ஈரோடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா! அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு!!
- உறியடி செய்திகள்

- Apr 16, 2023
- 1 min read


ஆசிரியர், மணவை எம்.எஸ்.ராஜா.
ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த விழா, அமைச்சர் சு.முத்துச் சாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின்முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக ஈரோடு மாநகரம் சூரியம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 15 வது வார்டுக்குட்பட்டஅன்னை சத்யாநகரில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சியின் மேயர் . நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், திண்டல் குமராசாமி, ப.க.பழனிசாமி, சின்னையன், வீரமணி ஜெயக்குமார் , பகுதி செயலாளர் குமாரவடிவேலு, வட்ட கழக நிர்வகிகள், சார்பு அணியினர் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டார்கள்




Comments