top of page
Search

தமிழகத்தில் நாளை மருத்துவர்கள் தேர்வு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 24, 2023
  • 1 min read
ree


அரசு மருத்துவர் பணி: 1,021 இடங்களை நிரப்ப நாளை எழுத்துத் தேர்வு!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி)மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி வெளியிட்டது. ஆன்லைன் முறையில் அதற்கான விண்ணப்ப பதிவு www.mrb.tn.gov.in இணையதளத்தில் உடனடியாக தொடங்கி, அக்.25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. எம்பிபிஎஸ் முடித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் விண்ணப்பித்தனர்.

கணினி வழி எழுத்து தேர்வை கடந்த ஆண்டு நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது. நிர்வாக காரணங்களால் இத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி (நாளை) நடக்க உள்ளதாக. மருத்துவ வட்டாரத்தகவல்கள் கூறுகின்றன.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page