top of page
Search

வளர்ச்சி திட்டங்கள் - மருத்துவ திட்டங்களில் முதல்வர் தனி கவனம்! மருத்துவ இயக்குநர் கணேஷ் பேச்சு!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 5, 2023
  • 2 min read
ree
ree

ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா.

வளர்ச்சித் திட்டங்கள்-மருத்துவ திட்டங்கள் மட்டுமின்றி அடிப்படை வசதிகள், நீர்நிலை ஆதாரங்கள் பெருக்கம், விவசாயம் காப்பதில் முதல்வர் தீவிர காட்டி வருகின்றார். எனவே மாவட்ட அலுவலர்கள் விரைந்து துறைரீதியான வளர்ச்சிப் பணிகளை உரிய காலத்தில், உயர்ந்த தரத்தில் நிறைவேற்ற முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று, இந்திய மருத்துவம், தமிழ்நாடு ஹோமியோ துறை இயக்குநர் எஸ்.கணேஷ் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம்

சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் குறித்து

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ்,

மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, முன்னிலையில்

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன்

கலந்தாய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், தலைமையில் நடைபெற்றது........

மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, முன்னிலை வகித்தார்,......

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், கூறியதாவது...........

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், உள்ளிட்ட அனைத்து மக்களின் நலனில் மிகுந்த அக்கரைகொண்டு, தனி கவனத்துடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ree

அதன்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வாரிட, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் கோட்டம், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக்கோட்டம், புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்டம் ஆகிய 3 கோட்டங்கள் வாயிலாக ரூ.2.69 கோடி மதிப்பீட்டில் 96.69 கி.மீ நீளத்திற்கு 31 பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் 32.90 கி.மீ. நீளமுள்ள வழங்கு வாய்க்கால் மற்றும் வழிந்தோடி வாய்க்கால்களில் 14 பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணியினால் 3142.56 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசனவசதி பெறும்.

ree

கல்லணைக்கால்வாய் வடிநிலக்கோட்ட கட்டுப்பாட்டில் 62.29 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள், வழங்கு வாய்க்கால் மற்றும் வழிந்தோடி வாய்க்கால்களில் 16 பணிகள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணியினால் 27,029 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசனவசதி பெறும். அக்னியாறு வடிநிலக்கோட்ட கட்டுப்பாட்டில் 1.50 கி.மீ. நீளமுள்ள வடிகால் வாய்க்காலில் 1 பணி ரூ.0.19 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது......

ree

இந்த தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பாசனத்திற்கு தேவையான நீர் மற்றும் நீர் நிலைகளுக்கு வந்துசேரும் நீரானது தங்குதடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும். மேலும் இப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்காக பணிகள் நடைபெறும் இடங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், நீர்வளத்துறையின் பொறியாளர்கள், வேளாண்துறை அலுவலர்கள், கிராம நிருவாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோரை உள்ளடக்கி உழவர் குழு தொடங்கப்பட்டுள்ளது.

ree

இதன்மூலம் நாள்தோறும் பணி முன்னேற்றம் குறித்து ஆலோசித்து, விவசாயிகளுக்கு தங்குதடையின்றி பாசனத்திற்கு அதிக அளவில் நீர் கிடைக்கும் வகையில் சிறப்பு தூர்வாரும் பணிகளை ஒருங்கிணைந்து விவாசாய உற்பத்திப்பெருக்கும் வகையில்பணியாற்ற வேண்டும்.......

இதனைபோலவே, இந்தியாவிலே சித்த ஆயுர்வேதம், இந்திய மருத்துவம் உள்ளிட்ட, பாரம்பரிய நமது கலாச்சாரம் சார்ந்தமருத்துவம் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில்,

தாயுள்ளத்துடன். இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மீட்டெடுத்தவருகிறார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் சித்த மருத்து பல்கலைகழகம் ஏற்படுத்துவதில் முதல்வரின் வழிகாட்டல். அறிவுறுத்தலின்படி நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதற்கான பணிகளில்முனைப்புடன் தீவிர காட்டியும் வருகிறார்.....

 தாயுள்ளத்துடன். இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மீட்டெடுத்தவருகிறார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் சித்த மருத்து பல்கலைகழகம் ஏற்படுத்துவதில் முதல்வரின் வழிகாட்டல். அறிவுறுத்தலின்படி நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதற்கான பணிகளில்முனைப்புடன் தீவிர காட்டியும் வருகிறார்......

ree

இதன்மூலம் நாள்தோறும் பணி முன்னேற்றம் குறித்து ஆலோசித்து, விவசாயிகளுக்கு தங்குதடையின்றி பாசனத்திற்கு அதிக அளவில் நீர் கிடைக்கும் வகையில் சிறப்பு தூர்வாரும் பணிகளை ஒருங்கிணைந்து விவாசாய உற்பத்திப்பெருக்கும் வகையில்பணியாற்ற வேண்டும்.......

இதனைபோலவே, இந்தியாவிலே சித்த ஆயுர்வேதம், இந்திய மருத்துவம் உள்ளிட்ட, பாரம்பரிய நமது கலாச்சாரம் சார்ந்தமருத்துவம் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில்,

 தாயுள்ளத்துடன். இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மீட்டெடுத்தவருகிறார். அதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் சித்த மருத்து பல்கலைகழகம் ஏற்படுத்துவதில் முதல்வரின் வழிகாட்டல். அறிவுறுத்தலின்படி நமது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதற்கான பணிகளில்முனைப்புடன் தீவிர காட்டியும் வருகிறார்.....

ree

ree

இவ்வாறு இந்திய மருத்தும், தமிழ்நாடு ஹோமியோ இயக்குநர் கணேஷ் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) கனிமொழி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்...

தோகைமலை ராஜா....

Comments

SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page