சாத்தூர் அருகே தலித் கிறிஸ்தவர்கள் திருவிழாவுக்கு இடையூறு! முதல்வர் அமைச்சர்களுக்கு கோரிக்கை!!
- உறியடி செய்திகள்

- Apr 30, 2023
- 2 min read

சாத்தூர் அருகே மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் ஆலைய திருவிழா - தேர்பவனி இன்று நடைபெறுமா?
முதல்வர், அமைச்சர்கள், உதவிட வேதனையுடன் வேண்டுகோள்!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையை அடுத்த இ.ராமநாதபுரம் என்கிற மடத்துப்பட்டியில், சுமார்500,கும் மேற்பட்ட பெரும்பான்மையான ஆதிக்கசாதியினர் குடும்பங்கள் வாழும் நிலையில் ஊரின் ஒரு பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் வகிக்கும் பகுதியில், மதம் மாறியதலித் கிறிஸ்தவர்களும் வசித்து வருகின்றார்கள்.
இப்பகுதியில் ஒத்தையாள் தாய் பங்குக்குட்பட்ட புனித சூசையப்பர் ஆலையம் உள்ளது, இதில் ஆண்டுதோறும் ஏப்.28ந் தேதி திருவிழா, திருப்பலியுடன் கொடியேற்றப்பட்டு, நிறைவாக 30. ந் தேதி புனித சூசையப்பர் சப்பர தேர்பவனி வருவது வழக்கம் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சங்பரிவார சனாதிவாதிகள் சிலரால் பொதுப்பாதையை ஆக்கிரமித்துகொண்டுடதுடன், 1985. ஆண்டு, வழக்கம்போல் மதம் மாறியதலித் கிறிஸ்தவர்களின்,சப்ரபவனி வரக்கூடாது என்று சங்பாரிவார சனாதனவாதி யால்,மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் வழக்கப்போல எப்பொழும் செல்லும் நடுத்தெருவழியாக தேர்பவனி செல்லாம் என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கவனிக்கவும் உத்தரவிட்டடுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த கொரனாகாலங்களில் ஊர்வலம், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட அரசின் தடை திரும்ப பெறபட்டதையடுத்து, தற்போது மீண்டும் தலித் கிறிஸ்தவர்கள் தேர்பவனி திருவிழா நடத்த பங்குதந்தையார் தலைமையில் உரிய ஏற்பாடுகளை செய்து நிலையில்,
அப்பகுதி சன் பரிவாரசனாதன பிரமுகர்கள் மீண்டும், காவல்துறையினர் மூலம் நடுத்தெருவழியாக புனித சூசையப்பர் திருவிழாதேர் பவனி வரக்கூடாது, என்று சம்மந்தப்பட்ட விழாக்குழுவினர் சிலரை காவல்நிலையத்திற்கு அழைத்து கூறியதுடன், மாற்றுப்பாதையாக, தேர், பொதுமக்கள் ஊர்வலமாக செல்லபோதியவசதி, பாதுகாப்பில்லாத ஒரு பகுதியைக் கூறிஇதில்தான் உங்கள் சாமி தேர்பவனிஊர்வலம் செல்ல வேண்டும் என்று கூறி வற்புறுத்தி வருவதாகவும் கூறும் அப்பகுதியினர்....


சமீபத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மதம் மாறியதலித் கிறிஸ்தவர்களான எங்கள் வாழ்வுரிமை, கலாசாரம், வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசி எங்களுக்கும் சம உரிமை கிடைக்கச் செய்த நிலையில்,
தற்போது இன்று ஏப்.30. இரவு வழக்கம்
போல் திருவிழா சிறப்பு திருப்பலி முடிந்து பின் புனித சூசையப்பர் தேர்பவனியை தடைசெய்யவும், இடையூறும் செய்ய
பி.ஜே .பி. ஆதாரவாளர்கள் சிலரின் ஆதரவாக செயல்படுவது மிக வேதனையாக உள்ளது.

மேலும் கோவில் விழா அனுமதிக்கே எங்களை ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தார் பெரும் அலைக்கழிப்பு ஆளாக்கியது மிகவும் வேதனையளிக்கின்றது.
எனவே இன்று ஏப், 30.இரவு புனித சூசையப்பர் தேர்பவனி வழக்கம்போல் நடுத்தெருவழியில் செல்ல....
எல்லோருக்கும் எல்லாம் எனும் கொள்கையோடுதிராவிடல் மாடல் ஆட்சியை நடத்தி வரும் தமிழக முதல்வரும் மாவட்டத்திலுள்ள, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோர் உதவிட வேண்டும், நடுத்தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அகற்றித்தர வேண்டும்என்று வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.....
சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி மறுப்பதைப்போல செயல்படுகின்ற, சம்மந்தப்பட்ட பகுதி காவல்துறையினர் இனியாவதுமுதல்வரின் அறிவிப்பை முழுமையாக அறிவார்களா? மனிதநேயத்துடன் மதம் மாறியதலித் கிறிஸ்தவர்கள் பண்பாடு கலாச்சாரம் காக்கப்படுமா?
பொருத்திருந்திருந்து பார்ப்போம்!




Comments