அமலாக்கத்துறையினர் அத்துமீறல்! செந்தில் பாலாஜி கூறினார்! மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தகவல்!
- உறியடி செய்திகள்

- Jun 16, 2023
- 2 min read

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மனித உரிமை மீறல் செயலில் ஈடுப்பட்ட அமலாக்கத்துறையினர்!
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் கண்ணதாசன் விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்!
திமுக இந்த வழக்குக்காக குற்றம் சொல்லி 7 ஆண்டுகள் ஆச்சு. கீழ் கோர்ட்லே இந்த வழக்கையே அதிமுக அரசு நடத்தவில்லை.
கட்சி உடைந்தபோது செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் பக்கம் போனதால், எரிச்சலடைந்த எடப்பாடி இந்த வழக்கை தூசி தட்டி எடுத்தார். உயர்நீதி மன்றத்தில் போய் செந்தில் பாலாஜி முடிவுக்கு கொண்டு வந்தார். காலமாற்றம், அரசியல் மாற்றங்கள் நேர்ந்தது.
அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடித்ததால் செந்தில் பாலாஜி மீதுஅண்ணாமலை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அவரை குறிவைத்து தனது அதிகார அரசியல் செல்வாக்கால் பலவழிகளிலும் முயன்று வந்தார்.கரூர் அரசியல் மாறுகிறது.
அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த மோதல்கள் வெளிப்படையானது. நாடு அறிந்த ஒன்று.
அதே பழைய வழக்கு இம்முறை உச்சநீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றமும் வழக்கை முடிக்க இரண்டு மாதங்கள் கெடு விதித்தது.
அந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறப்படுகின்ற நிலையில், இப்போது கண்ணுக்குத் தெரியாத முகாந்திரத்தைக் கொண்டு அமலாக்கத்துறை யை வழக்குக்குள் கொண்டு வந்து அரசியல் பகடை காய் ஆட்டம் ஆடுகின்றனர்.
ஆருத்ரா, ஐ.எல்.எப்.எஸ்.(ILFS) என நிதிநிறுவன மோசடிகளில் பல ஆயிரம் பேர் பல ஆயிரம் கோடிகளை இழந்து நிற்பதை விட இது பெரிய வழக்கு கிடையாது !
மோசடியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் நாட்டை விட்டு வெளியே சென்றுள்ளது.
அதேசமயம் சமீபத்தில்,மைனர் பொண்ணு வீடியோ வெளியிட்ட அண்ணாமலை இன்னும் கைது ஆகல.
கொட நாடு கொலை வழக்கில் எடப்பாடியும், சகாக்களும் இன்னும் கைது ஆகல.
2000 கோடி ஆருத்ரா மோசடியில்
அமர் பிரசாத்
இன்னும் கைது ஆகல.
ஊழல் வழக்கில் வேலுமணி & தங்கமணி இன்னும் கைது ஆகல.
பா.ஜ.க. வானதி சீனிவாசன் வீட்டுல லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு போகல.!
டவுசர் காந்தி வீட்டுல ரெய்டு போகவே இல்ல.
எச் . ராஜா வன்முறை பேச்சு வழக்கில் கைது ஆகவே இல்ல.
தேசத்துரோக வழக்கில் சிக்கிய சீமான் இன்னும் கைது ஆகல.
அதற்கெல்லாம் வராத அமலாக்கத்துறை, இப்போதுஉள்ளே வந்து நடத்தும் நாடகங்களை, ஏற்படுத்த முயலும் அரசியல் சூதாட்டங்களை நாட்டு மக்கள் கவனிக்கின்றனர்.
என்கிற குற்றச்சாட்டுகள் பரபரப்பாகி வருகின்றது.

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் மூத்தவழக்கறிஞர் கண்ணதாசன் கூறுகையில்
தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்!
.
அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார்
தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
பெறப்பட்ட புகார்கள். அடிப்படையில் நேரில் விசாரித்தேன் -

தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்"
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும்"
மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது"
தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாக செந்தில் பாலாஜி கூறினார்.
இவ்வாறுமாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கூறினார்.




Comments