கடலூர், ரூ.34யில், 100படுக்கை வசதி புதிய கட்டிடம்!அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்
- உறியடி செய்திகள்

- Apr 16, 2023
- 2 min read

ஆசிரியர். மணவை, எம்.எஸ்.ராஜா.
15. சனிக்கிழமை நேற்று
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு அடிக்கல் நாட்டி, தி.மு.கழக அரசில் மக்கள் - வேளாண். உழவர் நல திட்டங்கள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்டியலிட்டு பேசினார்....

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 100 படுக்கை வசதி கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டும் பணிக்காக ரூபாய்.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்க்கான கட்டுமானப் பணியை தொடங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், தருமபுரி தி.மு.கழகமண்டல பொருப்பாளர். கடலூர் மாவட்ட தி.மு.க கழகசெயலாளர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில்.....

தி.மு.கழக ஆட்சிப்பொருப்பை தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஏற்றபோது கொரோனா பேரிடர் நோயை கட்டுப்பாத்தி, நோய் பரவலையும் கட்டுப்படுத்தி, தேவையான அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்புகள், நோயாளிகள், பொதுமக்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை மிகவும் எளிமையாக கிடைக்கும் வகையில் திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டு, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், உள்ளிட்ட அனைத்துத்தர மருத்துவமனைகளையும் மேம்படுத்தும் பணியை முடுக்கிவிட்டு, பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுகாதார - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,மா.சுப்பிரமணியமும் முதல்வரின் மக்கள் நலன் காக்கும் மருத்துவதிட்டங்களை சரியாக உள்வாங்கி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் அனைத்து கட்டமைப்புகளையும் துரிதபடுத்தியும் வருகின்றார்......

தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், கழகத் தலைவர் அனைத்துத்துறைகளை தட்டி எழுப்பி முழுமையாக மக்கள்நலப்பணிகளில் ஈடுபடுத்தியும் வருகின்றார்.
அந்தவகையில் தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறைக்கு....
தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி.மு.க.ஸ்டாலின் தலைமையில், கடிகஆட்சி அமைந்த பிறகு தொலைநோக்குப் பார்வையுடன், நீண்ட கால திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறுதானிய இயக்கம்
காய்கறி மற்றும் கீரை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கும் திட்டம்......


ட்ரோன்கள் மூலம் இடுபொருட்களை வழங்கும் திட்டம்.
மானாவாரி சாகுபடி மேற்கொள்ளும் உழவர்களின் நலனை உயர்த்தும் வகையில் ‘முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்’ 3 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது.
சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் விவசாயிகளுக்கு 60,000 வேளாண் கருவிகள் வழங்கிட ரூ.15 கோடி ஒதுக்கீடு.
14,400 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலான அங்கக வேளாண்மைக் கொள்கை வெளியீடு.
திருச்சி – நாகை இடையே ரூ.1000 கோடியில் வேளாண் பெருந்தொழில் தடம்.
உயர்தர வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் 150 முன்னோடி விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம்.
53,400 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகள் ஏற்படுத்த 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
வேளாண் பொருட்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்து கொள்ள தனி செயலி.
என திமுக அரசு வேளாண்மைக்கு தனிக் கவனம் செலுத்தி வருவது வேளாண் பெருங்குடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை வேளாண் பெருங்குடி மக்களின் நலனிலும் தனி அக்கறை கொண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
முன்னதாக பெருமான் ஏரி தூர்வாரும் பணியை பார்வையிட்டதுடன், அங்கு நடைபெற்ற உழவர்கள் - பொதுமக்கள் குறை நீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
உடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் , கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் , கடலூர் மாநகராட்சி மேயர் கடலூர் மாநகர திமுக செயலாளர் அ, துணை மேயர் , மாமன்ற உறுப்பினர்கள் ,பகுதி செயலாளர்கள் ,மண்டல குழு தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Comments