கடலூர் பகுதியில் மழை - வெள்ளத்தால் பாதிப்பு! நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
- உறியடி செய்திகள்

- Nov 15, 2022
- 2 min read

பருவமழை, வெள்ளம், விவசாயம் பாதிப்பு சுழன்று மக்கள் பணிகளை நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்டோர்களுக்கு ஆறதல் கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்....
கனமழை பாதிப்பு, கடலூரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கடலூரில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து மழையால் பாதித்த விளைநிலங்களை பார்வையிட்டார். மேலும், நிவாரண உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்......
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார உதவிகளை வழங்கினார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளை நிலங்களில் மூழ்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 331.58 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் மூழ்கியுள்ளது. சம்பா நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.....

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 208 கிராமங்களை சேர்ந்த 4655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்துள்ளது. இது போன்று காய்கறி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் 12 கிராமங்களில் 123 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கியுள்ள நிலையில் 190 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்......
மாவட்டத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 271 வீடுகள் மழையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 63 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் தேதி பெய்த மழையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளை பொருத்தவரை ஆடு, மாடு என 108 கால்நடைகள் உயிரிழந்தது.
இரண்டு முகாம்களில் மழையின் பாதிப்பு காரணமாக 100க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 43 கிலோ மீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 62 இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை, ஜெயங்கொண்டபட்டினம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் 231 குடியிருப்பு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன
கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளுக்குட்பட்ட கூரைவீடு பகுதிகளில் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4100/- வீதம் 41,000 ரூபாயும், முழுமையாக கூரைவீடு சேதமுற்ற ஒரு பயனாளிக்கு 5000 ரூபாயும், ஓட்டு வீடு பகுதி சேதமடைந்த 2 பயனாளிகளுக்கு தலாக் ரூ.5.200/- வீதம் 10,400 ரூபாயும், கால்நடையை இழந்த ஒரு பயனாளிக்கு 16,000 ரூபாயும், என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.72,400/- மதிப்பிலான நிவாரண உதவிகளையும், வேட்டி. புடவை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரணப் பொருட்களையும் நேரில் ஆய்வு செய்த, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்.......

அதைத் தொடர்ந்து கனமழையினால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் வட்டம், வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார். அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழையால் அதிகமாக பாதிக்கப்படும் மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. இந்தாண்டு பருவமழையின் தொடக்கத்திலேயே அதிக மழைப்பொழிவின் காரணமாக இம்மாவட்டம் அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிஞ்சிப்பாடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக
வும் கூறப்படுகிறது....

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட கீழ்பவானிகுப்பத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், தண்ணீர் சூழ்ந்த விளை நிலங்களை முதல்வர் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வீடுகள் எந்தெந்த பகுதிகளில் சேதமடைந்துள்ளன, சாலைகளில் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, தி.மு.கழக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக,செயலாளர், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், அமைச்சர், எ.வ.வேலு, மற்றும்,நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் - அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.




Comments