கர்நாடாக தேர்தல்! மக்கள் புறம்தள்ளிய பா.ஜ.மாஜிக்கள்!!
- உறியடி செய்திகள்

- May 14, 2023
- 1 min read

மக்கள் புறம்தள்ளிய கர்நாடக அமைச்சர்கள்!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பாலான பா.ஜ., அமைச்சர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர்.டி.கே.சிவக்குமார் வெற்றி, அமைச்சர் தோல்வி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கனகபுரா தொகுதியில் பா.ஜ., அமைச்சர் அசோகாவை எதிர்த்து போட்டியிட்டார்.
இதில், சிவக்குமார், 1,43,023 ஓட்டுகள் பெற்று வெற்றிப்பெற்றார். மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் நாகராஜூ 20,631 ஓட்டுகளுடன் 2ம் இடமும், அசோகா வெறும் 19,753 ஓட்டுகளுடன் 3ம் இடமும் பெற்றனர். இதனையடுத்து 1,22,392 ஓட்டுகள் வித்தியாசத்தில் டி.கே.சிவக்குமார் அமோக வெற்றிப்பெற்றார். இந்த தொகுதியில் சிவக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

அமைச்சர் பசவனகவுடா பாட்டீல் ஹிகரெகெரூர் தொகுதியில் போட்டியிட்ட பசவனகவுடா பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 15 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அமைச்சர் எஸ்டி சோமசேகர் பெங்களூரில் உள்ள யஷ்வந்தபுரத்தில் போட்டியிட்ட அமைச்சர் எஸ்டி சோமசேகர், 1,69,149 ஓட்டுகள் பெற்று வென்றுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் ஜவராயி கவுடா, 1,54,031 பெற்று தோல்வியடைந்தார்.அமைச்சர் மாதுசாமி தும்கூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியில் போட்டியிட்ட அமைச்சர் மாதுசாமி, ம.ஜ.த வேட்பாளர் சி.பி.சுரேஷ் பாபுவிடம் 10 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அமைச்சர் சுதாகர் சிக்பள்ளாப்பூரில் களமிறங்கிய அமைச்சர் சுதாகர், 38 வயதான காங்., வேட்பாளர் பிரதீப் ஈஸ்வரிடம் சுமார் 11,159 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அமைச்சர் நாராயண கவுடா மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் நாராயணகவுடா, 38 ஆயிரம் ஓட்டுகளுடன் 3ம் இடத்தை பிடித்தார். 80 ஆயிரம் ஓட்டுகளுடன் ம.ஜ.த வேட்பாளர் எச்.டி.மஞ்சு வெற்றிப்பெற்றார்; 58 ஆயிரம் ஓட்டுகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் தேவராஜா 2ம் இடம் பிடித்தார்.அமைச்சர் ஞானேந்திரா திரிதா ஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஞானேந்திரா 12 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

சி.டி.ரவி தோல்வி பா.ஜ., மூத்த தலைவரும், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளராகவும் உள்ள சி.டி.ரவி, சிக்கமகளூரு தொகுதியில் காங்., வேட்பாளர் தம்மையாவை எதிர்த்து போட்டியிட்டார். அதில் காங்., வேட்பாளரிடம் 8000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் சி.டி.ரவி தோல்வியடைந்தார்.
படம். நன்றி நக்கீரன்.




Comments