முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி பற்றி திருச்சியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்! திரளாக பங்கேற்க அழைப்பு
- உறியடி செய்திகள்

- Oct 27, 2022
- 1 min read

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் திராள கட்சியினர் கலந்துகொள்ள அழைப்பு.....
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி (திங்கட்கி ழமை) காலை 9.00 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையிலும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், முதன்மை செயலாளருமான K. N. நேரு முன்னிலையில்
மு.க. ஸ்டாலின் நவம்பர் 4ம் தேதி
திருச்சியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாலை மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பல முக்கியமுடிவுகள் பற்றியும் ஆலோசனைகள்மேற்கொள்ளதாக தி.மு.கழக . வட்டாரத்தில் கூறப்படுகின்றது

இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட தி.மு.கழக,செயலாளர், வழக்கறிஞர்.க.வீரமணி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது......
தி.மு.கழகத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கு முன்னோடி மாவட்டமாக, கழகத்தின் முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சிறப்புற பணியாற்றி தி.மு.கழகத்தின் தீரர்கள் கோட்டையாக நிலைநாட்டியுள்ள திருச்சியில் நடைபெறும் இந்த வரலற்று சிறப்புமிக்க ஆலோசனை கூட்டத்தில் கழகத்தின், மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, கிளை, பேரூர் கழக செயல்வீரர்கள் - நிர்வாகிகள் அனைவரும் தவறாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டி அன்புடன் அழைக்கிறேன்....
இவ்வாறாக அவர் கூறியுள்ளார்....
மணவை எம்.எஸ்.ராஜா......




Comments