தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால், 41. பேர் கொல்லப்பட்டது வேதனை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Mar 23, 2023
- 2 min read

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் கொல்லப்பட்டு, பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் வேதனை பேச்சு!!
ஆன்லைன் மரண விளையாட்டை ஒழித்துக் கட்டும் மசோதாவை சட்டப்பேரவையில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளார்.....
தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் 19.10.22 அன்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கழித்து 06.03.23 அன்று, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுனர் ஆர்.என்.ரவி.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு முதலாளிகளிடம் 142 நாட்கள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான,ஆளுனர் ரவி, 142 நாட்களுக்கு பிறகு மாநில அரசிற்கு இந்தச் சட்டத்தை நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்பது போன்ற ஏனோதானோ என்கிற காரணங்களை முன்வைத்து, ஆன்லைன் மரண விளையாட்டு தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்.

சூதாட்ட முதலாளிகளோடு ஆலோசனை என்கின்ற பெயரில் காலம் தாழ்த்தப்பட்ட அந்த இடைப்பட்ட காலகட்டங்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்கள் 47 பேர் என்கிறது அரசின் புள்ளிவிபரம்.
பாமரர்கள், படித்தவர்கள், வங்கி அதிகாரிகள் என பலரும் இதற்கு அடிமையாகி குற்ற செயல்களும் அதிகமாகி பல குடும்பங்கள் சீரழிந்து தெருவுக்கு வருகின்றன என்கிற கடுமையான குற்றச்சாட்டுகளும் இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இது போன்ற கொடூரமான சம்பவங்களை அறிந்தும், எள்ளளவும் அதனைகண்டுகொள்ளாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டு முறை திருப்பி அனுப்பினார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்ற அப்பட்டமான உண்மை க்கு மாறான தவறான தகவல்களையும் கூறினார் என்கிற குற்றச்சாட்டும் கடுமையாகவே பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த ஆர்.என்.ரவியால் குறைகூறப்பட்டதற்கு உரிய விளக்கமளித்து
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.....
ஆன்லைன் சூதாட்டத்தால் 41 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்"
கனத்த இதயத்துடன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்
"என் தற்கொலை கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார்"
தற்கொலையை தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசிடம்தான் உள்ளது. மனசாட்சியைஎமறந்துவிட்டு, எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று குறிப்பிட்டு மிகவும் வேதனையோடு-உருக்கமுடன் பேசினார்.

_ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு உரியமுறையில் விரிவான விசாரணையை தொடர்ந்து, அதன்படிஉரிய ஆதாரங்கள், ஆவணங்கள்மீண்டும்
பேரவையில் மசோதாவாக நிறைவேற்றி ஆளுநருக்கு அமைச்சரவை அனுப்புவது, தற்போது இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது இந்திய அரசியல் அமைப்புசட்டம் விதி என்பதால் தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் திறனாய்வு வாளர்களால், நடுநிலையாளர்களால்
பார்க்கப்படுகிறது...




Comments