அகற்றப்பட்ட மதுக்கடை வேண்டவே,வேண்டாம்! தென்காசி அருகே எதிர்க்கும் மக்கள்!!
- உறியடி செய்திகள்

- Apr 29, 2023
- 1 min read

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அடைக்கப்பட்ட அரசு மதுபான கடையை மீண்டும் திறக்க கூடாது என பொதுமக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெய்க்கால்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடை சில தினங்கள் முன்பு அடைக்கப்பட்டது. மது கடை குறைப்பு திட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதாக தகவல் பரவியதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்று மதுக்கடையை திறப்பதாக தகவல் பரவியது
இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் திரண்டு அடைக்கப்பட்ட மதுக்கடையை திறந்தால் வெய்க்கால்பட்டி மது கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்ததை அடுத்து அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திவாகரன். தென்காசி




Comments