தூத்துக்குடியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்! கனிமொழி கருணாநிதி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்!!
- உறியடி செய்திகள்

- Apr 30, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா...
தூத்துக்குடியில் போதை விழிப்புணர்வு மாரத்தான்;
கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்...
தூத்துக்குடி - தருவாய் மைதானத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் பன்னாட்டு ஜூனியர் சேம்பர் தூத்துக்குடி ஹெர்குலேனியம் எலைட் இணைந்து போதைப் பொருள் எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் என்ற தலைப்பில் நம்ம தூத்துக்குடியின் பெருநடை என்ற பெயரில் மாரத்தான்,மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இன்று ஏப்.30. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது...

முன்னதாக, தி.மு.கழகத் துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் குழுத்துணைத் தலைவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி போட்டிகளை கொடியசைத்து துவக்கிவைத்தார்.....

இந்த போட்டியில் நிபந்தனைகளுக்குட்பட்ட ரூபாய் ஓரு லட்சம் அளவிலான பணப் பரிசுகளும் பதிவு செய்த அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், சான்றிதழ், கிட்பேக் மற்றும் கூல்டிரிங்ஸ் வழங்க வழங்கப்பட்டது.. இதுபோன்று போதை பொருள்களுக்கு எதிராகவும், போதைப் பொருட்க்கள் நமக்கு வேண்டாம் என்ற கொள்கையோடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




Comments