ஈரோடு; புதிய உறுப்பினர் சேர்ப்பு! பொருப்புணர்ந்து தீவிரபடுத்துவோம்! அமைச்சர் சு.முத்துசாமி பேச்சு
- உறியடி செய்திகள்

- Apr 4, 2023
- 1 min read


ஈரோடு, தி.மு.கழக புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியில், கழகத் தலைவர், நம் முதல்வர் தளபதியாரின், அறிவுறுத்தல், ஆலோசனைகளின்படி, பொருப்பும் - கடமையும் உணர்ந்து செயல்படுவோம் என்று மாவட்ட செயலாளர், அமைச்சர் சு.முத்துச்சாமி பேசினார்....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.தி.மு கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டுவிழா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வாக்குசாவடி குழுக்கள் அமைப்பது தொடர்பான ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு மாநகரம், கொல்லம்பாளையம்பகுதி கழகம்சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் (4-4-2023 மதியம் 1.00மணிக்கு) மூலப்பாளையம் ரோடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர். தமிழக வீட்டுவசதி நகர்புற துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துச்சாமி, தொகுதி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில், உறுப்பினர் படிவங்களை வழங்கியதுடன், புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியை தொடங்கிவைத்து, பணிகளை தீவிரப்படுத்தினார்....
அப்போது நிகழ்வில் பேசிய அமைச்சர் சு.முத்துச்சாமி .....
தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் திராவிட இனத்தையும், தமிழ்மொழியையும் காத்திட நமது கழகத் தலைவர், முதல்வர் தளபதி பல்வேறு பணிகளை அயராது, ஓய்வு, உறத்தமின்றி செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.....
நமது தலைவர் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணிகளில், ஓய்வு உறக்கம் மறந்து, பொருப்புணர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த கடமையுடன், அர்ப்பணிப்புடன் அனைவரும் தீவிர பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எனவே கழகத்தலைவர், முதல்வர் நம் தளபதியாரின் வழியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியை அனைவரும் தீவிரப்படுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.


இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர் அழகிரி சதாசிவம் , ஈரோடு மாநகராட்சிமேயர் .S. நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், கொல்லம்பாளையம் பகுதி கழக செயலாளர் K. லட்சுமணக்குமார், மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதிகழக, வட்ட கழக, நிர்வாகிகள், மகளிர் அணியினர், சார்பு அணிகளை சார்ந்தவர்கள் பாகமுகவர்கள் கலந்துகொண்டனர்.....




Comments