top of page
Search

ஈரோடு இடைத்தேர்தல்! தோல்வி பயத்திலா! எடப்பாடி வரம்புமீறிய விமர்சனம் !! கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 20, 2023
  • 2 min read
ree

'

ree
ree

மணவை, எம்.எஸ்.ராஜா


மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் நேருக்கு நேர் மோதிபார்! என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி பயத்திலும், விரத்திலும் பேசிய எடப்பாடி பழனிச்சாமியை தி.மு.கழக நிர்வாகிகள் மட்டுமின்றி, சமூகவளைதளங்களிலும் கலாய்த்து, பழனியின் கடந்த காலங்களை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து தொங்கவிடும்வகையில் சமூக வளைதளங்களில் பதிவுகளும். மீம்ஸ்களும் வைரலாகி வருவதை அதிக அளவில் பார்க்க முடிகிறது.

அந்தவகையில், நமது பார்வையில் சிக்கிய ஒரு பதிவை இங்கே மறுபதிவு செய்துள்ளோம்....

என்ன எடப்பாடியாரே..! 1976 பிப்ரவரி 1 இந்த தேதியை நினைவிருக்கிறதா? இல்லை அறிமுகபடுத்தவா? தமிழன்னை தவமிருந்து பெற்ற தமிழினத் தலைவர் கலைஞரின் தவப்புதல்வனாம் தளபதியை இந்திரா அரசாங்கம் கொடுமையான மிசா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. எல்லோரும் கலைஞரைத் தான் கைது செய்ய வந்துள்ளது காவல்துறை என தப்புகணக்கு போட்டனர். ஆனால், அவர்கள் தேடியது தளபதியாரை தான். என் மகன் மதுராந்தகம் சென்றிருக்கிறான் வந்தால் உங்களிடம் ஒப்படைக்கிறேன் என தலைவர் கலைஞர் கர்ஜித்தார். சென்னை திரும்பிய தளபதியார் அவர்களை காவல் ஆணையரிடம் ஒப்படைத்தார் தலைவர் கலைஞர். எங்கள் தளபதியார் ஒன்றும் பங்காளியை கொலைசெய்துவிட்டு சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் ஓடி ஒளியவில்லையா?.


அப்போதைய (1980) போக்குவரத்து துறை அமைச்சர் , தற்பேதயா.. ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர்.சு..முத்துசாமி அவர்களின் தயவால் காவல்துறையிலிருந்து தப்பிக்கவில்லை. வெல்ல மூட்டையை விற்று அப்பாவி கரும்பு விவசாயிகளை ஏமாற்றவில்லையா?. கொடநாடு கொலைகளை நிகழ்த்தவில்லையா?. யாரை சொல்கிறோம், விமர்சனம் செய்கிறோாம் என்று நினைத்து பாருங்கள்.. உங்கள் வரலாறு யாது என்பது எங்களுக்கும் தெரியும். உங்களைப் போன்று அடிமை சாசனம் எழுதி கொடுத்து சசிகலாவின் காலை பிடித்த முதல்வரானவர் அல்ல தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதியார்.

கோபாலபுரத்திலிருந்து புறப்பட்ட ஒரு அம்பு ஆயிரம் விளக்கை தொட்டு கொளத்தூர் வழியாக இன்று இந்திய பாரதத்தின் பிதாமகனாக ஒளிர்விட்டு நிற்கிறது. மிசா காலத்தில் கொடுமைகளை அனுபவித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரக் குரலான "மொழி காப்பு, இனமீட்பு" என்ற ஒன்றை மட்டும் நிலைநிறுத்தி அறைநூற்றாண்டு தமிழக தலைப்புச் செய்தியாக வலம் வருகிறார் தளபதி முதல்வர் மு.க.ஸ்டாலின்.


மாநகராட்சின் மாமன்றம் தொடங்கி மாநிலத்தின் முதல்வர் என பல பதவிகளை அலங்கரித்து எதிர்வரும் 2024ஆம் ஆண்டின் இந்திய திருநாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் , மாபெரும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார். மேலும், மக்களின் தேவையை உணர்ந்து பல திட்டங்களை, ஒன்றிய அரசும், பிற மாநிலங்களும் பின்தொடரும் வகையில், தமிழ் மக்களின் தேவைகளையறிந்து திட்டங்களை தொகுத்து செயல்படுத்தி வரும்,தலைவராக அவரின் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுக் கொண்டிருகின்ற போது! யார் அடிமை? என்ற வாதத்தை நிகழ்த்தும் உங்களுக்கு ஏன் இந்த வாய் கொழுப்பு பழனிச்சாமி அவர்களே? எப்படி அடிமை சாசனத்தை கைப்பற்றாலாம் என்ற உணர்வோடு மட்டுமே பயணம் செய்யுங்கள். வெற்று உதாரகுணம் மற்றும் வாய் சவடால்களை திமுககாரனிடம் நிகழ்த்தினால் பழைய பழனிசாமி யார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவோம்! ஏனென்றால் தலைவர் கலைஞர் எங்களை ரத்தமும், வியர்வையுமாக குழைத்து உருவாக்கி வைத்து விட்டு தான் மறைந்திருக்கிறார்.

தந்தை பெ ரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைகளை செயல்படுத்தவே, தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசை தமிழ்நாட்டில் நிலைநிறுத்தி வருகிறார்.


எடப்பாடி நினைப்பதை போல, ஒன்றிய மாடல் அரசு-குஜராத் மாடல் அரசல்ல?

வெற்று சவடால் விட!


பா.ஜ.க.வின் தயவில் அர்ப்பத்தனமான, மலிவுஅரசியல் இங்கு வேண்டாம். தமிழர்களின் உணர்வோடும், சுயமரியாதை தன்மானத்தோடும் உரசி பார்ப்பது. எரிமலை அருகே செல்வதற்கு சமம் என்பதை இனியாவது,......


எடப்பாடி பழனி உணரட்டும்!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page