கடலூர்: குறிஞ்சிப் பாடி அருகே பள்ளி நூற்றாண்டு விழா! அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு!!
- உறியடி செய்திகள்

- Apr 28, 2023
- 1 min read

கடலூர் குறிஞ்சிப் பாடி அருகே பள்ளி நூற்றாாண்டு வளைவு!
அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் திறந்துவைத்து, விழா மலரையும் வெளியிட்டார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பூண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தி.மு.கழக உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நூற்றாண்டு விழா வளைவை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலர் வெளியிட்டு, விழாப்பேருரை ஆற்றினார்கள் .


விழாவில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் முதன்மை கல்வி அலுவலர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நாராயணசாமி அவர்கள் வடலூர் நகர மன்ற தலைவர், குறிஞ்சிப்பாடி பேரூர் கழக செயலாளர், வடலூர் நகர கழக செயலாளர்,கடலூர் மாநகர கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இப்பகுதி பொதுமக்கள் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.




Comments