தூத்துக்குடி மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள்! அமைச்சர் கே.என்.நேரு அதிரடி கள ஆய்வு!!
- உறியடி செய்திகள்

- Jan 2, 2023
- 1 min read

மணவை.எம்.எஸ்.ராஜா.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி தொடர் ஆய்வு! பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தல்கள் வழங்கி பணிகள் நடைபெ,றும், பகுதிகளிலும் நேரிலும் தொடர் கள ஆய்வு !!
தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகள் மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.....

இதில் நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூரில் செயல்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது, இங்கு தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல பொருப்பாளர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அதிரடி ஆய்வு மேற்க்கொண்டார்.....

அப்போது அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும் முறைகள், சுத்திகரிப்பு நிலைய பராமரிப்புகளையும் நே ரில் பார்வைஆயிட்டு ஆய்வு மேற்மேற்கொண்டார். இதனை தொடர்ந்து சுற்றுப்புறவாய்க்கால்கள், கழிவு.நீர்வழி பாதைகள். தேங்கியுள்ள கழிவுகளை பார்வையிட்டு உடனடியாக அகற்றிடவும், சுத்திகரிப்பு செய்யப்படும் முறைகள் மேலும் சரியான முறையில் இயக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.


இதனை தொடர்ந்து, ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூத்துக்குடி பேருந்துநிலைய கட்டுமானப்பணிகளையும் சுற்றுப்புறங்களைங்களையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர்,பேரூந்து நிலையத்தை பொதுமக்களின் வசதிக்களுக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படுவது குறித்தும் அதிகாரி களிடம்,மேலும்,ஆலோசனை மேற்கொண்டார். பேருந்துநிலைய கட்டுமானப்பணிகளை,விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் முழுப் பயன்பாட்டுக்க கொண்டுவருதில் பணிகளை துரிதபடுத்துமாறும் அதிகாரி களை வலியுத்தி ஆலோசனைகளும் வழங்கினார்......

இதனை தொடர்ந்து திருச்செந்தூர் நகராட்சி சந்தை வளாக கட்டுமானப் பணிகளையும், நேரில் பார்வையிட்டு,ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், துரிதமாக பணிகளை முடித்திட அறிவுறுத்தி, ஆலோசனைகளையும் வழங்கினார்....
தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியில் முடிவுறும் நிலையில் உள்ள,தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்தகொண்ட அமைச்சர் கே .என்.நேரு பணிகள் குறித்தும் தற்போதைய பணிநிலவரங்கள் குறித்தும் துறை அதிகாரிகள், அலுவலர்களின் கருத்துக்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். தொடர்ந்து ஆறுமுகநேரி பேரூராட்சியில், தேங்கியுள்ள குப்பைகளை துரிதமாக அகற்றுவதற்கு ஏதுவாக குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களையும் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர்கள், சமூக நலன் மகளீர் உரிமைத் துறை அமைச்சர் பெ.. கீதாஜீவன்,தமிழக மீனவர் நலன் - கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகர மேயர் பெ.ஜெகன் பெரியசாமி. உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளாச்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடன் சென்றார்கள்.




Comments