தூத்துக்குடியில் திமுக அரசு இரண்டாண்டு சாதனை விளக்க கூட்டம்! கவிஞர் கனிமொழி கருணாநிதி பங்கேற்பு!!
- உறியடி செய்திகள்

- May 7, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
தூத்துக்குடியில், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்,கவிஞர் கனிமொழி கருணாநிதி அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!
இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கவிஞர், கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, கழக அரசின் இரண்டாண்டு சாதனைகள். தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பான்மை நிறைவேற்றியது குறித்து சிறப்புரையாற்றினார்!

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் தஆனந்தசேகரன். மற்றும் தி.மு. கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், பொதுமக்கள் உட்பட திரளாக கலந்துகொண்டனர்!




Comments