top of page
Search

தி.மு.கழகம் ஆரிய ஆதிக்கத்திற்குத்தான் எதிரி! ஆன்மீகத்திற்கு இல்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 24, 2023
  • 6 min read
ree

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா....


தி.மு.கழகம் ஆரிய ஆதிக்­கத்திற்­குத்­தான் எதி­ரி­; ஆன்­மிகத்திற்கு நிச்­ச­ய­மாக அல்ல” தி.மு. கழ­கத் தலை­வர், முத­ல்வர் மு.க.ஸ்டாலின் திட்­ட­வட்டம்.!


தி.மு. கழ­கத் தலை­வ­ருர் தமிழ்நாட்டின், முத­ல­மைச்­ ச­ர் மு.க.ஸ்டாலின் தி.மு. கழ­கத் தக­வல் தொழில்­நுட்ப அணி சார்­பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்­கிலோ இந்­தி­யன் பள்ளி வளா­கத்­தில் நடத்­தப்­பட்ட “#Wing2Point0 – சமூக வலை ­த­ளத் தன்­னார்­வ­லர்­கள் சந்­திப்­பு”-­ல் கலந்­து­கொண்­டார்.!


முன்­ன­தாக, கழக இளை­ஞ­ர­ணிச்செய­லா­ளர் - அமைச்சர் உத­ய­நிதி ஸ்டாலின் முன்­னெ­டுப்­பில் மாண­வ­ரணி மற்­றும் மருத்­து­வ­ ர­ணி­யு­டன் இணைந்துநடத்­தப்­­படும் நீட் தேர்­வுக்கு எதி­ரான கையெ­ழுத்து இயக்­கத்­தில் தமது கையெ­ழுத்­தை­யும் பதிவு செய்­தார்.!

ree

தொடர்ந்து நி­கழ்­வில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : –


, “சோஷி­யல் மீடி­யா­வில் தீவி­ர­மாக செயல்­ப­டும் தன்­னார்­வ­லர்­கள் உங்­க­ளைச் சந்­திக்க வேண்­டும்” என்று கூறினார்கள். சொன்ன உடன், “அவர்­க­ளைச் சந்­திக்க நான்­தான் மிக­வும் ஆசை­யாக இருக்­கி­றேன்” என்று சொல்லி, உங்­க­ளைச் சந்­திக்க வந்­தி­ருக்­கி­றேன். என்­னு­டைய பெயர் – நான் யார், என்­னு­டைய பயோ-­டேட்டா என்ன எல்­லாம் உங்­க­ளுக்கு நன்­றாக தெரி­யும். ஆனால், உங்­க­ளில் பல­ரின் பெயர் கூட எனக்­குத் தெரி­யாது.!


சில­ரின் ஃபேஸ்­புக் – ட்விட்­டர் ஐடி தெரி­யும். ஆனால், அது இவர்­கள்­தான் என்று தெரி­யாது.பெரும்­பா­லும், உங்­கள் அனை­வ­ரின் பதி­வு­க­ளை­யும் என்­னு­டைய டைம்­லை­னில் படித்­தி­ருப்­பேன்; ரசித்­தி­ருப்­பேன்; சில நேரம், “அடடா! எவ்­வ­ளவு நன்­றாக எழு­தி­ யி­ருக்­கி­றார்­கள்” என்றும் வியந்­தி­ருக் ­கி­றேன்,

சிலர் நீண்ட பதி­வு­கள் எழு­து­வீர்­கள். சிலர் இரத்­தி­னச் சுருக்­க­மாக, க்ரிஸ்ப்­பாக எழு­து­வீர்­கள். சிலர் மீம்ஸ் போடு­வீர்­கள். சிலர் பழைய வர­லாற்­றை­யெல்­லாம் மறு­ப­டி­யும் ஞாப­கப்­ப­டுத்­து­வீர்­கள். இவ்­வாறு ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் ஒரு ஸ்டைல்!

ஆனால், அது எல்­லாமே தி.மு.கழகத்தின். ஸ்டைல்! ,

ree

உங்­கள் ஊர் - பெயர் தெரி­ய­வில்லை என்­றால் என்ன? நாம்எல்­லோ­ரும் தி.மு.க.காரர்­கள்­ தானே! முத்தமிழறிஞர் தலை­வர் கலை­ஞ­ரின்உடன்­பி­றப்­பு­கள்­தானே! உங்­க­ளில்ஒரு­வன்­தான் நானும்!

இந்த பந்­த­மும் – பாச­மும் மட்­டும் என்­றைக்­கும் மாறவே மாறாது! என் டைம்­லை­னில் சில­ரின் பதி­வு­கள் மிஸ் ஆனா­லும், ஐ.டி.விங், செய்­தித் துறை, உள­வுத்­துறை, என்­னு­டைய நண்­பர்­கள் என்று பல­ரும் உங்­க­ளின் பதி­வு­களை எனக்கு அனுப்பி வைத்­துக் கொண்­டு­தான் இருக்­­கிறார்­கள்.!

நான் உங்­க­ளின் ஃபாலோ­யர்! பார்க்­கா­ம­லேயே நண்­பர்­க­ளாக இருந்த கோப்­பெ­ருஞ்­சோ­ழ­னும் பிசி­ராந்­தை­யா­ரும் போல­தான் நம்­மு­டைய நட்­பும் உற­வும்! அந்த நட்­பு­ணர்­வோ­டு ­தான் உங்­களை நான் இங்கு நேரில்பார்க்க வந்­தி­ருக்­கி­றேன்.!

இந்­தச் சந்­திப்­பில் நான் ஷேர் செய்­யும் செய்­தி­களை நீங்­கள் லைக் செய்­வீர்­கள் என்று நம்­பு­கி­றேன். லைக் செய்­தால் மட்­டும் போதாது, அதை நீங்­கள் ரீ-ஷேர் செய்ய வேண்­டும்!

ree

கரை வேட்டி கட்­டி­ய­வர்­கள் – கட்­டா­த­வர்­கள் என்று தி.மு.க.காரர்­க­ளைத் தலை­வர் கலை­ஞர் இரண்டு வகைப்­ப­டுத்­து­வார். சிலர் நேரடி அர­சி­ய­லில் ஈடு­பட மாட்­டார்­கள். ஆனால், வாய்ப்பு கிடைக்­கும்­போது எல்­லாம், ”தமி­ழி­னத்­தின் மீட்­சிக்­காக உரு­வான இயக்­கம் தி.மு.க. தான்!” என்று உரக்­கச் சொல்­லு­வார்­கள்!

கரை வேட்டி கட்­டி­ய­வர்­கள், சிங்­கிள் டீ குடித்­து­விட்டு வேலை பார்ப்­பார்­கள் என்­றால், கரை வேட்டி கட்­டா­த­வர்­கள், எலக்‌ஷன் நேரத்­தில், வாடகை சைக்­கிள் எடுத்­துக்­கொண்டு உத­ய­சூ­ரி­ய­னுக்கு வாக்குகள் கேட்டு செல்­வார்­கள். இந்த பாரம்­ப­ரி­யத்­தின் அப்­டேட்­டட் வெர்­ஷன்­தான் நீங்­கள்!


கட்­சிக்கு அர­ணாக இருக்­கும் கரை வேட்டி கட்­டி­ய­வர்­கள், போர்­வாள்! இணை­யத்­தில் இயக்­கத்­துக்­காக உணர்­வுப்­பூர்­வ­மாக போரா­டு­கிற நீங்­கள், ஃபயர்­வால்! சில­ச­ம­யம் கழ­கத்­தின் முடி­வு­கள் மற்­றும் செயல்­பா­டு­களை விமர்­ச­னம்செய்து எழு­து­கி­றீர்­கள். உங்­க­ளின் விமர்­ச­னத்தைANTI-வைரஸ் அலர்ட்­டா­கத்­தான் நான் பார்க்­கி­றேன். கழ­கத்தை விமர்­சிக்க மற்ற எல்­லா­ரை­யும் விட, கழ­கத்­தில் இருப்­ப­வர்­க­ளுக்­குத்­தான் அதிக உரிமை இருக்­கி­றது. இந்த உரிமை நம்­மால் - நம்­மு­டைய உற­வால் வந்­தது! அந்த உற­வுக்கு என்­றைக்­கும் குந்­த­கம் வந்­து­வி­டக் கூடாது என்று கட­மை­யு­ணர்­வோடு எச்­ச­ரிக்­கை­யாக செய­லாற்­று­வ­து­தான் என்­னு­டைய நன்­றி­யின் வெளிப்­பா­டாக இருக்­கும்!

ree

தலை­வர் கலை­ஞர் ஒரு­முறை சொன்­னார், “நான் பக்­கு­வப்­பட்ட காலத்­தில் பிறந்­த­வன் ஸ்டாலின்’ என்று சொன்­னார். தலை­வர் கலை­ஞர் நிறைந்­து­விட்ட பிறகு, கழ­கத்­தின் தலை­வ­ரா­க­வும் - தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­க­வும் இன்­னும் பொறு­மை­யாக நடந்து கொள்ளஎன்னை நானே பக்­கு­வப்­ப­டுத்­திக் கொண்­டேன்.

விமர்­ச­னங்­க­ளை­யும் வர­வேற்­கி­றேன்!

தந்தை பெரி­யார் - பேர­றி­ஞர் அண்ணா - தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் – வகுத்­துத் தந்த பாதை­யில் கழ­கத்­தை­யும் கழக அர­சை­யும் நடத்­து­வ­து­தான் என்­னு­டைய முழு­மு­தல் இலக்கு! அத­னால் பாராட்­டு­க­ளைப் போலவே, விமர்­ச­னங்­க­ளை­யும் நான் வர­வேற்­கி­றேன்.

அது இன்­னும் என்­னைப் பக்­கு­வப்­ப­டுத்­திக் கொள்ள உத­வு­கி­றது. உங்­க­ளின் விமர்­ச­னத்­தில் தனிப்­பட்ட நல­னை­விட, பொது­ந­லன்­தான் அதி­க­மாக இருக்­கும். நல்ல நோக்­கத்­தோடு – பொது நம்­பிக்­கைக்­காக நீங்­கள் வைக்­கும் ஆலோ­ச­னை­களை மனப்­பூர்­வ­மாக வர­வேற்­கி­றேன். அந்த எண்­ணத்­தோ­டு­தான் உங்­க­ளோடு உரை­யாட விரும்­பு­கி­றேன்.!

ree

நம்­மு­டைய இயக்­கம் பேசிப் பேசி – எழுதி எழுதி – வளர்ந்த இயக்­கம். சமு­தா­யத்தை உயர்த்­தக் கூடிய - இன­மான எழுச்­சி­யைத் தட்­டி­யெ­ழுப்­பக் கூடிய – மொழி உணர்வை ஊட்­டக் கூடிய வகை­யில் நம்­டைய பேச்­சு­க­ளும் எழுத்­து­க­ளும் இருந்­தன; இப்­போ­தும் இருக்­கி­றது; அவ்­வா­று­தான் எப்­போ­தும் இருக்­கும்!


200-க்கும் மேற்­பட்ட பத்­தி­ரிகை­கள், ஏரா­ள­மான நாட­கக் குழுக்­கள், இசைக்­கு­ழுக்­கள் – பாட­கர்­கள் என்று சாமா­னி­யர்­க­ளின் மிகப்­பெ­ரிய பட்­டா­ளமே இந்த இயக்­கத்­துக்­காக உழைத்­தது. அவ்­வாறு, நானும் இயக்­கத்­தில் வந்து சேர்ந்து, நாட­கங்­க­ளில் நடிக்­கத் தொடங்­கி­னேன். நாட­கம் மட்­டுமா, ஸ்கூல் பைய­னாக இருக்­கும்­போதே முர­சொ­லிக்­காக வேலை பார்த்­தேன். கழ­கச் செய்­தி­க­ளைத் தொகுத்து எழு­திக் கொடுப்­பேன்.

நாளி­தழ்­களை ரயில் நிலை­யங்­க­ளுக்கு கொண்டு சென்று அனுப்பி வைப்­பேன். ’இளைய சூரி­யன்’ என்ற பத்­தி­ரி­கையை சொர்­ணத்தை பொறுப்­பா­சி­ரி­ய­ரா­கக் கொண்டு அதைத் தொடர்ந்து நடத்­தி­னேன்.! ’முரசே முழங்கு’, ‘திண்­டுக்­கல் தீர்ப்பு’ போன்ற நாட­கங்­க­ளில் ஊர் ஊரா­கச் சென்று நடித்­தி­ருக்­கி­றேன். ’ஒரே ரத்­தம்’ திரைப்­ப­டத்­தில் ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கா­கக் குரல் கொடுக்­கும் ’நந்­தக்­கு­மார்’ கேரக்­ட­ரில் நடித்­தேன். மக்­கள் ஆணை­ யிட்­டால் திரைப்­ப­டத்­தில் ஒரு சிறப்பு ரோல். ‘ஆற அமர கொஞ்­சம் யோசித்­துப் பாரு, நீ அடுத்து வரும் தலை­மு­றையை சிந்­தித்­துப் பாரு‘ என்று கலை­ஞர் எழு­திய பாடலை பாடி அதில் நடித்­தேன். குறிஞ்சி மலர், சூர்யா போன்ற சீரி­யல்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றேன். இவ்­வாறு, எல்லா வித­மான ஊட­கங்­க­ளி­லும் வேலை பார்த்­த­வன் நான்!

ree

இப்­போது, ஃபேஸ்­புக், யூடி­யூப், வாட்ஸ்­அப், ட்விட்­டர், இன்ஸ்­டா­கி­ராம் என்று சமூக ஊட­கங்­க­ளி­லும் கழ­கக் கொள்­கை­களை எதி­ரொ­லித்­துக் கொண்டு இருக்­கி­றேன்.

சமூக ஊட­கங்­க­ளில் இருக்­கும் அட்­வான்டேஜ்என்ன என்­றால், இதில், மக்­க­ளின் ரியாக்‌ஷனை உடனே தெரிந்து கொள்­ள­லாம். ஒரு கருத்­தைச் சொன்­னால் - உடனே ஆத­ரித்­தும், எதிர்த்­தும், வாழ்த்­தி­யும், திட்­டி­யும். அவ­தூறு பரப்­பி­யும் ஆயி­ரக்­க­ணக்­கான கமெண்ட்ஸ் வந்­து­வி­டு­கி­றது. நம்­மு­டைய கருத்­து­கள் நொடி­யில் கோடிக் ­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்­குச் சென்று சேர்ந்­து­வி­டு­கி­றது.!


’முரசே முழங்கு’ நாட­கத்­தின் வெற்றி விழா நிகழ்ச்­சிக்கு ரோடு ரோடாக ரிக்‌ஷா­வில் சென்று போஸ்­டர் ஒட்­டி­ய­வன் நான். ஒரு­முறை போஸ்­டர் ஒட்­டி­விட்டு, அதி­கா­லை­யில் நான்கு மணிக்­குத்­தான் வீட்­டிற்கு வந்து சேர்ந்­தேன். அப்­போது ஸ்டெல்லா மேரிஸ் காலே­ஜில், “ஸ்டிக் நோ பில்ஸ் என்று போடப்­பட்­டி­ருந்த சுவ­ரில் எதற்கு போஸ்­டர் ஒட்­டி­னீர்­கள்?” என்று என் மேல் கேஸ் போட்­டு­விட்­டார்­கள். அப்­போது நான் முத­ல­மைச்­ச­ரின் மகன்!. எதற்­குச் சொல்­கி­றேன் என்­றால், அப்­போதே அப்­படி இருந்­தது நம்­மு­டைய ஆட்சி. அதை நீங்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். இப்­படித்­தான் இப்­போ­தும் நடக்­கும். வேறு வழி­யில்லை.

ஆனால், இன்­றைக்கு அந்த நிலை­யெல்­லாம் மாறி­விட்­டது. வாட்ஸ்­அப்-­­இல் ஒரு Card போட்­டால் போதும்! எவ்­வ­ளவோ பெரிய வளர்ச்சி இது. இந்த வச­தி­யை­யும் வாய்ப்­பை­யும் முறை­யாக – சரி­யாக நாம் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்!.

ree

திரா­விட இயக்­கம் என்­பது தமி­ழி­னத்­தைத் தலை­நி­மிர வைக்க - பிறந்த இயக்­கம்! யார் தலை­யை­யும் எடுக்­கப் பிறந்த இயக்­க­மல்ல! சீவு­வேன்… சீவு­வேன் என்று சொல்­கி­றார்­களே இப்­போது…!


சமூக வலைத்­த­ளங்­க­ளில் நம் நோக்­கத்தை நாம் முறை­யா­கப் பயன்­ப­டுத்­து­வோம்! அந்த வாய்ப்பை நேரான வழி­யில் பயன்­ப­டுத்­து­வோம்! சமூக வலைத்­த­ளங்­கள் ஒரு­வரை ஒரே நாளில் புக­ழின் உச்­சிக்­குக் கொண்டு செல்­லும். ஒரு­வர் பல காலம் கட்­ட­மைத்த பிம்­பத்தை சில நொடி­க­ளில் உடைத்­து­வி­டும். என்­னைப் பொறுத்­த­வரை நெகட்­டிவ் பிரச்­சா­ரத்­தின் மூலம் எதி­ரியை வீழ்த்­து­வதை விட, பாசிட்­டிவ் பிரச்­சா­ரத்­தின் மூலம் நம்மை வளர்த்­துக்­கொள்­வ­து­ தான் சரி­யா­னது!

ree

தன்னை யாரெல்­லாம் எதிர்த்­தார்­கள் என்று தந்தை பெரி­யாரே பட்­டி­யல் போட்டு சொல்லி இருக்­கி­றார். அவர் வாழ்ந்த காலத்­தில் இருந்த தலை­வர்­கள் - இயக்­கங்­கள் – பத்­தி­ரிக்­கை­கள் என்று எல்­லோ­ரா­லும் எதிர்க்­கப்­பட்­ட­வர் தந்தை பெரி­யார். அவர்­க­ளின் பெய­ரெல்­லாம் பட்­டி­யல் போட்­டால் அதில் பலரை உங்­க­ளுக்கு யாரென்றே தெரி­யாது. ஆனால், பெரி­யார் இன்­றைக்­கும் வாழ்­கி­றார்.!


“வாழ்க வச­வா­ளர்­கள்!” என்று சொல்லி தன்­னு­டைய எதி­ரி­களை அன்­பால் வீழ்த்­தி­ய­வ­வர் நம்­மு­டைய ஒப்­பற்ற தலை­வர் பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா!

ree

”கூட்­டில் இருக்­கும் புழுக்­க­ளைப் போல் கொட்­டப்­பட்டு கொட்­டப்­பட்டு வளர்ந்­த­வன் நான்” – “நான் எனது எதி­ரி­க­ளுக்கு மட்­டுமே பதில் சொல்­லிக் கொண்­டி­ருந்­தால் நான் வளர்ந்­தி­ருக்­கவே முடி­யாது”-! ”யாருக்­கெல்­லாம் நன்மை செய்­தேனோ, அவர்­க­ளால் அதி­க­மாக தாக்­கப்­பட்­ட­வன் நான்” என்று நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் சொன்­னார். இதெல்­லாம்­தான் நமக்­கான பாடங்­கள்!

அதற்­காக யாருக்­கும் பதில் சொல்­லக் கூடாது; எல்லா விமர்­சனங்­க­ளை­யும் ஒப்­புக்­கொள்ள வேண்­டும் என்று நான் சொல்­ல­வில்லை! குறை சொல்­கி­ற­வர்­கள் - அவ­தூறு பரப்­பு­கி­ற­ வர்­கள் - பழி சுமத்­து­கி­ற­வர்­கள் - எல்­லாக் காலத்­தி­லும்­தான் இருந்­தார்­கள். மருந்து கண்­டு­பி­டித்­து­விட்­டால் நோய்க் கிரு­மி­கள் ஒழிந்­து­வி­டுமா என்ன? அது­மா­தி­ரி­தான். சமூ­கத்­தைப் பின்­னோக்கி இழுத்­துக்­கொண்டு இருந்த நோய்க் கிரு­மி­களை ஒழிக்க உரு­வான மருந்­து­தான் திரா­விட இயக்­கம்! அத­னால், அந்த நோய்க் கிரு­மி­களை எதிர்த்து நாம்­தான் போரா­டி­யாக வேண்­டும்.!


இன்­றைக்கு சோஷி­யல் மீடி­யா­வும் சில மீடி­யாக்­க­ளும் அவர்­கள் கண்ட்­ரோ­லில் இருக்­கி­றது. அத­னால், பொய் சொல்­ல­வும் அவ­தூறு செய்­ய­வும் அவர்­கள் தயங்­கு­வ­தில்லை. இதற்­குச் சரி­யான பதிலை நாம் சொல்ல வேண்­டும். ராணு­வத்­தின் முன்­கள வீரர்­கள் மாதிரி, கழ­கத்­தின் முன்­தள வீரர்­கள் நீங்­கள்!

ree

கள­மும், தள­மும் கைகோர்த்­தால்­தான் வெற்றி! களத்­தில் நிற்­கும் வேட்­பா­ள­ருக்கு தளத்­தில் கள­மாடி வெற்­றிக்கு கார­ண­மாக இருக்­கி­ற­வர்­கள் நீங்­கள்! இங்கு வந்­தி­ருக்­கும் உங்­கள் எல்­லோ­ரின் ஃபாலோ­யர்ஸ் எண்­ணிக்கை 99 இலட்­சத்து 62 ஆயி­ரத்து 618. ஏறத்­தாழ ஒரு கோடி ஃபாலோ­யர்ஸ் எந்­த­வித எதிர்­பார்ப்­பும் இல்­லா­மல் உங்­க­ளின் தன்­னார்­வத்­தால், தன்­ன­ல­மற்ற செயல்­பாட்­டால் கழ­கத்­துக்­குக் கிடைத்­தி­ருக்­கின்றீர்­கள்.!


‘தொண்­டர்­க­ளின் உழைப்பு கழ­கத்­திற்கு ரத்­த­நா­ளம்’ என்று தலை­வர் கலை­ஞர் சொல்­வார். அத­னால்­தான், தலை­மைக் கழ­கத்­தின் சார்­பிலோ – நிர்­வா­கி­க­ளின் அறிக்­கைகள் வரு­வ­தற்கு முன்பே, உங்­க­ளி­டம் இருந்து ரியாக்‌ஷன் வந்­து­வி­டு­கி­றது. நாங்­கள் சொல்ல முடி­யா­ததை - சொல்­லத் தயங்­கு­வ­தைக் கூட உங்­க­ளால் சொல்ல முடி­யும்! அந்த வகை­யில் நீங்­கள் தி.மு.க.விற்கு மிகப்­பெ­ரிய பலம்! ஏரா­ள­மான அர­சி­யல் எதி­ரி­களை வெற்­றி­கண்ட வர­லாறு நம்­மு­டை­யது. ’கொம்­பாதி கொம்­பர்­கள்’ என்று சொல்­லப்­பட்­ட­வர்­களை எதிர்த்து வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம்.!

ree

இந்த இயக்­கத்தை அழித்துவிட­லாம் என்று நினைத்­த­வர்­க­ளின் எண்­ணம்­தான் அழிந்து போயி­ருக்­கி­றதே தவிர, தி.மு.க.வை அவர்­க­ளால் கற்­ப­னை­யில் கூட அழிக்க முடி­யாது.! ”திரா­விட இயக்­கத்­தைக் குழி தோண்­டிப் புதைப்­பேன் – வேரோ­டும் வேரடி மண்­ணோ­டும் புதைப்­பேன்” என்று சொன்­னது யார் என்று கேட்­டால், யாருக்­கும் தெரி­யாது. ”திரா­விட இயக்­கத்தை ஒழிப்­ப­தைத் தவிர வேறு வேலை இல்லை” என்று சொன்ன பல பேர், கடை­சி­யில் இங்­கு­தான் அடைக்­க­ல­மா­னார்­கள். இது­தான் வர­லாறு!

மூத­றி­ஞர் இரா­ஜா­ஜி­யும், சிலம்­புச்­செல்­வர் ம.பொ.சி.-யும் இந்த இயக்­கத்­தைத் தொடக்ககாலத்­தில் எதிர்த்­தார்­கள்.! ஆனால்,1967 தேர்­த­லில் தி.மு.க.-வை ஆத­ரித்­தார் இரா­ஜாஜி. உத­ய­சூ­ரி­ய­னி­லேயே போட்­டி­யிட்­டார் ம.பொ.சி. அந்­தத் தலை­வர்­க­ளுக்கு எல்­லாம் மாற்­றுக் கொள்கை இருந்­தது.!


ஆனால் இன்­றைக்கு, பா.ஜ.க – அ.தி.மு.க. போன்ற வெகு­ஜன விரோ­தி­க­ளிடம் நாம் மோதிக்­கொண்டு இருக்­கி­றோம். பாசி­சத்­துக்கு எதி­ராக நேர­டி­யாக மோதிக்­கொண்டு இருக்­கி­றோம். எப்­ப­டி­யா­வது மக்­க­ளைச் சாதி­யின் பெய­ரால் மதங்­க­ளின் பெய­ரால் பிள­வு­ப­டுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்­கும் ஒரு கூட்­டத்­துக்கு எதி­ராக நாம் மோதிக்­கொண்டு இருக்­கி­றோம். பா.ஜ.க.வின் பாசி­சத்­தன்மை ஏதோ நமக்கோ - நம் இயக்­கத்­துக்கோ – நம்­முடைய கொள்­கை­க­ளுக்கோ – தமிழ்­நாட்­டுக்கோ மட்­டும் எதி­ரா­னது அல்ல! இந்­தி­யா­வுக்கே எதி­ரா­னது. ஒட்­டு­மொத்த மனித குலத்­துக்கே எதி­ரா­னது.!

ree

இப்­ப­டிப்­பட்ட பாசி­ச­வா­தி­கள் ஒரு­பக்­கம் - இவர்­க­ளு­டைய பாதம் தாங்­கி­க­ளாக இருந்து தமிழ்­நாட்­டின் உரி­மை­களை அடகு வைத்த அடிமை அ.தி.மு.க மறு­பக்­கம். கொள்கை என்­றால், “கிலோ என்ன விலை?” என்று கேட்­கும் கொள்­கை­யற்ற கூட்­டம்­தான் அ.தி.முக! இனி­மே­லும், பா.ஜ.க.வுடன் இருந்­தால் தமிழ்­நாட்டு மக்­க­ளால் மொத்­த­மா­கப் புறக்­க­ணிக்­கப்­ப­டு­ வோம் என்று பயந்து, “உள்ளே வெளியே” ஆட்­டம் ஆடிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.! தமிழ்­நாட்டை அழிக்க நினைக்­கும் பா.ஜ.க.வும் அண்ணா பெய­ரில் கட்சி நடத்தி அதை பா.ஜ.க.விடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல! நாண­ய­மில்­லாத நாண­யத்­தின் இரு பக்­கங்­கள்­தான் இரு­வ­ரும்!


பா.ஜ.க.வைப் பொறுத்­த­வரை, அர­சி­யல் எதி­ரி­கள் மேல் மட்­டு­மல்ல, ஊட­க­வி­ய­லா­ளர்­கள், முற்­போக்­குச் சிந்­த­னை­யா­ளர்­கள், மானு­டப் பற்­று­மிக்­க­வர்­கள் என்று எல்­லோர் மீதும், அதி­கார அத்­து­மீ­றல்­கள், மிரட்­டல்­கள், அடக்­கு­முறை ஏவல்­கள் செய்­ப­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட சோஷி­யல் வைர­ஸைத்­தான் நாம் துணி­வோடு எதிர்த்து நிற்­கி­றோம். மிசா… தடா… பொடா… எல்­லாம் பார்த்­தா­யிற்று. மிரட்­டல்… உருட்­டல்… இதெல்­லாம் நம்மை ஒன்­றும் செய்­யா­தென்­ப­தால்­தான், பொய் மூட்­டை­க­ளை­யும் அவ­தூ­று­க­ளை­யும் கட்­ட­விழ்க்­கி­றார்­கள்! ஹிட்­ல­ருக்­கா­வது ஒரே ஒரு கோய­பல்ஸ்­தான் இருந்­தார்.ஆனால், கோய­பல்ஸ் எல்­லாம் ஒன்­றா­கச் சேர்ந்து கட்சி ஆரம்­பித்­தால் எவ்­வாறு இருக்­குமோ அப்­ப­டித்­தான் அந்­தக் கூட்­டம் இருக்­கி­றது! போகி­ற­போக்­கில் யார் மீது வேண்­டு­மா­னா­லும் அவ­தூறு பரப்­ப­லாம்... என்ன பொய் வேண்­டு­மா­னா­லும் சொல்­ல­லாம்… எதற்­கும் ஆதா­ரம் வேண்­டாம்! பொய் பேசு­கி­றோமே என்­கிற கூச்­சம் வேண்­டாம்! அவர்­க­ளுக்­குத் தெரிந்­த­தெல்­லாம் வாட்ஸ்­அப் யுனி­வர்­சிட்­டி­தான்.!

ree

அதில் என்ன வதந்­தி­களை வேண்­டு­மா­னா­லும் பரப்­ப­லாம். அதை நம்­பு­வ­தற்கு ஆட்­டு­மந்­தைக் கூட்­டம் தயா­ராக இருக்­கி­ற­தென அடித்து விடுகி­றார்­கள்… தம் பிடித்து அவர்­கள் ஊது­கிற பொய் பலூனை, உண்மை என்­கிற ஊசியை வைத்து எளி­தாக நாம் உடைத்து விடு­கி­றோமே என்ற எரிச்­சல் அவர்­க­ளுக்கு…! பொய்­க­ளுக்­குப் பொய்­கள் என்­றைக்­குமே பதி­லா­காது! போலி­யான பெரு­மை­கள் நமக்­குத் தேவை­யில்லை! உண்­மை­யான உழைப்­புக்கு அங்­கீ­கா­ரம் கிடைத்­தால் போதும்! நமது செய்­தி­கள் உண்­மை­ யா­ன­வை­யாக இருக்க வேண்­டுமே தவிர, பா.ஜ.க.வின­ரைப் போல போலி­யாக இருக்­கக் கூடாது.!


அவர்­க­ளுக்கு இப்­போது ஒரே வேலை­தான்! துர்கா ஸ்டாலின் எந்­தக் கோயி­லுக்­குப் போகி­றார் என்று பார்க்­கி­றார்­கள். அந்த போட்­டோவை எடுத்­துப் போட்டு, ”பார்த்­தீர்­களா, கோயி­லுக்­குச் செல்­கி­றார்”- எனப் பரப்­பு­கி­றார்­கள். தமிழ்­நாட்­டில் இருக்­கிற எல்­லாக் கோயி­லுக்­கும்­தான் துர்கா செல்­கி­றார். அது அவ­ரது விருப்­பம். அதை நான் தடுக்­க­வில்லை. நாங்­கள் ஆரிய ஆதிக்­கத்­துக்­குத்­தான் எதி­ரி­களே தவிர - ஆன்­மீ­கத்­துக்கு எதி­ரி­கள் அல்ல. கோயி­லும் – பக்­தி­யும் அவ­ர­வர் உரிமை – விருப்­பம்! ஏரா­ள­மான கோயில் நுழை­வுப் போராட்­டங்­களை நடத்தி வெகு மக்­க­ளு­டைய வழி­பாட்டு உரி­மையை வாங்­கிக் கொடுத்­தது திரா­விட இயக்­கம்­தான்.! தலை­வர் கலை­ஞ­ரின் பரா­சக்தி வச­னம்­தான் அவர்­க­ளுக்­குப் பதில்: ”கோவில் கூடாது என்­றல்ல; கோவில் கொடி­ய­வர்­க­ளின் கூடா­ரம் ஆகி­வி­டக் கூடாது!”

கோவிலை­யும் பக்­தி­யை­யும் பா.ஜ.க. தன்­னு­டைய அர­சி­ய­லுக்கு சாத­க­மாக மாற்ற நினைக்­கி­றது. ஆன்­மீ­கத்­தை­யும் – அர­சி­ய­லை­யும் மிகச்­ச­ரி­யாக பகுத்­துப் பார்க்­கத் தெரிந்த பகுத்­த­றி­வு­வா­தி­கள்­தான் தமிழ்­நாட்டு மக்­கள். ”இந்த கோவில இடிச்­சிட்­டாங்க அந்­தக் கோவில இடிச்­சிட்­டாங்க”- என வாட்ஸ்­அப்­பில் பூகம்­பப் படங்­க­ளைப் போட்டு வதந்தி பரப்­பு­கி­றார்­கள். ஆனால், உண்மை என்ன? 1000 கோயில்­க­ளுக்­குக் குட­மு­ழுக்கு விழா நடத்­திய ஆட்­சி­தான் நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சி.! 5000 கோடி ரூபாய் மதிப்­பி­லான கோயில் சொத்­துக்­களை மீட்ட ஆட்­சி­தான் நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்சி.! யார் யாரி­டம் இருந்து, எங்கே, எங்கே இருந்து இந்­தச் சொத்­தெல்­லாம் மீட்­கப்­பட்­டது என அற­நி­லை­யத்­துறையால் புத்­த­க­மா­கவே அச்­சிட்டு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. !இதைச் சொல்­வ­தெல்­லாம்­ தான் அவர்­க­ளுக்­குப் பிடிக்­க­ வில்லை.!

ree

லைட் எரிந்­தால் திரு­ட­னுக்­குத்­தான் பிடிக்­காது! கோயிலை முறை­யா­கப் பரா­ம­ரித்­தால் மத­வெ­றி­யைத் தூண்­டிக் குளிர்­காய நினைக்­கும் கும்­ப­லுக்­குப் பிடிக்­காது!. அத­னால் உண்­மை­க­ளைத் தொடர்ந்து மக்­க­ளுக்கு எடுத்­துச் சொல்­வோம்! நம்­மு­டைய கருத்­து­க­ளைத் தமி­ழைத் தாண்டி இந்­தியா முழு­வ­தும் உள்ள மற்ற மொழி பேசும் சகோ­தர – சகோ­த­ரி­க­ளி­டம் எடுத்­துச் செல்­வோம். அப்­படி நம்­மு­டைய கருத்­து­களை மற்ற மொழி­க­ளில் கொண்­டு­போ­கத்­தான் Speaking for India பாட்­காஸ்ட் தொட­ரைத் தொடங்­கி­யி­ருக்­கி­றேன். இது­வ­ரைக்­கும், 2 எபி­சோட் வந்­தி­ருக்­கி­றது - இதை மொத்­தம் 20 இலட்­சத்­துக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் பார்த்­தி­ருக்­கி­றார்­கள். இது எத்­தனை மாநா­டு­க­ளுக்கு சமம் என்று உங்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும்!

ree

இப்­படி, நம் கருத்­து­கள் எல்­லாத் தரப்­பி­ன­ரை­யும் சென்­ற­டைய வேண்­டும். இன்ஸ்­டா­கி­ராம், யூடி­யூப் என இளைய தலை­மு­றை­யி­னரை ஈர்க்­கக்­கூ­டிய சமூக வலைத்­ த­ளங்­க­ளில் அதிக கவ­னம் செலுத்­துங்­கள்.! இந்த நிகழ்ச்­சி­யில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கும், ‘கலை­ஞர் 100’ புத்­த­கத்­தைப் படித்து, எதி­ரி­க­ளின் அவ­தூ­று­க­ளுக்கு உங்­கள் பாணி­யில் பதி­லடி கொடுங்­கள். எதி­ரி­கள் நம்மை இழிவு செய்­தா­லும் கண்­ணி­ய­மா­கப் பதி­லடி கொடுப்­போம். நாற்­ப­தும் நமதே. நாடும் நமதே!

இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் பேசினார்!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page