கோரமண்டல் ரயில் விபத்து! மீட்புப் பணிகள் தீவிரம்! அமைச்சர்கள் உதயநிதி சிவசங்கர், அதிகாரிகள் விரைவு!!
- உறியடி செய்திகள்

- Jun 3, 2023
- 2 min read




மணவை எம்.எஸ்.ராஜா.....
ஜூன், 3. நள்ளிரவு 2 .45.மணி நேர நிலவரம்.!...
கோரமண்டல் ரயில் விபத்து! மீட்புப் பணிகள் தீவிரம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி,அமைச்சர்கள் உதயநிதி சிவசங்கர், அதிகாரிகள் காலை விரைவு!!
இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3. ரயில்கள் விபத்துக்குள்ளானது; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது!
வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு
ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து, 3. ரயில்களின் கோர விபத்து ஏற்பட்டது, இதில்பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது.

கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் புவனேஸ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் 7 பெட்டிகள் கவிழ்ந்து. 3 ரயில்களின விபத்து; ஏற்பட்டது, வனப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு என தகவல் வெளியாகியுள்ளது.!
*கோரமண்டல் ரெயில் விபத்து குறித்து: அவசர கால கட்டுப்பாடு அறை எண் அறிவிப்பு*
ஒடிசா: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா அருகே சரக்கு ரெயில் மீது மோதி 3. ரயில்கள் விபத்துக்குளானது. இந்த விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தால் பலர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர்
முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை - தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் கூறப்படுகின்றது!
இந்த நிலையில் அவசர கால கட்டுப்பாட்டு எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து அறிந்துகொள்ள அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர் (ஒடிசா) +91 67822 62286 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்றும்தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
.
ரயில் விபத்து - தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு
044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு
94458 69848 என்ற வாட்ஸ் அப் எண் அறிவிப்பு செய்யபட்டுள்ளது!

ஒடிசா ரயில் விபத்தில், நள்ளிரவு, 2 மணி நிலவரப்படி உயர்ந்து 120 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 800க்கும் மேற்பட்ட காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் இறப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும்,ஒடிசா அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்!,

விபத்து பற்றியஅதிர்ச்சி தகவல்களும் தொடர்ந்துவெளிவந்து கொண்டுள்ளது!

ஒடிசா பாலஷோர் ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு; 350 பேர் காயம்!
தற்போதைய உயிரிழப்பு நிலவரத்தை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்;
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது!
மேலும்பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம்,
காயமடைந்தோருக்கு ₹50,000 நிவாரணம் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது! .
இந்நிலையில் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்துத் தொடர்பாக, தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தயாராகயிருப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர், தலைமையிலான அதிகாரிகளின் குழு இன்று சம்பவ இடத்திற்கு
நேரில் செல்லவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர். தமிழ்நாடு விளையாட்டு - சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.!
இந்நிலையில் நள்ளிரவு 2.மணி நிலவரப்படி 120. உடல்கள் மீட்கப்பட்டும். ம00க்கும் மேற்ப்பட்ட காயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை, மீட்ட,தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும், இருப்பினும் விபத்தில் பலியானவர்கள். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய முழுமையான விபரம் தெரியவில்லை என்று ஒடிசா அரசு தரப்பிலான தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.
ஒடிசா ரயில் விபத்தின் கோர விரியம் அறிந்த, தமிழக முதல்வர் தமிழக ரயில்வே துறையினரையும் விபத்து மீட்புப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.!
ரயில் விபத்து குறித்து, இந்திய குடியரசுத் தலைவர்-
பிரதமர் மோடி வேதனை
"ஒடிசா அருகே ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது" - பிரதமர் மோடி வேதனை
"உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் - காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" - என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்!
மீட்பு பணிகளை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கையை துரிதமாக எடுக்கவும் ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன் - என்றுபிரதமர் மோடி செய்தி குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
தி.மு.கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கோரமண்டல் ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை, தீவிர சிகிச்சையளிக்க, 3. மருத்துவமனைகளை தமிழக அரசு ஏற்பாடு செய்து, தயார்நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!




Comments