுமொன்று சொன்னாரே அது குறைந்ததா? அவ்வாறு ஏதேனும் செயல்படுத்தப்பட்டதா?

NPAவை குறைப்பதற்கு ஏதோ ஒரு மந்திரம் வச்சிருக்கன்னு சொன்னாங்கலே அந்த மந்திரம் போட்டாச்சா? இல்லை?

சும்மா வீச் வீச்சுனு இங்க கத்திக்கிட்டே இருந்தா மட்டும் போதாது.. அங்க என்ன செஞ்சிருக்குனு கொஞ்சம் அந்தப்பக்கமும் எட்டிப்பாருங்க சார்… நீங்க தேர்தல் அறிக்கையை பேசுறதுனால உங்களின் தேர்தல் அறிக்கையிலிருந்து இப்படி கேட்கப்படுகிறது.அதுவும் ஓராண்டு முடிந்தவுடன் அல்ல?; ஒன்பதாம் ஆண்டு தொடங்கிய பிறகு.!

ரஃபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை அளித்த விளக்கத்தை வீடியோவில் பார்த்தபோது, “என்னமா கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றார் பாருங்க” என்றுதான் முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு தோன்றியது.

துரதிருஷ்டம் என்னவென்றால், எல்லாப் பிரச்சினைகளையும் இப்படி மீம்களாலும், சொல்வடைகளாலும் அனைவரும்.சிரித்துவிட்டுக் கடந்து செல்லப் பழகி விட்டோம்.

அந்தப் பேட்டியின்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களிளில், யார் ஒருவரும் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வியும் கேட்டதாகத் தெரியவில்லை. அத்தனை பேரும், எதற்கோ, யாருக்கோ கட்டுப்பட்டு இருந்ததாகவே நினைக்க வேண்டியுள்ளது.

அந்த கடிகாரம் விமான பார்ட்களால் செய்யப்பட்டதாம்!

ree

கேக்கறவன் கேனையா இருந்தா கேப்பையில் நெய் ஒழுதுகும்பானாம் என்பதுபோலத்தான் இதுவும்.....

ஒரு மருந்துக் கம்பெனி காம்ப்ளிமென்டாக பேனாக்களைத் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். அது மருந்துகளைக் கொண்டா பேனா தயாரிக்கும்? பிளாஸ்டிக் மற்றும் இன்னம்பிற பொருட்களைக் கொண்டுதானே பேனாவை தயாரிக்கும். அதுவும் வேறொரு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து, தன் பெயரை அச்சிட்டுத் தருமாறு மல்லவா கேட்கும்.

அந்த ரஃபேல் வாட்சும் அப்படித்தான். ஆனால் ஒரு வித்தியாசம் உண்டு.

ஸ்விட்சர்லாந்து, கடிகாரம் தயாரிப்பதில் புகழ்பெற்ற நாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதே ஸ்விஸ் நாட்டின் Bell & Ross என்கிற நிறுவனம், மிகப் புகழ்பெற்ற கடிகார நிறுவனம். அது,ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் தஸால்ட் நிறுவனத்தின் ஐம்பதாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், 2013இல் Bell & Ross Vintage Sport Heritage என்ற பெயரில் ஒரு மாடல் தயாரித்து வெளியிட்டது.

2015இல் இன்னொரு வாட்ச் வெளியிட்டது. அதன் பெயர்தான் BR-03-94. அண்ணாமலை வாங்கியதாகச் சொல்லும் வாட்ச் இதுதான்.

இந்தியா ரஃபேலிடம் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது 2016,ம், ஆண்டில். மேற்கண்ட வாட்ச் தயாரானது 2015, ம் ஆண்டில். ஆக, இதற்கும் இந்தியாவுக்கு ரபேல் விமானம் வந்தது என்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ரபேல் விமானத்தின் ஸ்பேர்களால் செய்யப்பட்ட வாட்ச், இதை நான் அணிவது தேசபக்தியின் காரணமாக என்பதெல்லாம் அபத்தம் மட்டுமல்ல. மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியாகும்.

சரி, அப்படி தேசபக்தியின் காரணமாக ரபேல் வாட்ச் வாங்கினார் என்றால், அதே தஸால்ட் நிறுவனம் ஆடைகள், ஜாக்கெட்டுகள், டி-ஷர்ட்டுகள், தொப்பிகள், டைகள், குடைகள், முதுகுப்பைகள், பைகள், வாசனை திரவியங்கள், ஸ்டேஷனரிகள் என இன்னும் பல பொருட்களையும் விற்கிறது. அதை ஏன் வாங்கவில்லையாம்? ஏனென்றால், அதையெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டும்.

2015இல் வெளியிட்ட லிமிடெட் எடிஷன் கடிகாரம் 2021 வரை விற்பனையில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்களை விற்க ஒப்பந்தம் கிடைத்த காரணத்தால், ரபேல் நிறுவனம் Bell & Ross நிறுவனத்திடம் இந்த வாட்சுகளை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்கும். விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தவர்களை திருப்தி செய்வதற்காகக் கொடுத்திருக்கும். ஆர்டர் கொடுத்தது பாஜக அரசு. பாஜக.வுக்கு கிடைத்த வாட்சுகளை தமக்குள் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி நடந்திருக்கவே சாத்தியங்களே அதிகம்.

நம் நாட்டில் தயாரான ஒரு பொருளை மட்டுமே நான் வாங்குகிறேன் என்று சொன்னாலாவது அதை தேசபக்தி கணக்கில் சேர்க்கலாம். வேறு ஏதோவொரு நாட்டில் தயாரான - அதுவும் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கிக்கொண்டு, அதை தேசபக்தி என்று கதை விடுகிறார் என்றால் - இதற்கு ஒரே பொருள்தான் இருக்க முடியும்

விலை கொடுத்து வாங்கியதற்கான நம்பத் தகுந்த பில் அல்லது ரசீதுகளை அண்ணாமலை வெளியிடாதவரை இந்த ஊகத்தையும் - விமர்சனங்களையும் தவிர்க்க முடியாது. என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாகவே உள்ளது....


இவ்வாறான கருத்துக்கள் சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வலம் வந்து கொண்டு வருகிறது....


உறியடி - செய்திக்குழுவினர்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page