கடலூர்: கலைஞர் நூற்றாண்டுவிழா! ஜூன் 28 முதல் ஜூலை 23 வரை! அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை
- உறியடி செய்திகள்

- Jun 25, 2023
- 2 min read


கடலூர் கிழக்கு மாவட்டதிமுகமற்றும்இளைஞரணி சார்பில்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா, கொண்டாட்டங்களின் தொடர்நிகழ்ச்சிகளாக
மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பகுதிகளில் தொடர் பொதுக்கூட்டம்
மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென மாவட்ட தி.மு.கழக செயலாளர்
அமைச்சர்,
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர்
.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில், மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டது.
.இந்நிலையில், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர்,
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது!
திமுக மற்றும் இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பகுதிகளில் தொடர் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனையின்படி சிறப்பாக செய்து நடத்திட வேண்டும். மேலும், அந்தந்த பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சார கூட்டங்களில் கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாநகர மேயர், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், கழக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
.
பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் பின்வரும் கால விபரப்படி நடைபெறும்!
ஜூன்,28.
புதன்கிழமை
குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம்
குறிஞ்சிப்பாடி பேரூர் கழக நிகழ்ச்சியில்
கொள்கை பரப்புச் செயலாளர்
, தமிழ்நாடு பாடல் நூல் கழகத்தின்.திண்டுக்கல் ஐ.லியோனியும்
ஜூலை,01.
சனிக்கிழமை
கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியம், ஜூலை 2.ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நகரம் ஜூலை.3. திங்கட்கிழமை கடலூர் வடக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தலைவர் கலைஞர் நற்றாண்டுவிழா நிகழ்ச்சிகளில்கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் முன்னால் எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தியும் ,
ஜூலை,03.
திங்கள்கிழமை புவனகிரி கிழக்கு ஒன்றியம்
ஜீலை 04.
செவ்வாய்கிழமை குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியத்திலும்
கழக கொள்கைப்பரப்பு
துணைச்செயலாளர் ச.அ.பெருநெற்கிள்ளியும்
ஜூலை.05. ந்தேதி
புதன்கிழமை கடலூர் மாநகரம், 6ந் தேதி. பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியத்திலும் தலைமைக்கழக பேச்சாளர்
சைதை சாதிக்கும்
ஜூலை, 07.
வெள்ளிக்கிழமை கம்மாபுரம் தெற்கு ஒன்றியம்,ஜூலை,10ந் தேதி
சனிக்கிழமை புவனகிரி மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கழக கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன்.
ஜூலை,11,
திங்கள்கிழமை குமராட்சி கிழக்கு ஒன்றியம்
குமராட்சி மத்திய ஒன்றியத்தில் கழக மகளிரணி பிரச்சார செயலாளர் புதுக்கோட்டை விஜயா.
ஜூலை,12, ந் தேதி
திங்கள்கிழமை
வடலூர் நகர பகுதியில் கழக வர்த்தகர் அணி துணைச்செயலாளர் அரசு கொறடா,முனைவர் கோவி.செழியன்,
ஜூலை,13ந்தேதி
திங்கள்கிழமை
கடலூர் தெற்கு ஒன்றியம் பகுதியில், தலைமைக்கழக பேச்சாளர், தூத்துக்குடி சரத்பாலாவும்,
ஜூலை,14,ந் தேதி
செவ்வாய்கிழமை காட்டுமன்னார்கோவில் மேற்கு
கிழக்கு ஒன்றியம்
காட்டுமன்னார்கோவில் பேரூர், ஆகிய பகுதிகளில் கழக மகளிரணி பிரச்சார அணிச்செயலாளர் புதுக்கோட்டை விஜயாவும்.
ஜூலை,15,
செவ்வாய்கிழமை திருமுட்டம் வடக்கு ஒன்றியத்தில் தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா,
ஜூலை16-ந் தேதி
வியாழக்கிழமை குமராட்சி வடக்கு,
தெற்கு,
மேற்கு ஒன்றியங்களில், கழகவர்த்தகர் அணி துணைத் தலைவர்,அரசு கொறடாமுனைவர் கோவி.செழியன், ஜூலை
17 , ந் தேதி
வியாழக்கிழமை பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியத்தில் தலைமைக்கழகப் பேச்சாளர் கந்திரி கரிகாலன்
ஜூலை,18,
வியாழக்கிழமை திருமுட்டம் கிழக்கு, ஜீலை,19,ந் தேதி
வெள்ளிக்கிழமை திருமுட்டம் மேற்கு ஒன்றியத்தில் கழக இலக்கிய அணி துணைத்தலைவர் ஈரோடு. இறைவன், ஜூலை, 14.
வெள்ளிக்கிழமை கீரப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் தலைமைக்கழக பேச்சாளர், கந்திரி கரிகாலன்
ஜூலை,21,
சனிக்கிழமை கடலூர் கிழக்கு
மேற்கு ஒன்றியங்களில் கழக மகளிரணி பிரச்சார செயலாளர்புதுக்கோட்டை விஜயா.
ஜூலை,22,
ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாநகரம், ஜூலை,23, ந் தேதி
திங்கள்கிழமை
கம்மாபுரம் வடக்கு ஒன்றியம்,
கெங்கைகொண்டான் பேரூர் ஆகிய பகுதிகளில் .தலைமைக்
கழக பேச்சாளர் கரூர். முரளி, ஆகியோரும், கழக முன்னணியினரும் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
நம்மை கழகப் பணிகளுக்கு ஆளாக்கிவிட்ட ஐயன். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்,
அந்தந்த பகுதிகளின் கழக, சார்பு அணி. முன்னால்,உள்ளாச்சி மக்கள் பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்புடன், நிகழ்ச்சிகளை சிறப்புற செய்யுமாறு, மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறாக அதில் அவர் கூறியுள்ளார்.




Comments