கடலூர்; 1 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு பணி! அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்!!
- உறியடி செய்திகள்

- Apr 4, 2023
- 1 min read


கடலூர் மாவட்டம், முழுவதும் தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர். தருமபுரி மண்டல பொருப்பாளர், கடலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு உழவர் நலம் - வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ப்புப் பணிகளை தீவிரபடுத்தி, அறிவுறுத்தல், ஆலோசனைகள், வழிகாட்டுதல் வழங்கினார்.....
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் கூடுதலாக ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டு, பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அதன்படி குமரி முதல் சென்னை வரை தி.மு.கழக நிர்வாகிகள் அனைத்து பகுதி திகளிலும் தீவிர கவனம் செலுத்தி புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணிகளை தீவிரபடுத்தியும் வருகின்றனர்.
இதன் முத்தாய்ப்பாக, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டலப் பொருப்பாளர். தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி- சேலம் உள்ளிட்ட மண்டல வாரியாக தீவிர சுற்றுபயணம் மேற்கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளை தீவிரபடுத்தி வருவது அனைவரும் அறிந்ததே!

இந்நிலையில்,கடலூர் மாநகரம் முழுவதும் நான்கு பகுதிகளிலும் (மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், துறைமுகம்) புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் எழுச்சியோடு நடைபெற்று வருகின்றது. தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தி.மு.கழக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர், தருமபுரி மண்டல பொருப்பாளர் கடலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே..பன்னீர்செல்வம் , தலைமையில் கடலூர் மாவட்டம் முழுவதும் தி.மு.கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு, பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் மாநகர செயலாளர் கே.எஸ் ராஜா, கடலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் த.அருட்செல்வம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல், ஆலோசனைகள், வழிகாட்டலோடு, வட்டச் செயலாளர்களிடம் வழங்கி உறுப்பினர் சேர்த்தல் குறித்து கருத்துறைகளை வழங்கினார்.

இந்நிகழச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா . மாநகர அவைத்தலைவர் பழனிவேல் மற்றும் பகுதி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் மாநகர கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், அனைத்து கழக சார்பு அணியினர் உட்பட பெருந்திரளாக கலந்து கொண்டனர்.




Comments