ஈரோடு: அண்ணா பிறந்தநாள் ! மகளீர் உரிமை தொகை தொடக்கவிழா! அமைச்சர் சு.முத்து சாமி பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Sep 15, 2023
- 1 min read

மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜா.....
ஈரோடு: இன்று.அண்ணா பிறந்தநாள் ! மகளீர் உரிமை தொகை தொடக்கவிழா! அமைச்சர் சு.முத்து சாமி பங்கேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மகளீர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.!
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கதளபதி மு. க .ஸ்டாலின் வழிகாட்டல்களோடு அறிவுலகஆசான் பேரறிஞர் பெருந்தகை, அறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக இன்று செப்.15ந் தேதி காலை 10 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.!
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தினரால், பன்னீர்செல்வம் பூங்காவில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட விழாவில், மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, மதுவிலக்கு - ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்களை தூவியும் மரியாதை செய்தார்.!

தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க .ஸ்டாலினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞர்மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தினை துவங்கி வைத்து வங்கியின் பற்று புத்தகங்கள் வழங்கும் பணிகளையும் தொடங்கிவைத்தார்.!
அதனை தொடர்ந்து முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களின்படி.....

ஈரோடு திண்டல் வேளாளர் மகளீர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலைஞர் மகளீர் உரிமை தொகை வழங்கும் திட்ட விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், சு. முத்துசாமி கலந்துகொண்டு திட்டப் பயணாளிகளுக்கு மகளீர்உரிமை வழங்கும் பணிகளையும் துவங்கி வைத்து, தி.மு.கழக அரசின், மக்கள்நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.!

ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர். ப. செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி .வெங்கடாஜலம் , ஈரோடு மாநகராட்சியின் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , துணை மேயர் V.செல்வராஜ் ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி துணைத்தலைவர் கஸ்தூரி மற்றும் மாவட்ட நிர்வாக அரசு அதிகாரிகள். மற்றும் மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்துறை சார்ந்த அதிகாரிகள், தி.மு.கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.




Comments