top of page
Search

தி.மு.கழகத்தின் முதன்மை தொண்டர், கே.என்.நேரு. படிப்படியாக உயர்ந்த வரலாறு... ஒரு சிறப்பு பார்வை.....

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 9, 2022
  • 3 min read

Updated: Nov 9, 2022

ree

மணவை.எம்.எஸ்.ராஜா.....


தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் முதன்மைதொண்டன் கே.என்.நேரு..

படிப்படியாக உயர்ந்தவரின் வரலாறு!


உறியடி இணையதள செய்திக்குழுவின் ஒரு சிறப்பு பார்வை......


திருச்சி மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் கே.என்.நேரு கடந்த 27 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக தற்போது இரண்டாவது முறையாக, மீண்டும், தி.மு.கழகத்தின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

1952. ஆம் ஆண்டு நவ.9ம் தேதி, திருச்சி மாவட்டம், லால் குடியையடுத்த காணக்கிளியநல்லூர் என்ற கிராமத்தில் நாராயணசாமி - தனலெட்சமியம்மாள் தம்பதியருக்குமகனாக பிறந்தவர்தான், கே.என்.நேரு. .......


தந்தை நாராயணசாமி காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒரு வராவார். ஜவஹர்லால் நேரு மீது கொண்ட அசைக்கமுடியாத பற்றின் காரணமாக, தனது மூத்த மகனுக்கு நேரு என்று பெயர் சூட்டினார்.

பாரம்பரிய விவசாய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்த நேரு.பி.யூ.சி.வரை பயன்றவர். ரைஸ்மில் சொந்தமாகயிருந்தால் மிகப்பெரும் செல்வந்தர் என கூறப்பட்ட அக்காலகட்டத்தில், புள்ளம்பாடியில் மிக பெரிய அளவில் ரைஸ்மில். பால் உற்பத்தி, விவசாயம், அரியநல்லூரில் மிளகாய் மண்டி என சொந்த தொழிலை தன் பாரம்பரிய வழியே செய்துவந்தார்.


ree

அந்த காலகட்டங்களில், புல்லட்டிலேயேநேரு வந்து செல்வது வழக்கம், இதனாலே புல்லட் நேரு என்றே இன்றும் அப்பகுதியில் பாசத்தோடும், உரிமையோடும் அழைக்கப்படுகிறார்......


இவர்மீது சுற்று பகுதி அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த அன்பையும் - பாசத்தையும் இன்றும்,வெளிப்படுத்திவருகிறார்கள்.

தனது பள்ளி மாணவபருவத்திலேயே தி.மு.கழகத்தின் மீதும் அதன் தலைவர் கலைஞர் மீதும் எல்லையற்ற ஈர்ப்புக்கு உள்ளாகி, திராவிட அரசியலைபேசினார் கே.என்.நேரு...........

ree

எம்.ஜி.ஆர், ஆட்சிகாலத்தில், நீண்ட நாட்களாக நடத்தப்படாமால் பின்னர் 1986-ம், ஆண்டுநடைபெற்ற உள்ளாச்சி தேர்தலில் புள்ளம்பாடி ஒன்றியத்தின் நேரடிசேர்மன் பதவிக்கு, கிளை செயலாளராக கட்சிப் பணி தொடங்கி, ஒன்றிய முக்கிய தி.மு.கழக பொருப்பாளர்களுள் ஒருவராக பணியாற்றிய, கே.என்.நேரு, தி.மு.கழகவேட்பாளராக போட்டியிட்டு மிக பெரிய அளவில் மக்களின் வாக்குகளைப் பெற்றுவெற்றிப் பெற்று புள்ளம் பாடி யூனியன் சேர்மனார்..

அன்றைய சூழலில் தி.மு.கழகம் எதிர்கட்சியாகயிருந்தது.

அப்போது, அன்றைய பாரத பிரதமராகயிருந்த ராஜீவ்காந்தி, திருச்சி மாவட்டப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட போது, தனது ஒன்றிய பகுதியில் ஒரு வளர்ச்சி திட்டப் பணியை தொடங்கிவைக்க, ராஜிவ்காந்தியிடம் விடப்பிடியாக வாதாடி அவரை நேரில் அழைத்துச் சென்று அப்பணியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து தான் முன்னெடுக்கும் மக்களின் பொதுநலப்பணிகள் எதுவும் செய்துமுடித்துக்காட்டுவேன் என்று நிருபித்தவர்தான் கே.என்.நேரு....

ree

இப்படி வைராக்கியமிக்கவராக வலம் வந்தவரை கூர்ந்து கவனித்த தி.மு.கழகத்தின் தலைவர் கலைஞர் அப்பகுதி ஒன்றிய செயலாளராக பணியாற்றும் வாய்பை தந்தார். எதிலும் மனம் தளராத அயராத தனது உழைப்பை, தி.மு.கழகத்தின் வளர்ச்சியிலும் காட்ட தொடங்கினார் நேரு....

அதன்பின்னர்

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று தனி கட்சி தொடங்கும் முன்னரே, திமுகவில் இருந்து 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுடன் சென்றனர். அதில் திமுக திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த திருச்சி செல்வராஜும் ஒருவர். அவர் வைகோ, வை ஆதரித்து சென்றதாால், கட்சியின் மாவட்ட செயலாளர் பணியிடம் வெற்றிடமாகயிருந்தது.....

கட்சிப் பணியிலும், யூனியன் சேர்மனாகவும் மக்கள் பணிகளிலும் அதிக ஈடுபாடுகள் காட்டி செயல்பட்டு வந்த கே.என்.நேருவை மாவட்ட செயலாளரா்கினார் கலைஞர்......

1989 தேர்தலில் லால்குடியில் போட்டியிட வாய்ப்பு வழங்கி, நேருவை வெற்றிப் பெறச் செய்து தனது அமைச்சரவையில்,பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.

ree

1996 தேர்தலிலும் மீண்டும் வெற்றிபெற்று கலைஞரின் முழுமையான, அசைக்கமுடியா நம்பிக்கை பெற்ற, மிகவும் சவாலான உணவு மற்றும் கூட்டுறவுத்துறையின் அமைச்சரானார். எதிலும், எப்பணியிலும் தனி முத்திரை பதித்து, திமுக, தலைவர் கலைஞரின் வழி தொடர்ந்த, கே.என்.நேரு இந்த துறையில் தனது நிர்வாக திறமையால் கலைஞரின் குட் புக்கில் நிரந்தர இடத்தை பெற்றார் அதன் பின்னர். 2006 இல் கலைஞரின் தலைமையிலான தமிழ்நாட்டின் தி.மு.கழகஅமைச்சரவையில் இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை செய்துகாட்டினார்....

.

தொடர்ந்து 27 ஆண்டுகளாக, கலைஞரின் நம்பிக்கைக்குரிய மாவட்ட செயலாளராகவும், மீண்டும் 2011ல் நடந்த தேர்தலிலும் வெற்றி வகை சூடினார். கலைஞர் நினைப்பதை, அவரையே வியப்பில் ஆழ்த்தும், வகையில் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளாலும் தனித்துவத்துடன் - அக்கரையுடன், இரவுபகல் பாராது செய்து முடித்த கே.என்.நேருவின் முழு முயற்சியால்தான், திருச்சியில் கலைஞர் அறிவாலையம் உருவானது. இதன் தொடர்ச்சியாக, திருச்சி மண்டலம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும், கலைஞர் அறிவாலையங்கள் உருவாக முக்கிய காரணமானார் நேரு......


கட்சியின் நிகழ்ச்சி எதுவாலும், சிறப்புற செய்துமுடித்த இவரின் கடும் பணியை பார்த்து, கட்சியின்மாநாடு என்றால், நேரு,

நேரு என்றால் மாநாடு, என்று பலமுறை கலைஞர் பாராட்டியது குறிப்பிடதக்கது....

ree

இப்படி திருச்சி மண்டல தி.மு.கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கிய அங்கம் வசித்த நேருவை, தி.மு.கழக, தலைமை கழகம் வாரியணைத்து முதன்மைச் செயலாளராக்கியது.........

கே.என்.நேருவின் எதார்த்தம் அனைவரையும் அன்போடு அழைத்துச் சென்று தி.மு.க.வின் பலத்தை மென்மேலும் பலபடுத்திய செயலை கண்டு காழ்ப்புணர்ச்சியான இவரது, அரசியல் எதிரிகள், தம்பி உடையான்படைக்கு அஞ்சான் எனும் வழக்குமொழிக்கேற்ப, தி.மு.க, தொண்டர்களை அரவணைப்பதிலும், கட்சி நிகழ்ச்சிகளை சிறப்புற ஏற்பாடு செய்து தருவதிலும் தீவிரமாக, தி.மு.க.விற்கு விசுவாசமாக பணியாற்றிய, எம்.டி.என்று எல்லோராலும் நேசமுடனும், உரிமையுடனும் அழைக்கப்பட்ட இவரின் உடன்பிறந்த தம்பி .கே.என்.ராமஜெயத்தை அரசியல் படுகொலை செய்தனர்,

ree

இத்தகைய காரியத்தை கண்டு, நேரு தனது கட்சிப் பணியில் துவண்டு பின் தங்கி ஒதுங்கிவிடுவார் என்று தப்புக் கணக்கிட்ட கயவர்களின் முகத்தில் கரி யை பூசும் விதமாக இழந்தது தனது உயிருக்குரான தம்பி என்றாலும், திருச்சி மண்டலத்தில் கட்சியினர் துவண்டு, சோர்வடைந்துவிடக்கூடாது என்று, தனது குடும்பத்தின், வேதனையை மறைத்து தன்கட்சிப் பணியை மேலும், மேலும் தீவிரப்படுத்தினார்...


கடந்த,அ.தி.மு.க.ஆட்சியின்போதே நடத்தப்பட்ட ஊரக உள்ளாச்சி தேர்தலில், திருச்சி மாவட்டத்திலுள்ள, 14. யூனியன் சேர்மன் பதவிகளை தி.மு.க.வசம் மிக சதூர்யமாகவும், சமர்த்தியமாகவும் கொண்டுவந்தார்..........

அதன்பின்னர் 2021. ம் ஆண்டு தேர்தலில் கடுமையாக பணியாற்றி, தேர்தல் முடிவுவரும் முன்பே செய்தியாளர்களை சந்தித்த நேரு, மாவட்டத்தின் 9 தொகுதிகளும் தி.மு.க. கூட்டணியின் வசமாகும் என்று உறுதிபட, தனது அயராத பணியின் மீது கொண்ட நம்பிக்கையில் கூறி, 9 தொகுதிகளையும் தி.மு.க.வின்வசம் கொண்டுவந்தார்.........

ree

2021ம். தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் மீண்டும் வெற்றிப் பெற்றவரை, நகராட்சி நிர்வாகம். குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும், சேலம் மண்டல தி.மு.க பொருப்பாளராகவும் பல்வேறு சவால்களுக்கிடையே நியமிக்கப்பட்டார்..........

அதனையும், கட்சியின் வளர்ச்சியின் மீது அக்கரையுடன் , சவாலாகஏற்று, அங்கு மாநகரட்சி உள்ளிட்ட அனைத்து நகராட்சிகளையும்,. தி.மு.க.வசம் கொண்டுவந்தும். தனக்கு ஒப்படைக்கப்பட்ட துறையின் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களைதயும் வகை யிலும் சாதனைபடைத்து.தி.மு.கழக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பேரன்புக்கு பாத்திரமானார்...........

ree

இந்நிலைதான்,

இரண்டாவது முறையாக தி.மு.கழகத்தின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பை, தனது தந்தை முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் தி.மு.கழகத்தின் தலைவர் - தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வாய்ப்பளித்துள்ளார்....

கலைஞரால் அடையாளபடுத்தப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு, வை தமிழ்நாட்டு முதல்வரும். தி.மு.கழகத்தின் தலைவருமான, மு.க.ஸ்டாலின், கட்சியின், முதன்மைச் செயலாளராகவும், அவரது தலைமையிலான அரசில் சவால்கள் நிறைந்ததுறைக்கு அமைச்சராக நியமித்தது.......தலைவர்கலைஞரிடம் கொண்ட பாசப்பற்றுதல்கள், முதல்வர் .மு.க.ஸ்டாலின் மீதும் கே.என்.நேரு கொண்டுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.......

கட்சியில், கிளைகழகம் முதல் தனது கடும் உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கும் இவருக்கு கட்சியில் வழங்கப்பட்டுள்ளதற்போதைய

அடையாளம்,

தி.மு.க.வின் மீது பற்றுடைய, நம்பிக்கையுடைய, ஆதரவாளர்கள். திராவிட அரசியலை முன் எடுப்பவர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே கருதுகின்றார்கள்....


உறியடி செய்திக்குழுவினர்கள்

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page