ஈரோடு: கலைஞரின் நூற்றாண்டுவிழா!அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.வினர் தீவிர ஏற்பாடு!
- உறியடி செய்திகள்

- May 29, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
மாவட்டத்திற்குட்பட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில், நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில், மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் கலந்துகொண்டு பிறந்தநாள் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைகள் - வழிகாட்டல்களை வழங்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி தீவிரப் பணிகளை முன்னெடுக்கச் செய்துவருவது குறிப்பிடதக்கதாகும்!
வருகின்ற ஜூன் 3ந் தேதி, தி.மு.கழகத் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி, ஆண்டு முழுவதும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா ஆண்டாக கொண்டாட தலைமை கழகம் அறிவுறுத்தியதின்படி, அனைத்து மாவட்டங்களிலும்,கவிஞரங்கம், பேச்சரங்கம்,பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னெடுப்பதில் மிகுந்த தீவிரம் காட்டி முனைப்புடன் செயல்பட தொடங்கிவிட்டனர் தி.மு.கழகத்தினர் என்றேதான் கூறவேண்டும்.

இதில் கிளை, பேரூர்,ஒன்றிய, நகர, மாவட்ட கழகங்கள் இடையே முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்ததின ஆண்டு நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்துவதில் இப்போதிலிருந்தே கடும் போட்டி கட்சியினரிடையே ஏற்பட்டு, அதற்கான முன்னெடுப்புகளையும் தீவிரமாக செய்திட தொடங்கிவிட்டனர் என்றால் அது மிகையாகாது!
இந்நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகமும் எந்த வகையிலும் சளித்த மாவட்டமல்ல! என்கிற வழியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை மாவட்ட தி.மு.கழக செயலாளர்தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் ஆலோசனைகள் அறிவுறுத்தல்களின்படி முன்னெடுத்து, தீவிரம் காட்டி நடைப்பெற்று வருகின்றது.

கழக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது!
தி.மு.கழக தலைமைக்கழக ஆணைக்கு இணங்க ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் . சு. முத்துசாமி வழிகாட்டுதலின் பேரில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கழகம் , தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியாக இன்றைய அரசியல் சூழலில் தி.மு.கழகத்தின் மீது பற்றுக் கொண்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அவர்களது பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பயிற்சி பட்டறை சட்டமன்றதொகுதி வாரியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இளைஞர் அணி, மாணவர் அணி, பொறியாளர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி தோழர்கள் மகளிர் அணி சகோதரிகள் மற்றும் விருப்பமுள்ள கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.




Comments