தி.மு.க தலைமைக்கழகம் எச்சரிக்கை! உறுப்பினர் அடையாள அட்டை ஒப்படைக்க தவறுபவர்கள் மீது நடவடிக்கை!!
- உறியடி செய்திகள்

- Apr 5, 2023
- 1 min read

தி.மு.கழக உறுப்பினர் அடையாள அட்டைகளை பெற்ற நிர்வாகிகள் ஒருவாரத்திற்க்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், தவறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தலைமைக்கழகம் எச்சரிக்கை!
உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் குறித்து கழகத் தோழர்கள் கவனத்திற்கு
தலைமைக் கழக அறிவிப்பு!
நடைபெற்று முடிந்த 15-வது கழகப் பொதுத் தேர்தலுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டு பதிவு செய்த அனைவருக்கும், ஏற்கனவே தலைமைக் கழகத்தால் உரிமைச் சீட்டுகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில்;
தலைமைக் கழகத்திலிருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்றுக் கொண்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், அவரவர்களுக்குரிய உறுப்பினர் சீட்டுக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமைக் கழகத்தால் பல முறை அறிக்கை வெளியிட்ட பின்னரும்;
ஒரு சில இடங்களில், ஒரு சில நிர்வாகிகள் இன்று வரை உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என உறுப்பினர்கள் பலர், தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட "சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்களிடம்” புகாராக தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தலைமைக் கழகத்தின் சுவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

தலைமைக் கழகத்திலிருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டினை பெற்ற நிர்வாகிகள் யாராக இருப்பினும், அவரவர்க்கு உரிய உரிமைச் சீட்டினை, இந்த அறிக்கை கண்ட ஒரு வார காலத்திற்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும்; அவ்வாறு ஒப்படைக்கவில்லை என எவர்மீதும் தலைமைக் கழகத்திற்கு புகார் வருமேயானால், அவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
.
இவ்வாறாக தி.மு.கழக வட்டாரத்தில் தகவல்கள் கூறப்படுகின்றது...




Comments