தி.மு.க அரசு, நீதிமன்றத்தில் வலியுறுத்தல்!பாரம்பரிய ஜல்லிகட்டுவிழா! ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும்!
- உறியடி செய்திகள்

- Dec 18, 2022
- 2 min read

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான ஆவணம்தாக்கல். பீட்டா அமைப்பு மீது, நீதிபதிகள் சரமாரி கேள்வி! பாரம்பரிய விளையாட்டுகளை காத்திட கை கோர்க்கும் பிற மாநிலங்கள்!
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில், தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலா, தி.மு.கழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
காட்சி விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு புலி, சிறுத்தை, சிங்கம், உள்ளிட்ட காட்டு விலங்குகளுடன்.
வீட்டில் மனிதர்களுடன் வாழும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் காளைகளையும் சேர்த்தது அப்போதை ஒன்றியஅரசு......

இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாமல் போனது சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
மிருகவதை தடுப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி இந்தியன் சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது.
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநில அரசு அடிபணிந்து போர்க்கால அடிப்படையில் சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து.
அதன் பிறகு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக அங்கீகாரம் பெற்றது.....

இதனால் 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டு தொடங்கியவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி இப்பொழுது நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி மதுரை உட்பட மிகவும் குறைவான மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மிகப்பெரிய போராட்டம் அதாவது மக்களின் தன்னெழுச்சியாக எழுந்த மிகப் பெரிய போராட்டத்திற்கு அடுத்தது காளைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தில் அதிகமாக ஏற்பட்டது.
இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு அரசியலாக மாறிவிட்டது.
தி.மு.கழகம், அதிமுக, இரண்டு கட்சிகளும் தொடர்ந்து தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்கிறது.
இதில் ஜல்லிக்கட்டு போட்டியை இரண்டு கட்சிகளும் கட்டாயம் நடத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
ஏனென்றால் இந்த போட்டி நடைபெறவில்லை என்றால் ஆட்சியின் மீது மக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதற்கு வாய்ப்புகள் மிக உள்ளது.

அவசரமாக வழக்கு தொடர்ந்த அமைப்புகள்
ஜல்லிக்கட்டு போட்டி, மகாராஷ்டிராவில் நடக்கும்,கம்ளா மற்றும் இதர மாநிலங்களில் நடைபெறும் விலங்குகள் மற்றும் பறவைகளை வைத்து நடைபெறும் போட்டிகளுக்கு இந்த அமைப்புகள் தடை கோரியிருந்தன, நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.

அப்போது இந்த விளையாட்டு நடைபெறக் கூடாது என்று கோரிக்கை வைக்கும் அமைப்புகளுக்கு நீதிபதிகள் கடும் காரசாரமான சில கேள்விகளை எழுப்பினார்கள்.
அதில் கோழி, ஆடு, மாடு, பன்றி, உள்ளிட்ட விலங்குகளை மனிதர்கள் நாம் உணவாக எடுத்துக் கொள்கிறோம்.
குதிரை பந்தயத்தில் குதிரைகள் கொடுமைப்படுத்தப்படுகிறது இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் அதனை தடுக்க முடியுமா.
ஒரு பாம்பு கடிக்க வரும் போது நீங்கள் அதை அடிக்காமல் இருக்க முடியுமா.
அதேபோன்றுதான் ஜல்லிக்கட்டு உட்பட அனைத்து போட்டிகளும் நடைபெறுவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சுப்ரீம் கோர்ட் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியது....

இப்பொழுது தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சேர்ந்த வழக்கறிஞர்களும்.
இந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பாரம்பரியமாக நடைபெறும் விளையாட்டுகளுக்கு மத்திய அரசும் மற்றும் நீதிமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் பாதுகாப்போடு என கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது இந்த வழக்கு இப்பொழுது தீவிரமாக விசாரிக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்தார்கள்...

அதன்படி தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்து உள்ளது.
அதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
அவர்கள் தலைமையில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது இந்த போட்டி நடைபெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு விதமான சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. களைகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளது இந்த போட்டி நடை பெறாமல் போனால் ஒருவேளை நாட்டு மாடு இனங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
இந்தப் போட்டி நடைபெறுவதால் மட்டுமே நாட்டு மாட்டு இனங்கள் அதிகமாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த களைகள் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இந்த போட்டி தொடர்ந்து நடைபெற வேண்டும் இந்த போட்டி தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெறும் போட்டி இதற்கு தடை விதிக்க கூடாது.
மத்திய அரசு இதற்கு சரியான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளது.




Comments