கடலூர்: ஏரி தூர்வாரும் பணி - குறைதீர் கூட்டம்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு!!
- உறியடி செய்திகள்

- Apr 15, 2023
- 1 min read

ஏரி தூர்வாரும் பணி - அமைச்சர் அதிரடி ஆய்வு, மக்கள் குறைதீர் கூட்டத்திலும் பங்கேற்பு- பொதுமக்கள் - விவசாயிகள் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாள் ஏரி தூர்வாரும் பணி ஆய்வு மற்றும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்,
மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,

,
முன்னதாக பெருமாள் ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து, திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்திய அமைச்சர் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்த மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்

இக்கூட்டத்தில், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், அரசு அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Comments