கடலூர்: திட்டப் பணிகள். அமைச்சர் கே.என்.நேரு அதிரடி ஆய்வு!! விரைந்து முடிக்கவும் வலியுறுத்தல்!!
- உறியடி செய்திகள்

- Apr 25, 2023
- 1 min read



ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா...
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறைசார்ந்த திட்டப் பணிகளை, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு. தமிழகம் முழுவதும்
சூராவளி சுற்றுப்பயணங்கள் மூலம் அதிரடிஆய்வுகளை மேற்கொண்டு பணிகள் குறித்த விபரங்களையும் கேட்டறிந்து, உரிய ஆலோசனைகள், அறிவுறுத்தல்களையும் துறைஅதிகாரிகளுக்கு வழங்கி உரிய காலத்தில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஒப்படைக்க மாவட்ட ரீதியில் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப்பணிகளை, ஆய்வு செய்துவருகின்றார்.


இன்று ஏப்.25. செவ்வாய்கிழமைகடலூர் மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் தொடர்ஆய்வை மேற்கொண்டார்...
முன்னதாக குறுஞ்சிப் பாடியில் ரூ.4.82. கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், மஞ்சை நகர் பகுதியில் கலைஞர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள். வண்டிபாளையம் பகுதியில் ௹.45.30 லட்சம் மதிப்பீட்டில் சுப்பிரமணியர் குளம், பராமரிப்புப் பணி,புதுக்கூரப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்டத் தொட்டி அமைக்கும் பணி, விருதாச்சலம், பெரியாக்குறிச்சியில். கூட்டு குடிநீர் திட்ட நீர் உந்தும் குழாய்கள் அமைக்கும் பணி,வண்டிப்பாளையம் கரை வேட்டிக்குப்பம் பகுதியில் ௹.2.50. கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் நவீன மயான தகனமேடை கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும்....


தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல கழக பொருப்பாளர்தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என் நேரு, தி.மு.கழக உயர் மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்டச் செயலாளர், தருமபுரி மண்டல கழக பொருப்பாளர் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் . M.R.K. பன்னீர்செல்வம். தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், சி.வெ.கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது பணிகள் நடைபெற்று வரும் குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு பணியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சம்மந்தப்பட்டத்துறை அதிகாரிகளிடம், திட்ட வளர்ச்சிப் பணிகளை உரிய காலத்திற்க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கவும் அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தினார்
எம்.எல்.ஏக்கள்.ராதாகிருஷ்ணன், ராஜரத்தினம் மாவட்ட ஆட்சியர் . பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகர தி.மு.கழக செயலாளர் கே.எஸ்.ராஜா , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாச்சி பிரதிநிதிகள் மாவட்ட,மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.




Comments