கோலி தந்த தீபாவளி! உற்சாக கொண்டாட்டத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்!!
- உறியடி செய்திகள்

- Oct 23, 2022
- 1 min read

ஐசிசி டி20 போட்டியில். இந்தியாவுக்கு கோலி தந்த தீபாவளி!
உலகக்கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளான இந்தியா-பாகிஸ்தான் போட்டியில், இந்தியா பாகிஸ்தானிடம் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரோலியாவில், நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமை முறையே 4 மற்றும் 0 என வந்தவேகத்தில் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பியது இந்தியா.
எனினும் ஒன் டவுனாக களமிறங்கிய ஷான் மசூத் மற்றும் டூ டவுனாக களமிறங்கிய இப்திகார் அகமதுவும் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை மீட்டெடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஷான் மசூத் 52 ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.
இவர்கள் இருவரும் அவுட்டான நிலையில், அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆடுகளத்திலிருந்து. வெளியேறின நிலையில், 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்
இதையடுத்து 160 ரன்கள் எனும் எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் தலா 4 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பனார்கள்...
ஒன் டவுனாக களமிறங்கிய விராட் கோலி ஒருபக்கம் நிலைத்து நின்று ஆடினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களிலும் அக்சர் படேல் 2 ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். எனினும் அடுத்து 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்த நிலையில், இருவரும் நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்தனர்.........

தினேஷ் கார்த்திக் 5வது பந்தில் அவுட்டாக, கடைசி ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவை எனும் பரபரப்பான சூழல் நிலை ஏற்பட்டது.
கடைசி பந்துக்கு அஸ்வின் களமிறங்கிய நிலையில், பாகிஸ்தான் வீசிய பந்து ஒய்டுடாக மாறியதால்,ஒரு ரன்னை பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அஸ்வின் 1 ரன் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய த்ரில் வெற்றி பெற்றது. விராட் கோலி அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.




Comments