ஆங்கிலபுத்தாண்டு. அண்ணா,கலைஞர் நினைவிடங்களில்முதல்வர்.மு.க.ஸ்டாலின்மரியாதை அமைச்சர்களும் பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Jan 2, 2023
- 2 min read




மணவை,எம்.எஸ்.ராஜா
ஆங்கில புத்தாண்டையொட்டி மு.க.ஸ்டாலின். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு.
ஆங்கில புத்தாண்டு நேற்று தொடங்கியது, தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மறைந்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் நினைவிடங்கள் உள்ள மெரினா கடற்கரைக்கு சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.நேற்றையதினம் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் தலைமை நிமிர்ந்த தமிழகம் மனம் குளிருது தினம்தினம் எனும் பொன்மொழிவாசங்கள் வண்ண, வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தது..
தி.மு.கழக முதன்மைச் செயலாளர் சேலம் மண்டல பொருப்பாளர் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மாவட்ட தி.மு.கழக செயலாளர்,இந்து அறத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் சென்று மரியாதை செலுத்தி வணங்கினர்கள்,......






முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினை, பொதுச்செயலாளர். நீர்வழி-கனிமவளத்துறை அமைச்சர் துரை- முருகன், முதன்மைச்செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர், அமைச்சர் ஐ.பெரியசாமி. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடலூர் (கி)மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தி - விளம்பரத்துறை அமைச்சர், மு.பெ.சாமிநாதன்.பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர். தமிழக சமூகநலத்துறை-பெண்கள் நீதித்துறை அமைச்சர்.பெ.கீதாஜீவன்.சிறுபான் நலத்துறை அமைச்சர் மஸ்தான். கைத்தறித்துறை அமைச்சர். எம்.ஆர்.காந்தி.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஈரோடு மாவட்ட தி.மு. கழகச் செயலாளர், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..விருதுநகர் மாவட்ட செயலாளர், வருவாய்துறை அமைசர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கரூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், மின்சாரம் - மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி..செந்தில்பாலாஜி. உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களும். தி.மு.கழக பொருளாளர். பாராளுமன்ற தி.மு.கழக,உறுப்பினார்கள் குழுத் தலைவர்.டி.ஆர் பாலூ




துணைத்தலைவர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர்கனிமொழி கருணாநிதி, பாராளுமன்ற உறுப்பினர்கள். ஜெகத்ரட்சகன், பி.வில்சன். தமிழச்சி தங்கபாண்டியன்.தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர். ஆ.ராசா.அரசு,தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு,உள்ளிட்ட கூடுதல் தலைைமை செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்திகுறிப்பில் புதியதொரு விடியல் புலந்தது புத்தாண்டு! கழக உடன்பிறப்புகள் நண்பர்கள் - பொதுமக்கள் என்று காலை முதல் அன்பொழுக வாழ்த்துக்களை பகிரும் நல் உள்ளங்கள் வாழ்த்துக்களை பெறுகிறேன். இந்நன் நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்! அனைத்து வளங்களும் மகிழ்ச்சியும் அனைவரின் வாழ்வில் பொங்க என்று ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்களை ஏற்றும். பகிர்ந்தும். அவர் கூறியுள்ளார்...

தி.மு.கழக இளைஞரணி செயலாளர் தமிழக விளையாட்டு-இளைஞர் நலன் , சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கழக உடன்பிறப்புகள். உள்ளிட்ட அனைவருக்கும். ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தி.மு.கழகமுதன்மைச் செயலாளர.சேலம் மண்டல பொருப்பாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. தனது இணையதள பக்கத்தில்....
கழக ஆட்சியில், புதிய நம்பிக்கையும், உற்சாகமும், பெருக்கெடுக்க.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும். ஆரோக்கியமும் நிலைத்திருக்க அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கழகத்தின் வழி கண்டு தளபதியின் துணைகொண்டு புதிய ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக சமூக நலன். மகளீர் உரிமை த்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தனது இணைய பக்கத்தில்....
கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் யாவும் வெற்றிகலாய் மலரட்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்வாழ்த்துக்கள்.




Comments