top of page
Search

ஈரோடு: காங்கிரஸ் கட்சியினர், ராகுல் எம்.பி. தகுதியிழப்பை! கண்டித்து கண்டன ஆர்பாட்டம்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jul 8, 2023
  • 1 min read
ree

பத்திரிக்கையாளர் ராஜா...


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை அவதூறு வழக்கில் எம் பி பதவியை திட்டமிட்டு தகுதி இழப்பு செய்த பாஜக, மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...!


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களை அவதூறு வழக்கில் எம் பி பதவியை திட்டமிட்டு தகுதி இழப்பு செய்த பாசிச பாஜக மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று ஜூலை,08 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.!


மாவட்டத் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமையில் முன்னாள் மாவட்டத் தலைவர்களான ஈ.பி ரவி, ஈ.ஆர் ராஜேந்திரன், மண்டல தலைவர்களான ஆர்.விஜயபாஸ்கர், சசிகுமார், ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தொடங்கி வைத்து பாசிச பாஜக மோடி அரசின் ஜனநாயக அத்துமீறல்களை கண்டித்து கண்டன உரையாற்றினார்.!


மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்.

ஏ மாரியப்பன், வி கே செந்தில் ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில  துணைத்தலைவர் எம்.ஜவஹர் அலி, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் (TCTU) மாநிலத் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், ஐ என் டி யு சி மாநில பொருளாளர் என். துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர்களான எம் ஆர் அரவிந்தராஜ், வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ்,பாபு என்கிற வெங்கடாசலம் கே பி.கோதண்டபாணி பொதுச் செயலாளர்களான டி.கண்ணப்பன் எ.வின்சென்ட், ஏசி சாகுல் ஹமீத்,  சித்தோடு பிரபு தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜூபைர் அஹமது, காங்கிரஸ் சிறுபான்மை துறை  மாவட்ட துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் தீபா, சேவா தள மாநில மகளிர் அமைப்பாளர் எம் பேபி, என் சி டபிள்யூ சி மாநகர் மாவட்டத் தலைவி ஆர் கிருஷ்ணவேணி, ஈரோடு பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் கண்ணா, முன்னாள் ஈரோடு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் குப்பண்ணா சந்துரு, நிர்வாகி கே ஜே டிட்டோ, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் சிந்தன் நகர் குருசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் கே பி  சின்னசாமி, வார்டு தலைவர்களான சூரம்பட்டி விஜயகுமார், சம்பத் நகர் வேணுகோபால், மாவட்ட நிர்வாகிகளான சங்கு நகர் சதாம் உசேன், பாலதண்டாயுதம், ராஜாஜிபுரம் குமரேசன், சிவசங்கர், வேன் ராமசாமி, பிராமண பெரிய அக்ரஹாரத்தைச் சார்ந்த துல் பக்கர், எஸ்.ஜானகி, கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டர்கள்.!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page