அடிமை தலையை அறுத்தெறிந்த ஆதவன் டாக்டர் அம்பேத்கார்! சிலை திறந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!
- உறியடி செய்திகள்

- Oct 27, 2022
- 1 min read

சென்னையில் அண்ணல் டாக்டர் அம்பேத்கார் முழு திருவுருவச்சிலையை திறந்துவைத்து புகழாரம் சூட்டினார்.....
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஏப்.14.அன்று பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலை நிறுவுவதற்காக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மே.14. அன்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்ட அண்ணல் சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக்.27. ந் தேதி, வியாழக்கிழமை,திறந்து வைத்தார்......

நிகழ்ச்சியில், தி.மு.கழக பொதுச் செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, கழக உயர்மட்ட செயல்திட்டக்குழுக்குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட செயலாளர்,உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.கழக,செயலாளர் பி.கே. சேகர்பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், ஆர். கிரிராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, த. வேலு, சிந்தனைச் செல்வன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ். பாலாஜி, எம். பாபு, ஜெ. முகம்மது ஷா நவாஸ், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்......

இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறியாமை இருள்போக்க வந்த அறிவுப் போராளி, அடிமைத் தலையை அறுத்தெரிந்த ஆதவன் சட்டமாமேதை, அண்ணல் டாக்டர் பாபா சகேப் அம்பேத்கார் என்று, தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.




Comments