ஊழல் பட்டியல் விவகாரம்!எடப்பாடி- அண்ணாமலையின் வழக்கமான அரசியல் நாடகமா? அதிமுக-பாஜக. கருத்து மோதல்!!
- உறியடி செய்திகள்

- Apr 16, 2023
- 2 min read

ஆசிரியர், மணவை.எம்.எஸ்.ராஜா.
அண்ணாமலை மீது எடப்பாடி நேரடி "அட்டாக்" -இதான் முதல்முறை! பிரிகிறதா அதிமுக - பாஜக?அல்லது வழக்கபோல அரசியல் நாடகமா என்று அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது!
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி அண்ணாமலை வெளியிட்ட தகவலும் அப்போது அவர் பேசியதும் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியே முதல்முறை அண்ணாமலையை நேரடியாக விமர்சித்து இருப்பதன் மூலம், அதிமுக - பாஜக கூட்டணி இடையிலான விரிசல் அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளதா என்கிற கே.ள்வி எழுந்துள்ளதாக தெரிந்தாலும் இது பாஜக - அதிமுகவில் புதிதல்லவே என்கிற கருத்தையும் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது....
முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேட்டால் கருத்து சொல்லலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவே அண்ணாமலை பேசி வருகிறார். அவரை பற்றி என்னிடம் எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம்." என்றுஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்க வேண்டியுள்ளது..

இதற்கு முன் எடப்பாடி பழனிசாமியின் பேட்டிகள், அறிக்கைகளில் அண்ணாமலையை நேரடியாக விமர்சித்து அவர் பேசுவது இதுவே முதல் முறையாக உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியாக இருந்தாலும் இரு கட்சிகளிடையே நாட்கள் செல்ல செல்ல விரிசல் விரிவடைந்துகொண்டே செல்வதாகவும் பிம்பம் கட்டமை.க்கப்படுகிறது எனும் சந்தேக கேள்வியும் எழாமலில்லை!
அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கும் தமிழ்நாடு பாஜக நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போதே அவ்வப்போது வெளிப்பட்டது. தேர்தல் பணிமனையில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெயர்களை சேர்க்காதது, தேசிய ஜனநாயக கூட்டணி என்று குறிப்பிடாதது என பல்வேறு சர்ச்சைகள் அப்போதே கிளம்பின.......
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக பொருப்பாளருமான செங்கோட்டையன் நேரடியாகவே பாஜகவை விமர்சித்தார். "பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு விழவில்லை." என்று நேரடியாக குற்றம்சாட்டினார்.
.

அந்த சமயத்தில் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக இருந்த நிர்மல் குமார் மற்றும் அவரை பின்தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலையின் வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டி நேரடியாகவே இதை கண்டித்தார். அண்ணாமலையும் ஒரு பேட்டியில் இதனை சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
இதற்கு எதிர்வினையாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அண்ணாமலையை ஒரு பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து பேசியதை. ஒருமையில் விமர்சித்ததாக கூறி அவரை, கத்துக்குட்டி என்று நேரடியாகவே சாடினார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன். இதற்கு அதிமுகவினரும் பல்வேறு கோணங்களில் பதிலடி கொடுத்தனர்.......
இப்படி இரு தரப்பிலிருந்தும் வார்த்தை போர் தொடர்ந்து வந்தது. உச்சக்கட்டமாக எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து தூத்துக்குடியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக அண்ணாமலையின் உருவ பொம்மையை அரியலூரில் அதிமுகவினர் எரித்தனர். கூட்டணியாக இருந்துகொண்டு இந்த அளவுக்கு மோதிக்கொள்கிறார்களே! என்ற கேள்வி மக்கள் மத்தியிலேயே எழுந்தது.....
இந்த நிலையில், அண்ணாமலை பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். தமிழ்நாட்டில் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தொண்டராக கட்சியில் தொடர்வேன் என்று எச்சரித்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவினரின் இந்த தொடர் எதிர்ப்பு, அதிமுகவுக்கு எதிரான அண்ணாமலையின் நிலைபாடுகளுக்கு எல்லாம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் பதிலடி கொடுத்தாலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை கண்டும் காணாதபடியே கடந்து சென்றார்.
செய்தியாளர் இது பற்றி கேட்டாலும் பதிலளிக்காமல் தவிர்த்துவிடுவார்.
இந்த நிலையில் நேற்று DMK files என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்துப்பட்டியல்,தகவல்களை வெளியிட்டார் அண்ணாமலை. அது ஊழல் பட்டியலில் அல்ல, சொத்துப் பட்டியல் என்று திமுகவினரே அதனை கடும் விமர்சனங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் அதிமுக,வினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்தார்....
திமுகவுக்கு இணையாக தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்றால் அது அதிமுகதான். கூட்டணியாக இருந்தாலும் அண்ணாமலை அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றிதான் அவர் இவ்வாறு சொல்லி உள்ளர் என்று பலர் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடப்போவதாக அண்ணாமலை சொன்னது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது
பதிலளித்த பேசியஜெயக்குமார், "அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் என்றே அண்ணாமலை சொல்லி இருக்கிறார். அதிமுக என்று அவர் கூறவில்லை. என்று மழுப்பலாக பதிலளித்தவர்,இப்போது நான் சவால் விடுகிறேன். அதிமுக என அண்ணாமலை சொல்லட்டும்.. அதன் பிறகு நான் உங்கள் கேள்விக்கு பதிலளிக்கிறேன். எங்கள் ரியாக்சனை நீங்கள் பார்ப்பீர்கள்." என்றார். ஜெயக்குமாரின் இந்த பேச்சு அண்ணாமலை எச்சரிக்கும் வகையில் இருந்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக்கப்பட்டது......
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி முதல்முறை நேரடியாக அண்ணாமலையை முதிர்ச்சியற்ற தலைவர் என்று பொருள்படும்படி விமர்சித்து இருக்கிறார். இதன் மூலம் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியின் விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது! இதற்கு அண்ணாமலை தரப்பு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்று தெரியவில்லை. அதே நேரம் இந்த விரிசலை டெல்லி எப்படி ஒட்டப்போகிறதா-இல்லை .....




Comments