அரசியல் இருப்பை காட்ட விவசாயிகள் வாழ்வில் விளையாடாதீர்கள்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம
- உறியடி செய்திகள்

- Apr 24, 2023
- 2 min read
Updated: Apr 25, 2023

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா..
தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை நிதி நிலை அறிக்கை: 250 நல திட்டஅறிவிப்புகளுக்கு, 242 திட்ட நிதி. (97 சதவிகிதம் ஒதுக்கீடு! இத்துறைக்கு முதல்வர் தளபதியார் தலைமையிலான அரசு தனிநிதிநிலை அறிக்கையும் தாக்கல்!!
இவற்றையும் - வேளாண்மை - உழவர்கள் நலனையும் சீர்குலைக்கும் வகையில் அரசியல் இருப்பை காட்ட, உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவது ஏற்க முடியாது, கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்!
தி.மு.கழக தலைமை உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர்,கடலூர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தருமபுரி மண்டல தி.மு.கழக பொருப்பாளர் தமிழ்நாடு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.ஆர்.பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது!
2021.ம் ஆண்டு தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் கூறியதை, மனதில்கொண்டு, கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உடனடியாக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வேளாண்மை வளர்ச்சிக்கும். வேளாண் பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், தனி பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது......

கடந்த காலங்களில் வேளாண்மை என்ற துறையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றும் செய்து, தாயுள்ளத்துடன் உழவர்களின் நலனில் உண்மையான அக்கரையுடன் தொடர் நடவடிக்கைகளை துரிதமாக தமிழ்நாடு முதல்வரால் உத்தரவிடப்பட்டு, ஆட்சி பொருப்பேற்ற நாள் முதல் அரசால் உரிய திட்டங்கள் செயல்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 250 திட்ட அறிவிப்புகளுக்கு. 242 பணிகளுக்கான சுமார் 97 சதவிகிதம் உடனடியாக துறைரீதியாக ஒதுக்கீடு செய்து உரிய அரசாணையும் வெளியிடப்பட்டு, திட்ட வளர்ச்சிப் பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை பற்றி எல்லாம் அறியாமல், முற்றிலும் உண்மைக்கு புறம்பாக தங்களின் அரசியல் இருப்பை காட்டிக்கொள்ளும் வகையில், சுயநலபோக்குடன் அரசியல் உள்நோக்கடத்துடன் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவது, வேளாண்மை வளர்ச்சியை, உழவர்கள் நலனையும் கேலி செய்வதாகவே உள்ளது.

வேளாண் பெருமக்கள், உழவர் பெருமக்கள் மத்தியில் கடந்த இரண்டாண்டுகளாக தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான வரவேற்பு காரணமாக நடப்பாண்டில் விவசாயகள் எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளபோதிலும், அரசின் நிதிநிலை ஏற்ப பெரும்பான்மை வேளாண்மை - உழவர் பெருமக்களின் கோரிக்கைகள் உரிய வழிமுறைகளின்படி நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
சமீபத்திய 2023 - 24ம் ஆண்டு வெளியிடப்பட்டு வேளாண் நிதிநிலை அறிக்கையின் வரலாற்றுசிறப்பு அம்ச அறிவிப்புகள், சலுகைகளையறிந்து, பெரும்பான்மை விவசாய பெருமக்களும், வேளாண் அறிஞர் பெருமக்களும், வேளாண்மையில் ஈடுபடும் அனைத்துத்தரப்பினரும் பெரிதும் பாராட்டி அரசின்அறிக்கையினை பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளார்கள்.
குறிப்பாக பிரபல கலைத்துறை சார்ந்த ஒருவரின் இயற்கை விவசாய ஈடுப்பாட்டையும், அவர் ஆலோசனைகள் பேரில் வேளாண் தொடர்பான ஒரு திட்டத்தையும் இந்த நிதிநிலை அறிக்கையில் சேர்த்து பல தரப்பட்ட விவசாயிகள் பயன் பெரும் வகையில் வெளியிடப்பட்டது குறிப்பிடதக்கது.
அரசின் வேளாண் பட்ஜெட் அறிவிப்புகளை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வரவேற்றுவரும் இவ்வேளையில், சற்றும் அதனை கருத்தில் கொள்ளாமல், அரசின் மீது அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சியுடன், உண்மைக்கு புறம்பாக, அரசின் வேளாண்மைதுறை சார்ந்த பணிகளை முடக்கும் வகையில், சோர்வடையச் செய்யும் முயற்சியாக்க நினைப்பவர்களின் எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது!

. இது முதல்வர் தளபதியாரின் தலைமையில், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசு,! வேளாண்மக்களுக்காக தனது 'பணிகளை சோர்வின்றி தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தும், அரசையோ, வேளாண் - உழவர் பெருமக்களை தங்களின் சுயநலஅரசியலுக்காகவும், அரசியல் இருப்பை காட்டிக்கொள்ள நினைக்கும் நயவஞ்ச எண்ணங்களை
பயன்படுத்த நினைப்பது
ஒருபோதும் நிறைவேறாது.!
கடந்தகாலங்களில் வேளாண் - உழவர் நலத்துறையின், ஆக்கப்பூர்வமான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன் விவசாய பெருமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. அப்போது இது குறித்து பி.ஆர் பாண்டியன் எந்தவிதமான, வேளாண் - உழவர் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான திட்டக் கருத்துக்களை தெரிவிக்காமல் மெளனம் காத்து, எவ்வித கருத்துக்கலும் கூறாமல் இருந்துவிட்டு, விவசாயமே பார்க்காத ஒருவர் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக் கூறுவது என்பது ஏற்புடையதல்ல
இவ்வாறாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்......




Comments