top of page
Search

கோரமண்டல் ரயில் விபத்து! சந்தேகங்களை எழுப்பும் சமூக வலைதள பதிவு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 10, 2023
  • 5 min read
ree

இந்திய ரயில்வே அமைச்சர் இன்னும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவில்லை. ஆனால் விபத்தினால் நிகழ்ந்த கோர மரணங்களால் இன்னமும்மனம் மிகுந்த துயருற்றிருக்கிறது.

இந்தத் துயரங்களைத் தாண்டி மனம் வேறு விதமான ஒரு ஆழ்ந்த கவலையை உருவாக்கி இருக்கிறது.

இந்திய ரயில்வே அமைச்சர் இன்னும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவில்லை. ஆனால் விபத்தினால் நிகழ்ந்த கோர மரணங்களால் மனம் மிகுந்த துயருற்றிருக்கிறது.

இந்தத் துயரங்களைத் தாண்டி மனம் வேறு விதமான ஒரு ஆழ்ந்த கவலையை உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்!

அப்படி வலையில் சிக்கிய சமூக வலைதளபதிவு!

ரயில்வே அமைச்சர் ஒரு ஊடக சந்திப்பில்

"ரயில்வேயின் இப்போதைய தொழில்நுட்ப மென்பொருளில் யாரோ வேண்டுமென்றே மாற்றம் செய்திருக்கிறார்கள்"

என்றொரு அவதூறான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

நாக்பூரிகள் (ஆர்.எஸ்.எஸ்)இந்நேரம் ஒரு புதிய திட்டத்தை ஆலோசிப்பார்கள், பாகிஸ்தான் அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் இந்த மென்பொருள் குளறுபடியை சதி செய்து இந்தியாவை அழிக்கத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

ஆகவே இஸ்லாமியர்கள் தான் இங்கு நடக்கும் பேரிடர் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புதிய கதை ஒன்றை விரைவில் திட்டமிட்டு வெளியிடுவார்களோ என்று அச்சம் சூழ்கிறது.

புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்தி கடந்த தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்துக்கான தேசப்பற்று வேட்டையாடினார்கள் நாக்பூரிகள்(RSS).

நாக்பூரிகளின் மிகப்பெரிய உளவியல் ஆயுதங்களில் பாகிஸ்தானும், இஸ்லாமியர்களும் முக்கியமானவை. 2024 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த ரயில் விபத்து மோடி அரசின் இந்திய ஏழை மக்கள் மீதான அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால், இந்த வாய்ப்பையும் அவர்கள் தங்கள் தேர்தல் நலனுக்குப் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். இந்த விபத்தை இஸ்லாமிய தீவிரவாத சதி என்று திசை திருப்பி அதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் செய்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.

அர்னாப் கோஸ்வாமியைப் போன்ற பல ஊடகக் கிரிமினல்கள் இதற்காக நியமிக்கப்பட்டு இரவு பகல் பாராமல் வேலை செய்வார்கள்.

அதற்கு முன்னதாக இந்திய மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட எவரேனும் இந்த விபத்துக்கான காரணத்தை, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் தான் என்று நிறுவுவதற்கான தரவுகளை வெளியிட வேண்டும்.

ரயில்வே துறையில் இந்திய ஏழைகளை நுழைய விடாமல் செய்கிற மோடியின் தகிடுதித்தங்களையும், மூன்றாம் வகுப்பு முற்றிலுமாக துடைத்தழிக்கப்பட நாக்பூரிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் மாமாங்க ஊழல்களையும் நாடு உணர்ந்து கொள்வதற்கான வேலைகளை இந்தியாவின் மீது உண்மையான அக்கறை‌ கொண்ட ஊடகங்கள் தீவிரமாக வெளியிட்டு செயல்பட வேண்டிய நேரம் இது.

இப்படி ஒரு இனம்புரியாத அச்சம் ரயில்வே அமைச்சர் வைஷ்ணவின் குற்றச்சாட்டில் இருந்து எனக்குள் வளர்கிறது. இது நடக்கக் கூடாது‌ என்று மனம் ஏங்கினாலும் இதை நடத்துவதற்கு எந்த வகையிலும் நாக்பூரிகள் தயங்க மாட்டார்கள் என்ற அச்சம் சூழ்கிறது.

ஒரிசா ரயில் விபத்து மனதளவில் ஒரு வீழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அப்பாவிகளின் உயிரைக் காவு வாங்கிய கயவர்கள் இந்திய ரயில்வேயில் முதலீடு செய்யாமல், தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுக்காமல் ஏமாற்றிய நாக்பூரிகள் தான்.

ree

இந்திய ரயில்வே ஏழை நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கான மிகப்பெரிய கொடை. ஆங்கிலேயர்கள் தங்கள் சொகுசுப் பயணங்களுக்காக உருவாக்கிய ரயில் தடங்களில் இருந்துதான் இந்திய ரயில்வே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.

விடுதலைக்குப் பின்னர் ரயில்வே ஒரு மிக முக்கியமான போக்குவரத்து வளமாகவும், தேசத்தின் இதயமாகவும் மாறத் துவங்கியது. காங்கிரஸ் அரசுக் காலத்திலோ, பிற அரசுகளின் காலத்திலோ இந்திய ரயில்வே ஒரு வணிக நலனாகப் பார்க்கப்படவில்லை.

ஊழல்கள் இருந்தது, ஆனால் இந்தியாவின் 50 ஆண்டுகால வரலாற்றில் ராணுவத்துக்கு அடுத்த முக்கியத்துவம் தரப்பட்ட பொதுத்துறையாக ரயில்வே செயல்பட்டது. தனி பட்ஜெட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், வெறும் வணிக நலனுக்காக செயல்படுகிற அல்லது பணக்காரர்களின் சொகுசுப் பயணத்திற்கு உதவுகிற துறையாக அதை மாற்றியது நாக்பூரிகளின் சுயநலம்.

இந்திய ரயில்வேயை விற்று முதலாளிகளின் காலடியில் சமர்ப்பிக்க நாக்பூரிகளின் அரசியல் ஏஜெண்ட்டான மோடிக்கு வழிகாட்டப்பட்டது. முட்டாள் மோடியும் இந்தியா என்பது என்ன? இந்திய மக்களின் உண்மையான தேவைகள் என்ன என்பதைப் பற்றி எந்த சுய அறிவும் இல்லாது நாக்பூரிகளின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தார்.

வந்தே பாரத் என்ற பெயரில் விளம்பர மோகத்தில் வெறும் பணக்காரர்கள் மட்டும் பயணம் செய்யும் ரயில்களை 18 வழித்தடங்களில் ஓடவிட்டு இந்தியாவுக்கு சேவை செய்வதாக போலி விளம்பரம் செய்தார்.

நடுத்தர ஏழை மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கவே இயலாத அளவுக்கு கட்டணம், மற்றொருபுறம் CAG அறிக்கையில் ரயில்வேயை நவீன மயமாக்கவும், பாதுகாப்பான புனரமைப்பு வேலைகளுக்காகவும் 1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் தேசப் பொருளாதாரப் பாதுகாப்புக்கான வைப்புத் தொகையையே விழுங்கி ஏப்பம் விட்ட நாக்பூரிகள் இது குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை. 2 ரூபாயாக இருந்த உள்நுழைவுக் கட்டணத்தை 10 ரூபாயாக மாற்றி ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள் நாக்பூரிகள்.

ரயில்வே‌ துறைக்கான ஒதுக்கீடுகளில் மிகக்குறைந்த அளவுதான் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியவற்றை முதலாளிகளுக்கும், நாக்பூரிகளுக்கும் பங்கு போட்டது ஏஜெண்ட் மோடி அரசு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் குறைக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அதிகரிக்கப்பட்டது.

இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணிப்பவர்களில் பெரும்பாலான பயணிகள் உழைக்கும் கூலித் தொழிலாளிகள். ரயில்களில் வணிகம் செய்து பிழைப்பவர்கள். இந்திய ஏழைகளின் வாழ்வு பரிதாபகரமானது.

சமீபத்தில், நாடாளுமன்றத்தின் தலைவரும், முதல் இந்தியக் குடிமகளுமாகிய திரௌபதி முர்முவைப் புறக்கணித்து, ஆட்டிப் பண்டாரங்களையும், ஆதீனங்களையும் முன்னிலைப்படுத்தி அடிப்படை இந்துத்துவத்தின் கோரமுகத்தை புதிய நாடாளுமன்றத்துக்குள் எடுத்து வந்திருக்கிறார்கள் நாக்பூரிகள்.

மோடி ஒரு கருவிதான். இதன் பின்னே உறுதியாக நாக்பூரிகளின் இந்துராஷ்டிரக் கனவுகளும், வேத விற்பன்னங்களும் நுட்பமாக நுழைகிறது. இந்தியா எல்லா மதங்களைச் சேர்ந்த மானுடர்கள் வாழும் மதச்சார்பற்ற நாடு.

புதிய நாடாளுமன்றத் திறப்பு நடவடிக்கைகள் இந்த தேசத்தை முழுமையான இந்து தேசமாக, வர்ண பேதங்களைப் போற்றுகிற சாதியப் பிரிவினைகளை எப்போதும் வைத்திருக்கிற பார்ப்பனீய நலன் சார்ந்த தேசமாக மாற்றுவதற்கான நாக்பூரிகளின் முன்னோட்டம் தான் புதிய நாடாளுமன்ற நிகழ்வுகள்.

நாக்பூரிகளின் ஏழை ஒழிப்புத் திட்டங்களின் பயனாக, அவர்கள் காட்டிய உழைக்கும் மக்களுக்கு எதிரான வன்மமும், அலட்சியமும் தான் இந்தக் கொடூரமான ரயில் விபத்து.

மோடி பதவி விலகி அனுதாப அலை தேடுகிற திட்டமும், பாகிஸ்தானிய, இஸ்லாமிய, தீவிரவாத சதி என்று குற்றச்சாட்டின் மீதேறி நின்று வழக்கமான அதிகாரத்துக்கான இலக்கை நோக்கி நாக்பூரிகள் பயணிப்பதற்கான சாத்தியங்களையும் புறக்கணிக்க முடியாது.

பெருந்தொற்றுக் காலத்திலும் சரி, மதவெறியாட்டங்களிலும் சரி, ஏழைகளின் பிணத்தின் மீதேறி ஆடிக் களித்த நாக்பூரிகளும், அவர்களின் அடிமுட்டாள் ஏஜெண்ட்டுகளுமான மோடி & கோ, இந்தியாவை இன்னுமொரு சோமாலியாவாக மாற்றும் வரை ஓயமாட்டார்கள்.

மோடி பரிதாபத்துக்குரிய ஆர்.எஸ்.எஸ் அடிமை, அதுமட்டுமில்லாமல் சுயமாக சிந்திக்கத் தெரியாத முழு முட்டாள் அடிமை. ஆகவேதான் நாக்பூரிகளின் நீண்டகாலக் கனவுத் திட்டங்களும், ஏழை இந்தியர்களின் வாழ்வும் இவ்வளவு வேகமாக நசுக்கப்படுகிறது.

அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடையச் செய்தால் ஒழிய இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களின் எதிர்காலம் என்பது முற்றிலும் கேள்விக்குறியானதுதான்.

ரயில்வே அமைச்சர் ஒரு ஊடக சந்திப்பில்

"ரயில்வேயின் இப்போதைய தொழில்நுட்ப மென்பொருளில் யாரோ வேண்டுமென்றே மாற்றம் செய்திருக்கிறார்கள்"

என்றொரு அவதூறான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

நாக்பூரிகள் (ஆர்.எஸ்.எஸ்)இந்நேரம் ஒரு புதிய திட்டத்தை ஆலோசிப்பார்கள், பாகிஸ்தான் அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் இந்த மென்பொருள் குளறுபடியை சதி செய்து இந்தியாவை அழிக்கத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

ஆகவே இஸ்லாமியர்கள் தான் இங்கு நடக்கும் பேரிடர் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புதிய கதை ஒன்றை விரைவில் திட்டமிட்டு வெளியிடுவார்களோ என்று அச்சம் சூழ்கிறது.

புல்வாமா தாக்குதலைப் பயன்படுத்தி கடந்த தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்துக்கான தேசப்பற்று வேட்டையாடினார்கள் நாக்பூரிகள்(RSS).

நாக்பூரிகளின் மிகப்பெரிய உளவியல் ஆயுதங்களில் பாகிஸ்தானும், இஸ்லாமியர்களும் முக்கியமானவை. 2024 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த ரயில் விபத்து மோடி அரசின் இந்திய ஏழை மக்கள் மீதான அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால், இந்த வாய்ப்பையும் அவர்கள் தங்கள் தேர்தல் நலனுக்குப் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். இந்த விபத்தை இஸ்லாமிய தீவிரவாத சதி என்று திசை திருப்பி அதன் மூலம் வாக்கு வங்கி அரசியல் செய்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரம் செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.

அர்னாப் கோஸ்வாமியைப் போன்ற பல ஊடகக் கிரிமினல்கள் இதற்காக நியமிக்கப்பட்டு இரவு பகல் பாராமல் வேலை செய்வார்கள்.

அதற்கு முன்னதாக இந்திய மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட எவரேனும் இந்த விபத்துக்கான காரணத்தை, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் தான் என்று நிறுவுவதற்கான தரவுகளை வெளியிட வேண்டும்.

ரயில்வே துறையில் இந்திய ஏழைகளை நுழைய விடாமல் செய்கிற மோடியின் தகிடுதித்தங்களையும், மூன்றாம் வகுப்பு முற்றிலுமாக துடைத்தழிக்கப்பட நாக்பூரிகள் தொடர்ந்து மேற்கொள்ளும் மாமாங்க ஊழல்களையும் நாடு உணர்ந்து கொள்வதற்கான வேலைகளை இந்தியாவின் மீது உண்மையான அக்கறை‌ கொண்ட ஊடகங்கள் தீவிரமாக வெளியிட்டு செயல்பட வேண்டிய நேரம் இது.

இப்படி ஒரு இனம்புரியாத அச்சம் ரயில்வே அமைச்சர் வைஷ்ணவின் குற்றச்சாட்டில் இருந்து எனக்குள் வளர்கிறது. இது நடக்கக் கூடாது‌ என்று மனம் ஏங்கினாலும் இதை நடத்துவதற்கு எந்த வகையிலும் நாக்பூரிகள் தயங்க மாட்டார்கள் என்ற அச்சம் சூழ்கிறது.

ஒரிசா ரயில் விபத்து மனதளவில் ஒரு வீழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அப்பாவிகளின் உயிரைக் காவு வாங்கிய கயவர்கள் இந்திய ரயில்வேயில் முதலீடு செய்யாமல், தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுக்காமல் ஏமாற்றிய நாக்பூரிகள் தான்.

இந்திய ரயில்வே ஏழை நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கான மிகப்பெரிய கொடை. ஆங்கிலேயர்கள் தங்கள் சொகுசுப் பயணங்களுக்காக உருவாக்கிய ரயில் தடங்களில் இருந்துதான் இந்திய ரயில்வே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது.

விடுதலைக்குப் பின்னர் ரயில்வே ஒரு மிக முக்கியமான போக்குவரத்து வளமாகவும், தேசத்தின் இதயமாகவும் மாறத் துவங்கியது.

காங்கிரஸ் அரசுக் காலத்திலோ, பிற அரசுகளின் காலத்திலோ இந்திய ரயில்வே ஒரு வணிக நலனாகப் பார்க்கப்படவில்லை.

ஊழல்கள் இருந்தது, ஆனால் இந்தியாவின் 50 ஆண்டுகால வரலாற்றில் ராணுவத்துக்கு அடுத்த முக்கியத்துவம் தரப்பட்ட பொதுத்துறையாக ரயில்வே செயல்பட்டது. தனி பட்ஜெட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், வெறும் வணிக நலனுக்காக செயல்படுகிற அல்லது பணக்காரர்களின் சொகுசுப் பயணத்திற்கு உதவுகிற துறையாக அதை மாற்றியது நாக்பூரிகளின் சுயநலம்.

இந்திய ரயில்வேயை விற்று முதலாளிகளின் காலடியில் சமர்ப்பிக்க நாக்பூரிகளின் அரசியல் ஏஜெண்ட்டான மோடிக்கு வழிகாட்டப்பட்டது. மோடியும்

நடுத்தர ஏழை மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கவே இயலாத அளவுக்கு கட்டணம், மற்றொருபுறம், சி.ஏ.ஜி அறிக்கையில் ரயில்வேயை நவீன மயமாக்கவும், பாதுகாப்பான புனரமைப்பு வேலைகளுக்காகவும் 1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கியின் தேசப் பொருளாதாரப் பாதுகாப்புக்கான வைப்புத் தொகையையே விழுங்கி ஏப்பம் விட்ட நாக்பூரிகள் இது குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை. 2 ரூபாயாக இருந்த உள்நுழைவுக் கட்டணத்தை 10 ரூபாயாக மாற்றி ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள் நாக்பூரிகள்.

ரயில்வே‌ துறைக்கான ஒதுக்கீடுகளில் மிகக்குறைந்த அளவுதான் பயன்படுத்தப்பட்டது. எஞ்சியவற்றை முதலாளிகளுக்கும், நாக்பூரிகளுக்கும் பங்கு போட்டது ஏஜெண்ட் மோடி அரசு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் குறைக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அதிகரிக்கப்பட்டது.

இரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணிப்பவர்களில் பெரும்பாலான பயணிகள் உழைக்கும் கூலித் தொழிலாளிகள். ரயில்களில் வணிகம் செய்து பிழைப்பவர்கள். இந்திய ஏழைகளின் வாழ்வு பரிதாபகரமானது.

சமீபத்தில், நாடாளுமன்றத்தின் தலைவரும், முதல் இந்தியக் குடிமகளுமாகிய திரௌபதி முர்முவைப் புறக்கணித்து, ஆட்டிப் பண்டாரங்களையும், ஆதீனங்களையும் முன்னிலைப்படுத்தி அடிப்படை இந்துத்துவத்தின் கோரமுகத்தை புதிய நாடாளுமன்றத்துக்குள் எடுத்து வந்திருக்கிறார்கள் நாக்பூரிகள்.

மோடி ஒரு கருவிதான். இதன் பின்னே உறுதியாக நாக்பூரிகளின் இந்துராஷ்டிரக் கனவுகளும், வேத விற்பன்னங்களும் நுட்பமாக நுழைகிறது. இந்தியா எல்லா மதங்களைச் சேர்ந்த மானுடர்கள் வாழும் மதச்சார்பற்ற நாடு.

புதிய நாடாளுமன்றத் திறப்பு நடவடிக்கைகள் இந்த தேசத்தை முழுமையான இந்து தேசமாக, வர்ண பேதங்களைப் போற்றுகிற சாதியப் பிரிவினைகளை எப்போதும் வைத்திருக்கிற பார்ப்பனீய நலன் சார்ந்த தேசமாக மாற்றுவதற்கான நாக்பூரிகளின் முன்னோட்டம் தான் புதிய நாடாளுமன்ற நிகழ்வுகள்.

நாக்பூரிகளின் ஏழை ஒழிப்புத் திட்டங்களின் பயனாக, அவர்கள் காட்டிய உழைக்கும் மக்களுக்கு எதிரான வன்மமும், அலட்சியமும் தான் இந்தக் கொடூரமான ரயில் விபத்து.

மோடி பதவி விலகி அனுதாப அலை தேடுகிற திட்டமும், பாகிஸ்தானிய, இஸ்லாமிய, தீவிரவாத சதி என்று குற்றச்சாட்டின் மீதேறி நின்று வழக்கமான அதிகாரத்துக்கான இலக்கை நோக்கி நாக்பூரிகள் பயணிப்பதற்கான சாத்தியங்களையும் புறக்கணிக்க முடியாது.

பெருந்தொற்றுக் காலத்திலும் சரி, மதவெறியாட்டங்களிலும் சரி, ஏழைகளின் பிணத்தின் மீதேறி ஆடிக் களித்த நாக்பூரிகளும், அவர்களின் ஏஜெண்ட்டுகளுமான மோடி & கோ, இந்தியாவை இன்னுமொரு சோமாலியாவாக மாற்றும் வரை ஓயமாட்டார்கள்.

மோடி பரிதாபத்துக்குரிய ஆர்.எஸ்.எஸ் அடிமை, அதுமட்டுமில்லாமல் சுயமாக சிந்திக்கத் தெரியாத முழு முட்டாள் அடிமை. ஆகவேதான் நாக்பூரிகளின் நீண்டகாலக் கனவுத் திட்டங்களும், ஏழை இந்தியர்களின் வாழ்வும் இவ்வளவு வேகமாக நசுக்கப்படுகிறது.

அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடையச் செய்தால் ஒழிய இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களின் எதிர்காலம் என்பது முற்றிலும் கேள்விக்குறியானதுதான்.

இவ்வாறாக வலைதளபதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது!

திருச்சி வின்ஸி

Comments

SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page