தேவர் குருபூஜை விழா! முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!! விழா பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!!
- உறியடி செய்திகள்

- Oct 27, 2022
- 1 min read

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நடைபெறுவது வழக்கம்....
முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி, 60-வது ஆண்டு குருபூஜை விழா அக் 28. கும்பாபிஷேகம்-ஆன்மீக விழா - யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது....அடுத்தநாளான29 -ம்ந்தேதி வழக்கமான பூஜைகள் - அரசியல் விழாவாகவும் நடைபெறுகிறது.....
வருகிற அக்.30. ந் தேதி இவ்விழா அரசு விழாவாக கொண்டாடபடுகின்றது. இங்கு நடைபெறும் விழாக்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பொதுமக்கள், பால்குடம், காவடி, முளைப்பாறி, வேல் மற்றும் ஜோதிகளை எடுத்து வந்து தேவர் நினைவிடத்தில் செலுத்தி வணங்குவது வழக்கமாகும்...
அக்.30-ந் தேதி நடைபெறும் அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில், தி.மு.கழக தலைவர், தமிழ்நாடு முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வருகிறார்....

இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் - தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள்,சமுதாய தலைவர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னால், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்....
இதற்கான முன்னேற்பாடு, பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கமுதி ஆயுத படைமைதான கூட்டரங்கில் நடைபெற்றது. மண்டல,மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்......

அதனையடுத்து குருபூஜை விழாவில், 5.டி.ஐ.ஜிக்கள், 30 - எஸ்.பிக்கள், தலைமையின்கீழ் 10 ஆயிரம் போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபடுவதுடன், முக்கிய 13.இடங்களில் சி.சி.டி.வி.கேமராக்கள் அமைக்கவும், உயர்கோபுரங்கள் அமைத்தும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும், இது தவிர 13. ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தவுள்ளதாகவும், தேவையான இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கபட்டு அனுமதித்த வழித்தடங்களில், அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டும் அனுமதிப்பதுடன், வாகனங்களின் மேற்கூரை பகுதிகளில் ஏறி, இடையூறு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகின்றது....
மணவை, எம்.எஸ்.ராஜா.....




Comments