top of page
Search

கொங்கு மண்டலத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை! விறுவிறு ஈரோடு!! அரவணைக்கும் அமைச்சர் முத்துசாமி!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 6, 2023
  • 1 min read
ree

ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா..


கொங்கு மண்டலத்தில், மெல்லமெல்ல நகர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை ஏற்று, தி.மு.கழகத்தின் கோட்டை என்பதை தக்கவைக்கிறதா ! அமைச்சர் முத்துசாமி கழக சாதுர்யங்களும், மனிதநேயமும் காரணமா? பெருமை கொள்ளும் கொங்கு மண்டல தி.மு.க.வினர்!


திமுகவுக்கு ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க தலைவர் உத்தரவிட்டு அதற்காக 234 தொகுதிகளிலும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.

ஆனால்,2017 முதல் 2023 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவாலய கணக்குப்படி உள்ள உறுப்பினர்கள் இன்னும் இருக்கிறார்களா என்று ஏதாவது சரிபார்ப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா?

கிளைச் செயலாளர்கள்,ஒன்றிய,பேரூர்,நகர்,மாநகர் செயலாளர்கள் தேர்தல் வந்தால் வெற்றி பெறுவதற்காக போலியாக உறுப்பினர்களை சேர்த்திருந்ததாக வந்த பல்வேறு தகவல் அடிப்படையில் தலைமைக்கழகம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவாலய கணக்குப்படி தற்போதுள்ள திமுக உறுப்பினர்கள், தவிர ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க முடிவெடுத்தும் உரிய விதிமுறைகளுடன் அறிவித்தது.....

ree

_ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த தி.மு.கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு விளையாட்டு-சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலினுக்கு_ விஜயமங்கலம் டோல்கேட் அருகே _ ஈரோடு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக 50000 உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.. ஈரோடு கிழக்கு தொகுதி பார்வையாளர்

மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் சி.காசி

மேயர் நாகரத்தினம்,மாநகர் செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் செந்தில்குமார்மற்றும் கழக மாநில மாவட்ட மாநகர ,ஒன்றிய, பேரூர்,பகுதி கழக வட்டக் நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.வின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள்.

ree
ree
ree
ree

ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் தலைமையில், உடன்பிறப்பாய் இணைவோம் வாருங்கள் உடன்பிறப்பே! என்று தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த, 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி முண்ணனி இடத்திற்கு நகர்ந்து முக்கியத்துவம் பெறுவதற்கு, மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,அமைச்சர் முத்துசாமி, தி.மு.க நிர்வாகிகள், சார்பு அணியினர், கழக தொண்டர்கள், ஆதரவாளர்களை அரவவணைத்து, கழக வளர்ச்சிப்பணிகளிலும், தி.மு.க.தலைமை அறிவிக்கும் அனைத்து கழகப் பணிகளிலும், மிக எதார்த்த குணத்துடன், எல்லோருடனும் நேரடி தொடர்பு கொண்டு, எளிமையான அணுக முறையை கொண்டு, தொண்டர்களையும் - நிர்வாக களையும் ஈடுபடச்செய்வதாலும், மிக எளிமையாக அனைவரிடமும் அணுகி நே ரடி அணுகுமுறை கொண்டவராக இப்பகுதியினரின் அசைக்கமுடியாத நம்பிக்கையும், நம்பகத்தன்மை கொண்டவராக, கழக வளர்ச்சியில் களத்தில்தானே முன் நிற்பதும் முக்கிய காரணம் என்கின்றனர் கொங்கு மண்டல திமுகவினர்.!


அமைச்சரின் அரவணைப்புடன் கூடிய கழகப்பணியும் - அவர் சார்ந்த, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்கள் நலப் பணிகளும், வெல்லட்டும் - தமிழக மக்களும் பயன்பெறட்டும்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page